தேதி: June 14, 2011
உபயோகமற்ற சீடி - 2
வெற்றுப் போத்தல் - 1
மணிகள் மற்றும் பழைய ஜூவல்ரி பிட்ஸ்
மூடியில் ஒட்டுவதற்கு சிறிய அலங்காரப் பொருள் ஒன்று
ட்ரில்லிங் மெஷின் & மெல்லிய பிட்
PVA க்ளூ
தோடு ஸ்டாண்ட் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். போத்தலையும், மூடியையும் சுத்தம் செய்து உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.

சீடிகளின் எழுத்துள்ள பக்கங்களில் மெலிதாக க்ளூ தடவி இரண்டையும் ஒட்டிக்காய விடவும்.

ஒட்டி வைத்திருக்கும் சீடியின் ஓரங்களை சுற்றி ஒரு செ.மீ இடைவெளியில் கவனமாகத் துளைகள் போட்டுக் கொள்ளவும்.

துளை போட்ட சீடிக்களோடு அடியின் நடுவில் போத்தல் மூடியைச் சேர்த்து ஒட்டவும்.

மேல் சீடியின் நடுவில் அலங்காரப் பொருளை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.

போத்தல் முழுவதும் மணிகள், ஜூவல்ரி பிட்ஸ் கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.

மூடியின் உள்ளே மெல்லிதாக க்ளூ தடவி போத்தலை மூடிக் காயவிடவும்.

தோடுகளை துளையில் சொருகி வைக்கவும். தோடுகளைத் தொலையாமல் வைத்துக் கொள்ள உதவும் இந்த ஸ்டாண்ட். ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கும் அழகு சேர்க்கும்.

அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த தோடு ஸ்டாண்ட்டை செய்து காட்டியுள்ளார்.

Comments
இமா
சூப்பர்!!! உங்க போட்டோவோட வேற வந்திருக்கா குறிப்பு.... கேட்கவே வேண்டாம்... கலக்கல். நல்ல கற்பனை உங்களுக்கு.... பார்க்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரொம்ப அழகான ஸ்டாண்ட் செய்து
ரொம்ப அழகான ஸ்டாண்ட் செய்து காமிச்சு இருக்கீங்க அக்கா சூப்பர். நீங்களும் உங்க பேக்ரவுண்டு ரொம்ப சூப்பர் by elaya.G
நான் இமாம்மாவ பார்த்தேன்
இமாம்மா என்னே உங்க கற்பனை இப்படிலாம் யோசிக்கிறீங்க சூப்பர் ஐடியா நல்லா செய்து இருக்கீங்கம்மா. ரொம்ப அழகா பேன்ஸியா இருக்கு பார்க்க. அதுல ஒரு க்ளாக் வச்சு இன்னும் அசத்திட்டீங்க. u r looking so cute
தோடு ஸ்டாண்ட்
இமாம்மா உங்க போட்டோவோட வந்த முதல் குறிப்பு இதுதான் நினைக்கிறேன். தோடு ஸ்டாண்ட் நல்ல ஐடியா. ரொம்ப அழகா இருக்கு. தோடு எல்லாம் காணாமல் போகாம இருக்க நான் திக்கான அட்டையில் சொருகி வைத்திருத்தேன். இப்ப உங்க க்ராஃப்ட் பார்த்தவுடன் உடனே செய்யனும் போல இருக்கு.
இமாம்மா
ரொம்ப ரொம்ப அழகான ஸ்டாண்டு செய்து வெளியிட்ட இமாம்மாவிற்கு வாழ்த்துக்கள்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
இமா
அப்படியே ஒரு ஒரு ஃபோட்டாவா பாத்துட்டு வந்தா பளிச்சுனு கடைசியில் ஒரு படம்.. தோடு ஸ்டாண்டையே பாக்க முடியலை போங்க. ரொம்ப ஸ்மார்ட் இமா ;)
ஸ்டாண்டும் சூப்பர் ஐடியா
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
தோடு ஸ்டாண்ட்
அன்பு இமா,
சூப்பரோ சூப்பர். இவ்வளவு அழகாக செய்து வைத்தால், இந்த ஸ்டாண்டுக்காகவே நிறைய தோடுகள் வாங்கணும்னு தோணும்.
சூப்பர்னு சொன்னது, உங்க ஃபோட்டோவையும் சேர்த்துதான்:) (கிட்டத்தட்ட நான் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரிதான் இருக்கீங்க, ஆனா ப்ளாக் அன் வைட்ல இல்லாம கலர்ஃபுல்லா):) புறா வளர்ப்பு பதிவு நினைவிருக்கா?
அன்புடன்
சீதாலஷ்மி
இமா மேடம்
இமா மேடம்,
தோடு ஸ்டாண்ட் அழகு உங்களை போலவே :-))
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
யாரு???
என்ன!!! இது இமாம்மாவா??? நம்பவே முடியல... இமாம்மா சொல்லுங்க உங்க பொண்ணு தானே இவங்க!!!
நான் இந்த ஃபோட்டோ பார்த்துட்டு பதிவு போடாம போக முடியல...
உங்க தோடு ஸ்டான்ட் சூப்பர் அதை விட நீங்க சூப்பரோ சூப்பர்.
இமா
இமா உங்க தோடு ஸ்டாண்ட் ரொம்ப அழகா இருக்குங்க,உங்க போட்டோவும் சூப்பர்......வாழ்த்துக்கள் இமா....
சூப்பர் இமா!
இமா,
உங்க தோடு ஸ்டாண்ட் ரொம்ப அழகா இருக்கு! நீங்களும் சூப்பரா இருக்கிங்க! அருமையான கற்பனைத்திறன் உங்களுக்கு, அழகா செய்திருக்கிங்க! பாராட்டுக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
தோடு ஸ்டாண்ட்,
இமா,
தோடு ஸ்டாண்ட் என்ற ஒன்றை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.நல்ல க்ரியேட்டிவிட்டி.பாட்டிலில் மணிகள்,ஜுவல்ரி பிட்ஸ் எல்லாம் போட்டு,பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.பாராட்டுக்கள்.
அப்பா! எவ்வளவு தோடு வச்சுருக்கீங்க!
இமா
செய்பொருள் அழகா? தொங்கவிட்டிருக்கும் காதணிகள் அழகா? :) ரசனையான உருவாக்கம் இமா..
நேர்த்தியான கைவண்ணம்.. துளைகள் கூட.. :)
இத்தனை நாட்கள் பிறை நிலவாயிருந்தது இன்று முழு நிலவானதோ? :))))
இப்படிக்கு,
சந்தனா
தோடு ஸ்டாண்ட்
சீடி வைத்து இன்னமும் வேற என்ன வித்தை எல்லாம் வெச்சிருக்கீங்க?
உங்களின் தோடுகளின் கலக்ஷனை பார்த்தாலே தெரியுது உங்களின் ரசனை ;)
இனி யாரும் இமா அம்மா என்றெல்லாம் கூப்பிட கூடாது...சொல்லிட்டேன் ஆமா....ரொம்ப அழகா இருக்கீங்க.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........
என்னோட தங்கை மாதிரி இருக்கீங்க...
ரொம்ப...ரொம்ப...ரொம்ப...அழகா இருக்(கீ)குங்க... அதெப்படி இன்னொருத்தரை அழகுன்னு சொல்றது... ஒரே பொறாமையா இருக்கு...
செபா அம்மாவும் இப்படித்தானோ? நலமாக இருக்காங்களா? விசாரித்ததாகக் கூறவும்.நன்றி.
இமா
ஏஹேய் இமா வின் முகம் கிடைச்சுடுச்சே...கம்மல் ஸ்டான்ட் எல்லாம் பின்ன பாக்கல்லாம் உங்களை பாத்த சந்தோஷம் தான் ஆஹா என்னமா ஸ்டைலா இருக்கீங்க..கம்மல் ஸ்டாட்ன்ட் சொந்த கற்பனையா அபார கற்பனை வளம் தான் உங்களுக்கு ..நல்ல ஐடியா
Imma
இம்மி, காதணி ஸ்டான்ட் அழகோ அழகு. ஆனால், இந்த சிடி லை துளை போடுறது தான் கொஞ்சம் டெரரா இருக்கு. இவ்வளவு காதணிகள் இருக்கா?? என்னிடம் இருந்த காதணிகளை யாருக்காவது கொடுத்து விடுவேன். இனிமே சேர்த்து இப்படி ஒன்று செய்துட்டு தான் மறுவேலை.
இமாவின் படம் சூப்பர்.
வாணி
நன்றி
இந்தக் கைவினைக் குறிப்பினைப் பாராட்டிக் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் என் நன்றி.
//கம்மல் ஸ்டாட்ன்ட் சொந்த கற்பனையா// ஆமாம் தளிகா. 'கம்மல் ஸ்டாண்ட்' கடைல வாங்கலாம். ஆனா இந்த ஸ்டாண்ட் என் சொந்த ஐடியா. இங்க பார்த்து இனி யாராச்சும் பண்ணா தவிர எங்கயும் காணமாட்டீங்க. :) போத்தல் உள்ளே இருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு நினைவு உண்டு. அதானால்தான் உடைந்து போனாலும் தூக்கிப் போடாமல் சேகரித்து வைத்திருந்தேன். மேலே இருக்கிற ஆர்னமெண்ட் செபா கொடுத்த பரிசு.
- இமா க்றிஸ்
இமா...
இமா, இது நீங்கள் தானே? ;-)
CD யில் ஓட்டை போட ஏதேனும் வழி கிடைத்தால் கட்டாயம் செய்கிறேன் :D
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து ;)
1. இல்லையே!! ;)))))))
2. வேறு வழி தெரிந்தால் சொல்கிறேன்.
3. :))
- இமா க்றிஸ்
இமா....
ஓஹோ அப்படி என்றால் இது இமா நம்பர் டூவா???? :D
என் கணவரிடம் எங்கிருந்தாவது ட்ரில்லிங் மெஷின் தயார் செய்து தர சொல்லி இருக்கிறேன்... பார்ப்போம்... கிடைத்தால், கட்டாயம் செய்து விடுவேன் :)
மிக்க நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
இமா அக்கா உங்களுடைய தோடு
இமா அக்கா உங்களுடைய தோடு ஸ்டாண்ட் அழகாக இருக்கின்றது.. நீங்களும் தான் ரொம்ப அழகு...
ஷாலி அருண்
Thodu stand
மிகவும் அருமை நடுவிலும் கொஞ்ச துளைகள் போட்டு கொக்கி இல்லாத தோடுகளை அடுக்கினால் இந்த நீட் இல்லாமல் போய்விடுமா இமா எனக்கு இன்னும் நிறைய வைக்க
தோடு ஸ்டாண்ட்
இப்போதான் கேள்வி கண்ணில் பட்டது சுரேஜினி.
//நடுவிலும் கொஞ்ச துளைகள்// போடலாம் சுரேஜினி. ஒடுக்கமான கழுத்தும் சின்ன மூடியும் கொண்ட போத்தலாக (சென்ட் போத்தல்) எடுத்தால் இடையிலும் துளைகள் போடலாம்.
- இமா க்றிஸ்