speech therapy

My son (5 yrs)have the problem of mild stammering and also he is very difficult to pronounce the low frequency letters(Ra, Sha, sa like that). How to rectify the problem? Is anybody suffering the same, please write their experience?

பதிவு தமிழில் இருந்திருந்தா எல்லாருக்கும் புரியும்... நிறைய தோழிகளின் பதிவும் கிடைக்கும்... மற்ற பாருங்க.

இது போல் எழுத்துக்கள் வராதவங்களுக்கு வாய்க்கு பிஸியோ கொடுக்க சொல்வாங்க.

1. ஊதுவது போல் செய்ய வைப்பது. ‘ஊ’ என ஊதுவது போல் வாயை குவித்தால் அந்த தசைகளுக்கு ஃப்லெக்சிபிலிட்டி கிடைக்கும். இதுக்கு நீங்க நீரில் பந்து, விளையாட்டு பொருட்கள் (மிதக்க கூடியவை) போட்டு ஊதி காற்றால் தள்ள வைக்கலாம்.

2. பற்களை கையால் அழுத்தி விடுவது. மேல் பல் கீழ் பல் எல்லாம் அப்படியே தாடையில் அழுத்தம் கொடுப்பது போல் அழுத்தி கொடுக்க வேண்டும்.

3. ஃபேஷியல் செய்யும் போது செய்வங்களே... அதே போல் உதட்டுக்கு மேலும், கீழும் இரண்டு விரல்களால் நீவி விட வேண்டும்.

4. கண்னத்தில் உள்ள தசைகளை நீவிஅந்த தசைகளுக்கும் ஃப்லெக்சிபிலிட்டி கிடைக்க செய்யணும்.

5. உணவு ஊட்டுவது வட்ட வடிவம் கொண்ட ஸ்பூன் கொண்டு வாயின் உள்ளே விட்டு உதடுகளை மூட செய்து ச்பூனை வெளியே எடுக்க வேண்டும்.

இவை எல்லாம் உதட்டுக்கும், வாயை சுற்றி உள்ல தசைகளுக்கு நல்ல ஃப்லெக்சிபிலிட்டி கிடைக்க உதவும்... இது தினமும் 3 முறை 15 நிமிடம் செய்தால் குழந்தைக்கு இது போல் உச்சரிக்க கடினமான எழுத்துக்கள் உச்சரிக்க வரும்.

பதிவை தமிழில் மாற்றுங்கள், தலைப்பையும் தமிழில் மாற்றுங்கள்... பலரும் பார்ப்பார்கள், பதிவிடுவார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்