பர்மிய நூடுல்ஸ் (லேத்தோ)

தேதி: June 7, 2006

பரிமாறும் அளவு: 4-5 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நூடுல்ஸ் - 4 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 2
முழு பூண்டு - ஒன்று அல்லது 10 பல் பூண்டு
முட்டை - 3
பெரிய தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை பழம் - பாதி
காய்ந்த மிளகாய் - 4
தண்ணீர் - 8 கப்
உப்பு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு


 

முதலில் 8 கப் தண்ணீரை கொத்திக்க வைக்கவும்
அதில் நூடுல்ஸை உடைத்துப்போட்டு 5 நிமிடம் வேக வைத்து, வெந்தவுடன் வடிகட்டி குளிர்ந்த தண்ணீரில் அலசி வடிகட்டி வைத்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் அரியவும். பூண்டை உரித்து மெல்லியதாக அரியவும். தக்காளி, பச்சை மிளகாயை அரியவும்.
அடுப்பில் பெரிய வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை லேசாக வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
அரிந்து வைத்த வெங்காயத்தில் பாதியை மொறு மொறுப்பாக வறுத்து எடுக்கவும்(கோல்டன் பிரவுன் நிறம்).
பூண்டு முழுவதையும் அதே போல் மொறு மொறுப்பாக வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் மிச்சமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றவும். 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
நூடுல்ஸ் போட்டு கிளறி, வறுத்த மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு போட்டு கிளறி, வறுத்த வெங்காயம், பூண்டு தூவி கிளறி இறக்கவும்.


இது எனது அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது. மிகவும் சுவையான நூடுல்ஸ் வகை இது. பர்மாவின் பாரம்பரிய உணவு வகைளில் ஒன்று.
நூடுல்ஸ் குழையாமல் இருக்க இறக்கியவுடன் பச்சை தண்ணீரில் அலசவும். மேலும் வேகும் போது கரண்டியால் பிரித்து விடவும். உப்பு போட்டும் வேக வைக்கலாம். மேகி, டாப் ரேமன் உபயோகப்படுத்தினால் அதில் உள்ள மசாலா பொடியை சேர்த்து கிண்டலாம். ஆனால் உப்பு குறைத்து போடவும். கருவுற்ற பெண்கள் இந்த பொடியை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. அஜினோமோட்டோ சேர்த்திருப்பார்கள். இந்த உணவை அறிந்தவர்கள் எலுமிச்சை, வறுத்த வெங்காயம், பூண்டை சாப்பிடும்போது அவரவர் தேவைக்கேற்பப போட்டு கொள்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi,

The recipe you gave for Laytho is completely wrong.This is a kind of salad type and you wont cook this.The big mistake is adding tomato in it, because this recipe is a dry concept.Please give us correct recipe.The recipe you given here is just indian fried noodle.

ஹாய் தேவா எப்படி இருக்கீங்க. பையன் நலமா? உங்க நூடுல்ஸ் செய்தேன் டேஸ்ட் சூப்பராக இருந்த்தது. போட்டோ எடுத்து வச்சிருக்கேன் அட்மினுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்க செய்வது போல இருக்கான்னு படத்தை பார்த்ததும் சொல்லுங்க. நான் மேகி உள்ள மசாலாவையும் சேர்த்து போட்டேன். நன்றாக இருந்தது. அம்மாவுக்கு எனது நன்றியை கூறவும்.குறிப்பு தந்ததுக்கு ரெம்ப நன்றி தேவா.

அன்புடன் கதீஜா.

எங்கள் குடும்பத்தில் இப்படித்தான் செய்வோம். நீங்கள் சொல்வது போல் அனைத்தையும் வறுத்து வைத்து பப்பாளிக்காய் மற்றும் முட்டைகோஸ் துருவி பிசைந்தும் சாப்பிடுவோம். என் அம்மா வழி சொந்தங்கள் இன்னும் பர்மா நாட்டில்தான் இருக்கிறார்கள். எங்கள் வீடுகளில் அத்தனை பர்மிய சமையல்களும் செய்வோம். நிச்சயம் எங்கோ படித்தோ, தப்பாகவோ சமையல் குறிப்புகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால் நான் செய்யாத சமையல் குறிப்புகளையோ மற்ற குறிப்புகளையோ நான் எழுதுவதோ பரிந்துரைப்பதோ இல்லை. என்ன் சமையல் குறிப்புகளையும் அழகுக்குறிப்புகளையும் படிப்பவர்களுக்கு அது தெரியும்.லேத்தோவை குக் செய்யாமல் பச்சையாக சாப்பிட மாட்டோம். நீங்கள் சென்னையில் பர்மா பசாரில் வேண்டுமானாலும் ட்ரை செய்து பாருங்கள். தக்காளி சேர்ப்பதால் நிச்சயம் தண்ணீராகவோ கிரேவியாகவோ மாறாது. ட்ரையாகத்தான் இருக்கும். தக்காளி பிடிக்காதவர்கள் அதிகம் லெமன் ஜூஸும் சேர்ப்பார்கள். இது நிச்சயம் இண்டியன் ஃபிரைட் நூடுல்ஸ் இல்லை. டீ இலை சேர்த்து செய்யப்படும் லப்பேயை அல்லது a thooke(salad) பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களோ என்றும் தோன்றுகிறது.

அன்புள்ள தேவா
உங்கள் நூடுஸ் செய்முறை முட்டைக்கு பதிலாக கேரட்,கான் போட்டு செய்து பார்த்தேன் மிகவும் டேஸ்ட்டியாக இருந்தது.இனி எங்க வீட்டில் இந்த முறைதான் செய்ய போகிரேன். .உங்களுக்கும் உங்க அம்மாவிர்க்கும் எனது நன்றி.

அன்புடன் பர்வீன்.

பர்வீன் பொறுப்பா இருக்கர மெம்பெர்ஸில் நீங்களும் ஒருவர்..வந்து அமைதியா பேசி எது செய்யனுமோ அது செஞ்சு நல்ல பொருப்பா இருக்கீங்க....என் நாத்தனார் இன் கனவர் போன முறை ஒரு நூடில்ஸ் செஞ்சிருந்தார் அது எனக்கு ரொம்ப புடிசுது...பிலிபினோஸ் டிருந்து கேட்டு செஞ்சார்னார்....செய்முறை எனக்கு விளங்கல...ஆனால் இதை படிச்சப்ப இப்படி தான் அதுவும் இருந்ததோன்னு சந்தேகம்..ஆனால் அதில் குடைமிளகாய்,உருளை கிழங்கு சேத்திருந்தது..நானும் செய்துட்டு சொல்றேன் தேவா

தேவா பேஷாக இருக்கிறது.சிறு தவறு செய்து விட்டேன் முட்டையை போட மறந்து விட்டேன்.முட்டையும் இல்லை ஆனால் பச்சை மிளகாய்க்கு பதில் குடைமிளகாய் போட்டதால் அதன் வாசனையும் இருந்ததால் தேவையிருக்கவில்லை.ஆனால் முட்டை இருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் இல்லையா.
பூண்டு வாசனை நன்றாக இருக்கிறது..எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தேவா..அதெப்படி நிறைய அந்நியநாட்டுவகை உணவு தெரிந்துவைத்திருக்கிறீர்கள்?

இந்த பின்னூட்டத்தையே இப்போதுதான் பார்த்தேன். செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி பர்வீன். நான் மன்றத்தில் மற்ற பதிவுகளுக்கு பதில் அளிப்பதால் சமையல் குறிப்புகளை எழுதியே நாளாகிவிட்டது என்று இன்றுதான் எழுத வந்தேன். இப்போதுதான் இந்த பின்னூட்டத்தையும் பார்த்தேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நானும் கேரட், குடைமிளகாய் போட்டு செய்து பார்த்திருக்கிறேன். கார்ன் போட்டு செய்ய மாட்டேன். ஒரு முறை செய்து பார்க்கிறேன்.