தேதி: June 17, 2011
சைனிங் சார்ட் பேப்பர் - விரும்பிய நிறம்
பெவிக்கால்
ஸ்டிக்கர்
கத்தரிக்கோல்
ரிப்பன் லேஸ்
பஞ்ச் மிஷின்
சைனிங் சார்ட் பேப்பர் இது ஒரு பக்கம் வெள்ளையாகவும், மற்றொரு பக்கம் கலராக க்ளாஸ் ஷீட் ஒட்டிய போல் வழவழப்பாக இருக்கும். ஏஞ்சல், பட்டர்ஃப்ளை, பூக்கள், ஹார்ட் டிசைன் போன்ற ஸ்டிக்கர்கள் ஸ்டேஷனரி பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. விருப்பமானதை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல் பேப்பரை 28 செ.மீ அளவில் சதுரத்துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பேப்பரின் ஒரு பக்க முனையை, எதிர்ப்பக்க முனையுடன் சேர்த்து மடக்கி வைக்கவும்.

முக்கோண வடிவில் இருக்கும் பேப்பரின் வலது பக்க முனையை இடது பக்கத்துடன் மடக்கி பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.

அடுத்து இடதுப்பக்க முனையை வலதுப்பக்கத்துடன் மடித்து அதன் ஓரங்களில் பெவிக்கால் தடவி ஒட்டி காயவிடவும்.

மேல் பக்கம் உள்ள இரண்டு பேப்பரை, முதலில் ஒரு பேப்பரை படத்தில் உள்ளது போல் மடக்கி வைக்கவும்.

அடுத்து ஒரு இன்ச் அளவு உள்பக்கமாக மடக்கி வைக்கவும்.

மீண்டும் ஒரு இன்ச் அளவு மடக்கி பெவிக்கால் வைத்து ஒட்டவும். மற்றொரு பக்கத்தை இதுப்போல் ஒட்டி முடிக்கவும்.

முக்கோணம் மடித்த பக்கத்தின் மேல் நீங்கள் விரும்பிய ஸ்டிக்கரை ஒட்டி அலங்கரிக்கவும்.

மடித்த பேப்பரின் பக்கத்தில் பஞ்ச் மிஷினால் ஓட்டையிட்டு, அந்த துளையில் ரிப்பன் லேஸை கோர்த்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். அழகான கிட்ஸ் பேப்பர் பேக் ரெடி. உள்ளே க்ரையான்ஸ், சாக்லேட் போட்டு கிஃப்ட் பேக்காவும் வழங்கலாம். குழந்தைகளை கொண்டு எளிதாக செய்யக்கூடியது.

Comments
டீம்ம்ம்
ஹை! சூப்பர். நான் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கப் போறேன்ன். பசங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். தாங்க்ஸ் டீம். ;)
- இமா க்றிஸ்
ரேவதி, பத்மா
சம சூப்பர். நல்ல கலர் சூஸ் பண்ணிருக்கீங்க. :) சுலபமா குட்டீஸ் செய்ய கூடியதாவும் இருக்கு. கியூட்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹை சூப்பர்!
ஈசி ஹேண்ட் வொர்க்., ரோஹித்துக்கும் சொல்லிக் குடுப்பேனே;)
Don't Worry Be Happy.
வாழ்த்துக்கள் டீம்...
வாழ்த்துக்கள் டீம்...ரொம்ப அழகா சிம்பிளா இருக்கு...