பொடி போட்ட கத்தரிக்காய் பொரியல்

தேதி: June 7, 2006

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - இருபத்தைந்து மி.லி
கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
வறுத்து பொடிக்க:
வர மிளகாய் - ஐந்து
கடலை பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
மிளகு - ஐந்து


 

கத்தரிக்காயை நீள நீளமாக நறுக்கி தண்ணிரில் போடவும்.
பொடிக்க வைத்துள்ள சாமான்களை எண்ணை விடாமல் சிவக்க வறுத்து சன்ன ரவை குருணை போல் பொடிக்கவும்.
வெங்காயத்தை மெலிதாக, நீளமாக வெட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கக்தரிக்காய் துண்டுகள், மஞ்சள் பொடி, உப்பு போட்டு அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும்.
கத்தரிக்காய் முக்கால் வேக்காடு வெந்ததும் பொடி பரவலாக தூவி ஐந்து நிமிடம் கிளறி இறக்கவும்.


கத்தரிக்காய் அதிகம் விதையில்லாத நீளக் காயாக இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

I tried this recipe. It turned out very nice. Thank you.

I tried this recipe. It turned out very nice. Thank you.