ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ஆஹா ஆஹா இன்ன்க்கி என்ன அரட்டை காலையிலேயே கலைகட்டுது. இதோ நானும் வந்துட்டேன்.

நல்ல இருக்கீங்களா என்ன சாப்டிங்க வீட்டில் அனைவரும் நலமா by Elaya.G

ரேனுகா, விவசாய நிலங்களாக இருந்தாலும் எங்கள் பகுதியில்தான் போர்வெல்கள் அதிகம் ஆயிரம் அடி ஆழத்திற்க்கும் அதிகமான போர்வெல்கள் இங்கே அதிகமாக போடப்பட்டுள்ளன. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஷேக்கு, வந்ததுமே ஆரம்பிச்சுட்டீங்களா... ஒரு கவிஞர் என்னை இப்படி கூப்பிட கூடாது. திருநாவு என்பது கவிஞர்களுக்கு மட்டுமே உண்டு... அவர்கள்தான் உலக மகா பொய்யர்கள்.

அன்புடன்
THAVAM

ரொம்ப நன்றி ஷேக்.

//நீங்க அங்கே போய் பார்க்க நாளாகும்// - இதெல்லாம் ஓவரா இல்ல??? நான் கூட நீங்க அங்க போட்டீங்களோ என்னவோ, நான் தான் பார்க்கல போலன்னு போய் தேடிபுட்டு வரேன்...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட அப்படி எல்லாம் இல்லை ஜெயா....
எனக்கும் உங்கள் பெயரில் ஒரு தோழி இருக்கிறாள். நானும் அவளும் சிறுவயது முதல்(நினைவு தெரிந்தது முதல்)தோழிகள் .ஒன்றாகப் படித்தோம்....இப்போது நம்பியூரில் உள்ளாள்.
நீங்க என்ன சமச்சீங்க? நானும் நில அதிர்விற்கு காரணமாக இதைத்தான் நினைத்தேன்.என் பதிவைப் பாருங்கள் தெரியும்.......
வேறு என்ன விஷேசம்.?

இளையா:

ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குசும்பு;) இப்பதான் ரம்யா கறிக்குழம்பு சாப்பிட்டேன் சாப்பிட்டேன்னு தம்பட்டம் அடிச்சு புகை வர வைச்சாங்க...நீங்க வேற என்னங்க மறுபடியும் அவங்ககிட்ட என்ன சாப்பிட்டீங்கன்னு கேக்கறீங்க...;-)

யாழு:

வாங்க வாங்க இரண்டுபேரும் சேர்ந்து இந்த அநியாயத்த பத்தி பேசுவோம்;-)

Don't Worry Be Happy.

அதான் கூவி கூவி சொல்லிட்டு போனாங்களே... கறிக்குழம்பு கறி வறுவல்ன்னு... அதென்ன “ரம்யா அக்கா.... என்ன சாப்பிட்டீங்க?”னு ஒரு கேள்வி??? அறுசுவையில் டாக் ஆஃப் தி டே ரம்யா சாப்பாடு தான்!!!

சரி தானே ரம்யா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பரவாலையே இன்னைக் அரட்டை கலை கட்டுதே

இளையா:
ரம்யாவிற்கு ரொம்ப நல்லா காதுகேட்கும் ,நீங்க அலறிய அலறலில் பயந்து போய் பார்த்தேன் என்னவோ,ஏதோன்னு.அட போப்பா.......
தவM அண்ணா:
சரியா சொன்னீங்க அண்னா ஷேக் நிறைய பொய் சொல்கிறார்.அவர்தான் திருநாவிற்கு அரசர்.....

ரேணூ... //எனக்கும் உங்கள் பெயரில் ஒரு தோழி இருக்கிறாள்// - இன்னைக்கு ஆரம்பிச்சது ரம்யா என்பதாலோ என்னவோ... இதை நான் படிச்சதே... //எனக்கும் உங்கள் பெயரில் ஒரு கோழி இருக்கிறாள்// என்று தான். எனக்கு என்னவோ ஆயிடுச்சு... காலையில் இருந்து எல்லாத்தையும் தப்பு தப்பாவே படிக்கிறேன். ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்