மெகந்தி டிசைன் - 12

தேதி: June 21, 2011

4
Average: 3.3 (18 votes)

 

மெகந்தி கோன்

 

முதலில் உள்ளங்கைக்கு கீழ் சங்கு ஒன்று வரைந்துக் கொள்ளவும்.
அந்த சங்கு மேல் வளைவு போல் வரைந்து கோடுகள் இட்டு நிரப்பவும். அதன் மேல் ஒரு வட்டம் வரைந்து சுற்றி ஐந்து இதழ்கள் வரைந்து உள்ளே கோடு இட்டு அழகுப்படுத்தவும்.
இதழின் மேல் மாங்காய் டிசைன் வரைந்து உள்ளே படத்தில் இருப்பது போல் வரைந்துக் கொள்ளவும். அதனை சுற்றிலும் இதழ்கள் வரையவும்.
அதன் மீது மேலும் ஒரு பூ வரைந்து வட்டத்தை கோடுகளால் நிரப்பவும். இதழின் சிறியதாக மூன்று, நான்கு கோடுகள் வரைந்துக் கொள்ளவும். அதன் மேல் வாத்து ஒன்று வரைந்து, கண் மூக்கு வரைந்து அழகுப்படுத்தவும். அதன் உள் சிறகிற்கு கோடுகள் இட்டு நிரப்பவும்.
வாத்தின் தலைப்பகுதிலிருந்து ஒரு கொடி ஒன்று வரைந்து ஆள்காட்டி விரல் வரை கொண்டு சென்று முடிக்கவும்.
மிகவும் எளிமையான மெகந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அருமைங்க... சுகி டிசைன் என்று நினைத்தேன்... பார்த்தா நீங்க. அசத்தலா இருக்கு. சுலபமான தெளிவான அழகான டிசைன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சங்கீதா சிம்பிளான டிசைன் உள்ளங்கையில் வரைந்தது டிசைன் அழகா இருக்கு.

மெகந்தி டிசைன் மிகவும் அருமை எனக்கு 2 பிள்ளைகள் எப்பவும் மெகந்தி போட சொல்லி ரொம்ப தொல்லை இந்த டிசைன் எளிமையா இருக்கு இதை பார்த்ததும் என் பொன்னு உடணே போட சொல்லி தொல்லை மாலையில் போட்டு விடனும் இல்லன்னா 2ம் என்னை வைக்காது அழகான டிசைன் வாழ்த்துக்கள்

அழகான் சிம்பிள் டிசைன்..எல்லாரும் இப்படி பார்லர் ஆரபிக்கும் பாணியில் அழகான டிஸைன்களை போடறீங்களே

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா, வினோஜா உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி பா... உங்கள் கருத்துக்கள் மேலும் உற்சாகத்தை அளிக்கிறது.மிக்க நன்றி....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

merzana,மிகவும் எளிமையான டிசைன் இது என்பதால்,குழந்தைகளுக்கு சுலபமாக போடலாம்.முயற்சித்து பாருங்கள்...

ஆமாம் ரம்யா. நிறைய கலைஞர்கள் அறுசுவையின் உதவியால் வளர்கிறார்கள்.... கருத்துக்களை பதித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

சிம்பிளா, அழகா இருக்கு சங்கீதா. பூவும் அதில உட்கார்ந்து இருக்கிற பறவையும் ரொம்ப நல்லா வந்திருக்கு.

‍- இமா க்றிஸ்

ரொம்ப பொறுமையா, அழகா ஒவ்வொரு டிசைனா போட்டுக்காட்டியிருக்கீங்க, டிசைனும் அழகா இருக்கு;)

இன்னும் நிறைய போட்டு அனுப்புங்க காத்திட்டிருக்கேன்;-)

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

இம்மா, உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி....
ஜெயலஷ்மி, உங்க பாரட்டுக்கு நன்றி..மேலும் நிறைய அனுப்ப நிச்சயம் முயற்சிக்கிறேன்..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

வாழ்த்துக்கள் சங்கீதா, அழகா போட்டு காட்டி இருக்கீங்க. இன்னும் நிறையா டிசைன் அனுப்பனும், நாங்க எல்லாரும் வைடிங் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி , நீங்களா? எப்படி இருக்கிங்க? உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி பா...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ஹாய் சங்கீதா உங்க டிசைன் சிம்பிளா, ரொம்ப அழகா இருக்கு.....வாழ்த்துக்கள் சங்கீதா.

உங்க டிசைன் நல்லா இருக்கு சங்கீதா!அதுவும் உங்கள் உள்ளங்கையில் இருக்கும் வாத்து டிசைன் அருமை!வாழ்த்துக்கள்

Eat healthy

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப நன்றி பா.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

இப்பவே உங்க வீட்டுக்கு வாரன் இந்த டிசைன போட்டு விடுங்க ரொம்ப நல்லாருக்கு.....வாழ்த்துக்கள்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

கண்டிப்பா வீட்டுக்கு வாங்க..அதவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கு..உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி பா...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

Akka unga megandi desgin symbly superb... na ippa kathudu irukken.. enakku maruthani pottukka romba pidikkum.. thanks akka

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

I JOINED TODAY.I SAW UR MEGANTHI,VERY NICE.

புன்னகை இப்போது தான் கத்துக்கிட்டு இருக்கிஙளா?அப்போ இது உங்களுக்கு ரொம்ப easy யா இருக்கும்.
santhanamari உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி பா....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"