சிலந்திகடிக்கு வீட்டு வைத்தியம் ;(

தோழிகளே.. பக்கத்து வீட்டுக்கு தோழிக்கு சிலந்தி ஒன்று கடித்துவிட்டது.. சிறிய செங்கலரிலான(ஆரஞ்சும் கலந்து) சிலந்தி தான்.. கடித்த இடத்தில் மஞ்சள் வைக்கச் சொல்லி வைத்துவிட்டார்.. சிறிய அரிப்பும் , மிக மிக சிறிய அளவில் எறும்பு கடித்ததை போல வீக்கமும் இருந்தது.. ஏதும் பயமில்லை போல தோன்றினாலும் கொஞ்சம் கலக்கமாகவே உள்ளது.இங்கே இந்த நேரத்தில் ஏதும் செய்ய முடியாது..

ஏதேனும் வீட்டு வைத்தியம் உள்ளதா? யாருக்கேனும் இப்படிப்பட்ட அனுபவம் இருந்ததா? உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. ;(

மூன்று மாதங்களுக்கு முன் எனது மகனுக்கும் சிலந்தி கடித்து அரிப்பு,எரிச்சல்,வீக்கம்,இருந்தது.கடித்த 5நிமிடத்தில் சின்ன வெங்காயத்தை கட் பண்ணி தேய்த்து விட்டேன்.வேறு பிரச்சனை ஏதும் இல்லை.ஆனால் சிலந்தி கடித்த இடம் கறுப்பாக இருக்கிறது.நாள்பட மாறும் என்று நினைக்கிறேன். மஞ்சளும் நல்ல மருந்துதான்.

radharani

3 நாளைக்கு நல்லெண்ணெய் 1 ஸ்பூன் குடிக்க கொடுத்து, கடி வாயில் தடவியும் விட்டா சரி ஆகுமாம். நிறைய மூலிகை வைத்தியம் தான் புக்ல இருக்கு, அதெல்லாம் இப்போ கிடைக்க வாய்ப்பில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொதுவா விஷக்கடின்னா சுன்னாம்பு வைப்பாங்க... இதுக்கு எப்படின்னு தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியா? அந்த சிலந்தி எப்படி இருந்ததுனு பார்த்தீங்களா?
நாள்ப்பட கறுப்பு மாறும்னு நினைக்கிறேன்.. ரொம்ப நன்றி.. உடனே வந்து பதில் தந்ததற்கு..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி.. நீங்க சொன்னதை போல மூலிகை கிடைக்க வாய்ப்பில்லை.. கண்டிப்பா நல்லெண்ணை குடிக்க சொல்கிறேன்.. சுண்ணாம்பும் இங்கே இல்லை தான்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கடித்த இடத்தில் ஐஸ் பாக் ஒத்தடம் கொடுக்க சொல்லுங்கள் அது வீக்கத்தை குறைக்கும். (இந்தியன் ஸ்டோரில் சுண்ணாம்பு கிடக்கும்...எப்போவாது போகும் போது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்). மூன்று பங்கு பேகிங் சோடாவை ஒரு பங்கு தண்ணீரில் கலந்து (அது ஒரு பேஸ்ட் போல் வரும்) கடித்த இடத்தில் தடவுங்கள். கடித்த இடத்தை கொஞ்சம் உயரமாக தூக்கியே வைத்திருந்தால் வீக்கம் (இருந்தால்) அதிகமாகாமளாவது இருக்கும். அரிப்பு இருந்தால் கொஞ்சம் காய்ந்த பேசிலை (Basil) கடித்த இடத்தில் வைத்து மாவகும் வரை தேய்க்கவும்.மஞ்சள் சூப்பரான மருந்து. அதனுடன் சிறதளவு ஆலிவ் ஆயிலும் சேர்த்து தேக்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்ஸ் விஷப்பூச்சி கடிக்கு சுண்ணாம்புதான் வைப்பார்கள்,மஞ்சள் பரவாயில்லை.கடி பட்டவர்களை ஒரு டம்லர் தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து குடிக்க சொல்லுங்கள்....அதன் விஷம்(சிறிதும்)ஏறாமல் காக்கும் குணம் மஞ்சளுக்கு உண்டு. என் அத்தையிடம் கேட்டு இன்னும் வைத்தியம் இருந்தால் சொல்கிறேன்.......

குளவி, தேனீ கொட்டினா பளப்புளி வைப்பேன். சிலந்தி... அனுபவம் இல்ல. எனக்கு இதற்கு வீட்டு வைத்தியம் சொல்லத் தெரியல. ஆனா எது கடிச்சாலும் முதல் வேலையா ஒரு ஆன்டிஹிஸ்டமைன் போட்டுருவேன்.

அனேகமான சிலந்திகள் கடித்தால் ஒன்றும் செய்யிறது இல்லைதான். ஆனால் எல்லாச் சிலந்தியும் ஒரே மாதிரி இல்லை. வச்சு இருக்காம காட்டுறது நல்லது என்று சொல்வேன். இலங்கைல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் சிலந்தி ஊர்ந்ததாலேயே நிறைய சிரமம் அனுப்பவிச்சாங்க.

இங்க நியூசிலாந்துல விஷச்சிலந்தி இல்லை என்பாங்க. ஆனால் டீவீல சிலந்தி கடிச்சவங்களைக் காட்டி இருக்காங்க, நானானால் இதை சாதாரணமாக எடுக்க மாட்டேன். சிலந்தில எத்தனையோ வகை இருக்கு. ஒரு தடவை டாக்டர்ட்ட காட்டிட்டா பயப்படாம இருக்கலாம்ல.

‍- இமா க்றிஸ்

உண்மை தான்... இமா சொல்வது போல் சிலந்தியில் பல வகை இருக்கு... சிலது ஒரு வகை நீரை நம்ம மேல் அடிக்குமாம்... அது பட்டா ரொம்ப புன்னாகி போகுமாம். சிலது கடிச்ச ரொம்ப விஷமாம். அதனால் தாமதிக்காம வீட்டு வைத்தியத்தை வெறும் முதலுதவியா செய்துட்டு டாக்டரை பார்த்து ஒரு ஊசி போட்டுடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரம்யா,

அவங்களுக்கு வாமிட் எதுவும் இல்லையே? அதை கவனிச்சுக்கோங்க, வாந்தி எடுத்தாங்கன்னா, தாமதிக்காமல் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிடுங்க.

சாதாரணமாக, தேள் கொட்டினால், ஏதேனும் பூச்சி கடித்தால், வெற்றிலையில் பத்து மிளகு வைத்து, மடித்து, அப்படியே சாப்பிடக் கொடுப்பாங்க. மிளகு, ரத்தத்தில் கலந்திருக்கும் விஷத் தன்மையை முறித்து விடும் என்று சொல்வாங்க.

இருந்தாலும், உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இமா சொல்லியிருக்கிற மாதிரி, டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிடுங்க.

சரியானதும், சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்