எங்கு சாப்பிடலாம்?

இன்னும் சில நாட்களில் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல உள்ளோம். கொடைக்கானலில் நல்ல உணவு விடுதி எது? எங்கு சாப்பிடலாம்? சென்று வந்த அனுபவம் உள்ளவர்கள் ஆலோசனை சொல்லவும்.

ஹோட்டல் அரிஸ்டோவில் சாப்பிடலாம்.டிபன்,மீல்ஸ் மாதிரிதான் சாப்பிடலாம்.மற்றபடி தந்தூர் கார்னர்,குஜராத்தி மீல்ஸ் என்று அது அதற்கென்ற உனவகங்களில் சாப்பிடுவது நன்றாக இருக்கும்.சில சின்ன ஹோட்டல்களில் டிபன் நன்றாக இருக்கும்.ஆனால் பெயர் தெரியவில்லை.

ஆஹா, கலக்குறீங்க மேடம். வசிப்பது ஆஸ்திரேலியாவில். கொடுப்பது தாய்லாந்து, பர்மா ரெஸிபி. கொடைக்கானல் ஹோட்டல் பற்றி எல்லாம் சொல்லுறீங்க.. எப்படி இது? உலகம் முழுவதும் சுற்றி இருக்கின்றீர்களா?

Thanks Vinotha.எந்த நாட்டுக்கு எந்த ஹோட்டலுக்கு போனாலும் உடனே அங்கு சாப்பிட்ட உணவு வகைகளை வீட்டில் செய்துப்பார்த்து விடுவேன்.கொடைகானல் முக்கியமாக ஊட்டியில் கிட்டத்தட்ட எல்லா நல்ல ரெஸ்டாரண்டுகளும் தெரியும்.

k deva madam madurai yil entha hotel nallaa erukkum

ஹோட்டல் - மதுரை
சைவம் -
சரவண பவன், - இட்லி, தோசை, புரி
கண்ணா போடிங் & ரேவதி - பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம்
டெம்பிள் சிட்டி, ஆரிய பவன்,

அசைவம் -
அம்சவல்லி
அம்மா மெஸ்
தமிழகம்

ஹோட்டல் அரிஸ்டோவும் மீனாட்சி பவன் உம் நல்ல இருக்கும்...நல்ல என்ஜாய் பண்ணுங்க...ஹவ் எ சேப் ஜானி...

Hai anusha,

. Hotel preethi classic is the best one of the kodikanal.

No pleasure without pain.

தோழிகளே நாகர்கோவிலில் நல்ல அசைவ ஹோட்டல் எது என்று சொல்லுங்களேன்,நாங்கள் கூடிய விரைவில் செல்ல இருக்கிறோம்.
நாகர்கோவில் தோழியர் உதவுங்கள் பிளீஸ்

நாகர்கோவிலில் அசைவத்திற்கு பிரபலமான இடம் ஹோட்டல் பிரபு.

ஹோட்டல் விஜயதாவும் நன்றாக இருக்கும்.

புதிதாக சில ஹோட்டல்கள் வந்திருப்பதாக சொன்னார்கள். கபாப் மற்றும் அரேபியன் உணவு வகைகளுக்கான ஹோட்டல் அது. பெயரை கேட்டு சொல்கிறேன்.

ஹோட்டல் பிரபுவும், விஜயதா வும் சுவையாக இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/15101?page=3 இந்த லிங்கும் பாருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி கவிசிவா, நான் அந்த லிங்கில் நிச்சயம் பார்க்கிறேன்,மேலும் விவரம் தெரிந்தால் தெரியப் படுத்துங்கள்.
மீண்டும் நன்றிகள்

மேலும் சில பதிவுகள்