வம்பிழுக்கும் அரட்டை பகுதி!!!

ஏன்டா இப்படி பேருன்னு யோசிக்காதீங்க... என்னை அடிக்கடி நாடு கடத்துனதால இப்படி பெயர் வெச்சேன் ;) வாங்க அரட்டையை இங்கே தொடருங்க.

வாங்கங்க... எல்லாரும் வாங்க... அரட்டையை இங்கே தொடருங்க. சும்மாவே நான் அரட்டை பகுதி துவங்கினா ஈ ஓட்டும்... இன்னைக்கு சனிக்கிழமை வேறு... ஈ கொசு எல்லாம் ஓட்டும்னு எதிர் பார்க்கிறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்திகள் வாசித்தவர் இருக்காங்களா கிளம்பிட்டாங்களா?? பட்டிக்கு தலைப்பு சிக்குச்சா சிக்கலயா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு சின்ன டவுட்....

ரோஹித்துக்கு சின்னதா காதுக்கிட்ட வீங்கியிருக்கு.. இது அம்மையா? நேத்து கொஞ்சம் வலிக்குதுன்னு சொன்னான். இன்னிக்கு காலைல பாத்தா வீங்கியிருக்கு. இதுக்கு என்ன பண்ணனும்? டாக்டர்கிட்ட போகலாமா?

Don't Worry Be Happy.

எல்லாரும் எங்க போனீங்க..............

`சமீபத்திய கருத்துக்களில்’ மாற்றம் வராததால் இந்தப்பதிவு;(

Don't Worry Be Happy.

அட பாவிகளா, நான் "வேலைநேர கிசுகிசு" ல ரெப்ரெஷ் பண்ணி பாத்துட்டே இருந்தா, இங்க தனி ட்ராக் ஓடுதா. ஒரு வார்த்தை கூட சொல்லல,

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நலமா, ரோஹித் க்கு என்ன ஆச்சு?? பூச்சி கடியான்னு பாருங்க. இன்னைக்கு பாத்துட்டு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க. இதுக்கு முன்னாடி இப்படி நடந்து இருக்கா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நலமா, இப்ப எலாம் நீங்களும் அரட்டைக்கு வரதே இல்லைன்னு எல்லாரும் கம்ப்ளைன்ட், (அதை நான் சொல்றது பெரிய காமெடி).
யாழினி ஸ்கூல் க்கு போறாளா? சிக்கு என்ன பண்றான்?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் ஹாய் எல்லோருக்கும் வணக்கம் ;)

ஹாய் ரேணு ரொம்ப நன்றி என் டீ கடை யை விளம்பரபடுத்தியத்ற்க்கு இந்தாங்க காலையிலயே ஒரு கப் டீ தரேன் குடிங்க (_)> செய்தி வாசித்து கலச்சி போய் இருப்பிங்க நல்லா குடிங்க ;)))))

உன்னை போல பிறரையும் நேசி.

ரோஹித்துக்கு இதுக்கு முன்னாடி இப்படி வந்தது இல்லைடா. பூச்சிக் கடியா என்னன்னு தெரியலையே;( இரண்டு வாரத்துக்கு முன்னாடி டான்ஸில்ஸ்தான் வந்தது கொஞ்சம் நல்லாவே ஃபீவர். அதனால் கொஞ்சம் பத்தியமாவே சாப்பிடக்குடுத்தேன். நேத்துதான் மட்டன் பிரியாணி, தந்தூரி சிக்கன், பீச் குளியல்னு அமர்க்களபட்டான். ப்ச் இன்னிக்கு இப்படி ஆயிருச்சு;( அவனுக்கு இன்னும் இரண்டு நாள்ல கிளாஸ் பார்ட்டி வேற... அப்புறம் ஸ்கூல் சம்மர் லீவு...

Don't Worry Be Happy.

டான்ஸில்ஸ் இருந்தா இபப்டி காது கிட்ட வீங்கும், எனக்கும் இருந்து இருக்கு. நீங்க ஒன்னும் பய பட வேண்டாம், பீச் குளியல், மத்த ஆட்டம் எல்லாம் சேந்து தான் வந்து இருக்கும், சுடு தண்ணி குடிக்க சொல்லுங்க. இப்படி இருந்தா நெறி கட்றதுன்னு அம்மா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன், ஒடம்புல மத்த இடத்துல ஒன்னும் கட்டி இல்ல தான? அம்மையா இருந்தா நல்லா தெரியும் தான

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்