அவசரம் குழந்தைக்கு கண் சிவப்பாக உள்ளது

வணக்கம் தோழிகளே. என் மகனுக்கு 21 மாதங்கள் ஆகிறது.நேற்று காலை முதல் ஒரு கண் சிவப்பாக உள்ளது. வெள்ளை தெரிய வில்லை. சிவப்பு தான் தெரியுது.கண்ணில் இருந்து தண்ணி தண்ணியா வருது. தொடர்ந்து சளி(தண்ணியாக), இருமல், fever உள்ளது. குழந்தை மிகவும் கஷ்டபடரான்.doctor கிட்ட போனொம்.eyedrops தந்தார்.fever,flu medicine, eyedrops போட்டென். ஆனா கண் அப்படியெ தான் இருக்கு.pls help me.pls.... feverஆல என்ன food தருவது. உடம்பு சுடு ஆகிவிட்டதுனு சொல்ராங்க. குளிர்ச்சியாக என்ன தர வேண்டும்.

பயப்படாதீங்க. இன்ஃபெக்சன் ஆகியிருக்கும். ஐட்ராப்ஸ் போடுங்க. ஃபீவர் ரொம்ப அதிகமாக இருக்கா? ஈரத்துணி வைத்து துடைத்து காய்ச்சலைக் குறைக்கப் பாருங்கள்.காய்ச்சல் 38.6 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகமானால் ப்ரூஃபன் கொடுங்கள். காய்ச்சல் உடனே குறையும்.

காய்ச்சல் குறைந்தால் எல்லாம் சரியாகிவிடும். ஃபீவர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எவ்வளவு இருக்கிறது எனக் குறித்துக் கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்க கொடுங்கள். சளி இருப்பதால் சற்று வார்மாகவே கொடுங்கள். கஞ்சி வைத்து கொடுங்கள்.

பயப்படாமல் பதறாமல் தைரியமாக இருங்கள்.

ஜெயா 100puls தன்னீரில் ஆருன தன்னீர் கலந்து பெரிய போட்டல் ஒன்ரு முலுமயா குடுத்துருங்க அப்பரம் பாருங்க ஏப்படி இருக்குன்டு இங்கே மலேஷியாவில் டோக்டர் சொல்வதே இதுதான் என் மகனுக்கு இன்ரு காச்சலாத்தான் இருக்கு இதுதான் குடுக்கனும் சூடு எரங்கிட்டாலே கன் சிகப்பு மரஞ்ரும் 100 pulas குடுங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

உடம்பு சுடு ஆகிவிட்டதுனு சொல்ராங்க. குளிர்ச்சியாக என்ன தர வேண்டும்.

jaya

ஜெயாஆனந்த்...
குழந்தை காய்ச்சல் சூடு குறைய...ஒரு கர்ச்சீபை பச்சத்தண்ணீல நனைத்து பிளிந்து கொண்டு குழந்தையின் நெற்றி,கை,கால்,முகம்,உடலென அனைத்து இடங்களிலும்(கை இடுக்கு,கால்சந்து என)துடைத்துவிடுங்கள்.அப்படி செய்யும்போது அவர்களின் காய்ச்சல் 2முதல்3 டிகிரி காய்ச்சல் குறையும்.....இது டாக்டர் என் பிள்ளைக்கு சொன்னது......... முயற்சித்துப் பாருங்கள்.

ரேணு சொன்ன மாதிரி தொடச்சு விடுங்க. அது உடனடியா டெம்பெரேச்சர் குறைக்க உதவும். இருமல் இருந்தாலும் கண் சிவக்கும். அதனால் அதை பற்றி கவலை வேண்டாம். முதல்ல காய்ச்சலை சரி செய்யுங்க. உணவு குளிர்ச்சி ஆக்கலாம் இப்போ கொடுக்க கூடாது ஜெயா... அது காய்ச்சலை அதிகமாக்கும்... அதனால் ஜீரணத்துக்கு எளிதா இருக்க கூடிய அரிசி கஞ்சி வெது வெதுன்னு கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பொ fever பரவா இல்ல.கண் அப்படியெ தான் இருக்கு. குறைய வில்லை.

jaya

தோழி ஜெயா, தவறாக நினைக்க வேண்டாம். இது குழந்தையின் உடல் நலன் குறித்த விஷயம். அதனால் நீங்கள் மற்ற தோழிகளின் ஆலோசனைக்காக காத்திராமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க பாருங்கள். பெரியவர்களுக்கென்றாலும் பரவாயில்லை பொறுத்துக் கொள்ளலாம். தோழிகளிடம் ஏற்கனவே பெற்ற (குழந்தைக்குரிய) சிகிச்சை அனுபவங்களை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது சிகிச்சைக்குரிய ஆலோசனைக்காக காத்திருக்க வேண்டாம்.நல்லதே நடக்கும். உங்கள் குழந்தை சீக்கிரமே குணமடைவான். கவலை வேண்டாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு ஜெயா ஆனந்த்.,

உங்கள் குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கு., கண்ணு சிவப்பா இருக்கிறதப் பாத்து பயப்படாதீங்க., டாக்டரிடம் காமிச்சாச்சில்ல, அப்புறம் என்ன பயம்? டாக்டர் குடுத்த மருந்து கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணுங்க. எவ்வளவு நாள் டைம் கொடுத்திருக்காறோ அதுவரை பொருத்திருங்க. காய்ச்சலோ அல்லது கண்ணில் இருந்து இன்னும் நீர் வடிந்தாலோ நீங்க மறுபடியும் டாக்டரையே பாருங்க அதுதான் சரி. குழந்தைக்கு இப்போதைக்கு குளிர்ச்சியான ஆகாரம் கொடுக்க வேண்டாம். அதைதான் தோழிகள் மறுபடியும் மறுபடியும் சொல்லிட்டு இருக்காங்க. காய்ச்சல் முழுவதுமாக விட்டபின் கண்சிவப்பும் மறைந்துவிடும்.

எல்லாம் சரியானபின்னாடி மறுபடியும் வாங்க... குழந்தைக்கான ஆகாரம் பத்தின டவுட்ட அப்ப கிளியர் பண்ணிக்கலாம்;) இப்போதைக்கு வெதுவெதுப்பான ஆகாரமே கொடுங்க அதுதான் சளிக்கு நல்லது காய்ச்சலும் சீக்கிரம் போகும்;)

முடிந்தவரை டாக்டரை கன்சல்ட் பண்ணும்போதே குழந்தைக்கான உணவுமுறை, காய்ச்சல் சமையத்தில் என்ன கொடுக்கனும் என்பதை டாக்டரிடமே கேட்டுவிடுங்கள்.

அன்புடன்
ஜெய்.,

Don't Worry Be Happy.

வணக்கம் தோழி
பயப்பட வேண்டாம். குழந்தை கண்ணில் சிறிது நேரதிருக்கு ஒரு முறை தாய்ப்பால் விடவும். சரியாகி விடும். என் குழந்தைக்கும் இதுப்போல் இருந்தது. நாங்களும் முதலில் பயந்தோம் பிறகு டாக்டரிடம் கட்டிவிட்டு இதுப்போல் தாய்ப்பால் தான் விட்டோம்.

வணக்கம் தோழிகளே, இன்னைக்கு தான் fever குறைஞ்சு இருக்கு. ஆனா கண் அப்படியெ தான் இருக்கு. இன்னையொட4 நாள் ஆச்சு. அப்படியெ இருக்கு.இன்னும் சரியாக 2 நாள் ஆகும்ணு doctor சொல்லி இருக்கார். குழந்தை கண் பார்க்கவே கஷ்டமா இருக்கு.

jaya

மேலும் சில பதிவுகள்