பட்டிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா? பலவீனப்படுத்துகின்றனவா?

பட்டிமன்றம் -- 44,

தலைப்பு -- "தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் அறிவை பலப்படுத்துகின்றனவா?பலவீனப்படுத்துகின்றனவா?"

தலைப்பை வழங்கியவர் -- ஆயிஸ்ரீ,

தோழிகளே இந்தத் தலைப்பு பற்றி தற்சமையம் நாம் பேசி தெளிவடைய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.....மக்களென்றால் குழந்தைகள் முதல்,தாத்தா பாட்டிவரை ......
ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொருவகையில் மக்களை கட்டிப்போட்டு மூளைச்சலவை செய்து வேலைபார்க்கவிடாமல் இருக்கின்றன..... அதே சமயம் அறிவியல் வளர்ச்சியும்,கற்பனைத்திறனும் கொண்ட நிகழ்ச்சிகளும் வருகின்றன...........
வயதில் மூத்தவர் மட்டுமல்லாமல்,இளையோர்(குழந்தைகள் கூட) இப்போது வெளியே சென்று விளையாடுவதில்லை.......இதற்கு முக்கிய காரணமாக அமைவது தொலைக்காட்சிகள்..........இதில் இவை எந்த வகையில் அமைகின்றன என்றே இங்கு வாதாடி தெளிய இருக்கிறோம்.........
வாருங்கள்........வாதங்களுடன்............
பேசுங்கள்........பகுத்தறிவுடன்...............
தெளிவடைவோம்..........அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்த...........

தோழர் தோழிகளை அன்புடன்,வாதத்திற்கு அழைக்கிறேன்........நிறைய பேச்சுக்கள் நிறைய விஷயங்களை நமக்குத்தருமிங்கு ...........தலைப்பைக் கொடுத்த "தோழி ஆயிஸ்ரீ "அவர்களுக்கு நன்றி............

விதிமுறைகள் உங்கள் அனைவருக்கும் தெரியுமென்பதால் அதை இங்கு நான் கொடுக்கவில்லை..........வாதாட இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.........

பட்டியில் அனைவரும் தங்கள் கருத்துகளை பதிவிக்க இனிதே அழைக்கிறேன்.........

அதிகாலையிலேயே அதிரடியாக பட்டியை தொடங்கியுள்ள ரேனுகா மேடத்திற்கு என் வாழ்த்துகள்!.....நடுவர் அவர்களே!எழவு வீட்டில் அழுததைவிட டீவி சீரியல்பார்த்து அழுத பெண்களே அதிகம் என்பேன்!..அமைதி...அமைதி..விரைவி அணி தீர்மானித்து வருகிறேன்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அதெப்படி அப்படி சொல்வீங்க அழுதாலும் சிரித்தாலும் அறிவை பலப்படுத்தத்தான் செய்கிறது இப்போவெல்லம் பிள்ளைகளுக்கு நேரம் எங்கேஇருக்கு நாடகம் எல்லாம் எங்கே பிள்ளைகள் பாக்குது பிளைகள்பார்ப்பத்ல்லாம் கேம்ஸ் பாட்டு ரேஸ் இது போலத்தான் டீவீக்காரன் விளம்பரத்துக்காக கண்டதையும் ஒளிபரப்புரான் பெரியவங்க அதை பாக்காமல் இருந்தாலே வீடு நாடு எல்லாம் உருப்புடுவிடும்

வாதப்பதிவின் மேல் எந்த அணி என்பதை குறிப்பிட்டால் நடுவர் குழம்பாமல் இருப்பார்.........

வெயிட் வெயிட் நீங்க என்ன கேட்டீங்க அறிவை பலப்படுதுதான்னுதானே நேரத்தையோ ஆரோக்கியத்தையோ அல்ல

நடுவரே... காலையிலேயே சொன்ன சொல் தவறாமல் வந்துட்டீங்க... வணக்கம். வாழ்த்துக்கள்.

ஆயிஸ்ரீ தலைப்புன்னா கேட்கவே வேண்டாம்... அருமை வழக்கம் போல. நன்றி ஆயிஸ்ரீ.

நடுவரே... எல்லா கெட்டதுலையும் ஒரு நல்லது இருக்கும்னு கேட்டிருப்பீங்க... அப்படி தான் தொலைக்காட்சியும்... எத்தனை உபயோகம் இல்லாத நிகழ்ச்சி இருந்தாலும் சில நல்ல நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்தும் விதமா இருக்கு. கெட்டதை நீக்கிட்டு நல்லதை எடுன்னு சொன்ன பெரியவங்க பேச்சை கேட்டு நான் அறிவை பலப்படுத்துதுன்னு வாதாடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் வந்துட்டேன்

நடுவரே திரும்பவும் ஒரு சூறாவளி துடங்கியச்சா. இதில் என்ன சந்தேகம் நடுவர் அவர்களே தொலைக்காட்சியில் கெடுதல் தான் அதிகம். இப்பொழுதுள்ள சூழலில் தொலைக்காட்சியை பார்த்தாலே ஒரு அலுப்பும் சலுப்பும் தான் தென்படுகிறது. என்னதான் தன் பெற்றோர் நல்லதை கற்றுக்கொள் என்று சொன்னாலும் அதை எத்தனை பிள்ளைகள் கேட்கிறார்கள்.

குழந்தைகளையே எடுததுக் கொள்ளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் சுட்டி டிவி அல்லது சித்திரம் இல்லை ஏதாவது ஒரு கார்டூன் சேனல்கள் அதில் பெரும்பாலும் அடிதடி கார்டூன்களை பெரும்பாலும் அவர்களுக்கு விரும்புகின்றார்கள். அதை பார்த்துவிட்டு பக்கத்து பிள்ளையோடு நான்தான் ஜாக்கி, ரேஜர் என்று அடித்து உதைத்து விளையாடுகிறார்கள். கனவு காணும் போது கூட ரேஸ் ஆடுவது போல் கால்களையும் கைகளையும் ஆட்டிக் கொண்டு ரோஸ் ஓட்டுவது நினைத்துக் கொண்டு புலம்புகின்றார்கள்.

பெரியவர்களை எடுத்துக் கொள்ளுங்கள் 100 சதவீத்தில் 80 சதவீதம் போர் சீரியலை பார்த்துக் கொண்டும் அழுதுக் கொண்டும் இருக்கிறார்கள். கணவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் கூட அவரை கவனிக்க மாட்டார்கள். திருமதி செல்வம் என்ன ஆச்சி நாதஸ்வரத்தில் என்ன நடக்கு என்று அதை தான் மும்முரமாக பார்ப்பார்கள். விளம்பர இடைவெளியில் தான் எல்லா வேலைகளும் நடக்கும். எத்தனை பேர் அறிவு சம்மந்தமான நிகழ்ச்சிகளை பார்க்கின்றார்கள் என்று உண்மையாக சொல்ல சொல்லுங்கள் நடுவரே! ஜாக்பாட், ஒரு வார்த்தை ஒரு லட்சம் போன்ற அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றார்கள்.

இளம் வயதினரை எடுத்துக் கொண்டால் அவர்கள் விரும்பி பார்ப்பது என்ன வென்றால் சினிமா பாடல்கள். அதுவும் டூயட் பாட்டு என்றால் ஒரு அலாதி பிரியம். ஒரு நாளைக்கு ஒரு பாட்டை பத்து முறை போடுவார்கள். அதை அலுப்பு சட்டாமல் பத்துமுறையும் பாடிக் கொண்டே பார்பார்கள். இப்படி இன்னும் நிறைய விசயங்கள் இருக்கின்றது. பிறகு வந்து பேசுகிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பட்டியின் தலைவர் யார் என்று பார்க்கலாம் என வந்தால் அட நம்ம நியூஸ் ரீடர் ரேணு.அப்ப கட்டாயம் வாதடியே ஆகனுன்னு நினைக்கிறேன்.நேரம் தான் கிடைக்குதோன்னு தெரியலை.முதலில் நடுவருக்கு எனது வாழ்த்துக்கள்பா.நல்ல தலைப்பை கொடுத்த ஆயிஸ்ரீ க்கு நன்றி.இன்றுள்ள சூழ்நிலையில் தேவையான தலைப்பு தான். எந்த அணிக்கு பேசுவதுன்னு தான் குழப்பமாக இருக்கு.சிறிது நேரத்தில் முடிவெடுத்துவிட்டு வருகிறேன்

ம்ம்ம்ம் பிள்ளைகளின் கிரியேடிவிட்டி வளருது பாத்தீங்களா வெளி உலகமும் தெரிஞ்சுக்கரோம் வனியை ஆதரிக்கிரேன் மற்றும் இளவயதில் பாடல்கேட்பது அவர்களுக்கு உற்ச்சாகம் வயசான பிறகு அதெல்லாம் அவர்களுக்கு ஒரு இனிய அனுபவம்

தொலைகாட்சி நிகழ்சிகள் அறிவை பலப்படுத்துகின்றன என்றே சொல்லலாம்.சில நிகழ்சிகளை வைத்து பல நிகழ்சிகளை நாம் எடை போடக்கூடாது.எவ்வளோவோ அறிவை வளர்க்கும் நிகழ்சிகள் உள்ளன.உதாரணமாக
செய்திகள்,நீயா நானா,அரட்டை அரங்கம்,சூப்பர் சிங்கர்,நடன நிகழ்சிகள் பல,நடந்தது என்ன,குயிஸ் நிகழ்சிகள் இன்னும் பல பல நல்ல நிகழ்சிகள் இருக்கும் போது நம் அறிவு ஏன் பலவீனப்படுகிறது.

செய்திகள் என்று எடுத்துகொண்டால் உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தே நாம் விலாவரியாக தெரிந்து கொள்ள உதவுகிறது.முன்பெல்லாம் செய்திகளுகென்று தனி நேரமுண்டு ஆனால் இப்பொழுது எல்லாநேரமும் நாட்டில் என்ன நடக்கின்றன என தெரிந்து கொள்ள நியூஸ் சானல்ஸ் பல வந்து விட்டன.இதுவே நம் அறிவை பலப்படுத்துகின்றன.இந்த நிகழ்சிகளுக்காக எவ்வளவு பேர் ரிஸ்க் எடுத்து நியூஸ் திரட்டுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகூட வழி கிடைத்துள்ளது.

நீயா நானா ,அரட்டை அரங்கம் போன்ற நிகழ்சிகள் தற்போது நாட்டின் நிலவரத்தை பற்றி அலசி ஆரய்பவையாகவே உள்ளது.இதன் மூலம் பல ஏழை மக்களின் அவல வாழ்க்கையும் வெளி வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளும் கிடக்கின்றன.இதுவே இந்நிகழ்ச்சியின் வெற்றி ஆகும்.

அடுத்து நாம் சிறுவர்களாக இருக்கும் போது நம் திறமைகளை வெளிக்கொணர மீடியாக்களே கிடையாது.ஆனால் இப்பொழுது அப்படியல்ல.திறமை இருந்தால் கட்டாயம் தொலைகாட்சி மூலம் தெரிந்து விடுகிறது.இதற்கான நிகழ்சிகளை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுப்பவையாக இருக்கிறது. இதனால் தானும் ஏதாவது ஒரு கலையை கற்று கொள்ள வேண்டும் என ஆசை வருகிறது.

நமக்கு தெரியாத பல இடங்களுக்கு நுழைந்து படம்பிடித்து அந்த இடத்தை பற்றி எல்லாவிவரங்களையும் நமக்கு விளக்குவது தொலைக்காட்சியே.இது நம் அறிவை வளர்க்கவில்லையா .எந்த இடத்திற்கும் போகாமல் இருந்த இடதிலிருந்தல்லவா நம் அறிவை வளர்க்கிறது.

குற்றங்கள் எவ்வாறு நடை பெறுகிறது,அதிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காப்பாற்றிகொள்வது என்பதையும் விளக்குவது தொலைக்காட்சியே.இதன் மூலம் எவ்வாறெல்லாம் திருட்டு கொள்ளை நடக்கிறது என தெரிந்து நாம் முன் ஜாக்கிரதையாக இருக்க உதவுகிறது இந்த நிகழ்சிகள்.

இப்போது சொல்லுங்கள் நடுவரே எவ்வளவு நல்ல நிகழ்சிகள் தொலைகாட்சியில் இருக்கும் போது இது நம் அறிவை வளர்கிறதா,இல்லை பலவீனப்படுத்துகிறதா.

மேலும் சில பதிவுகள்