சமாதான அரட்டை....

அடடா....... அந்த வம்பிழுக்கும் அரட்டையில் ஒரே சண்டை..... எல்லோரும் இந்த சமாதான அரட்டைக்கு ஓடி வாங்கோ......

கல்ப்ஸ், தேவி, தேன், தவம் அண்ணா, ஸ்வர்ணா, அஸ்வினி, சஜன்யா, பல்கீஸ், வனி, ரேணு, மற்ற எல்லோரும் இங்க ஓடியாங்கோ.....

சுட சுட காபி...... ரிப்பன் பக்கோடா...... ஸ்வர்ணாவுக்கு ஸ்பெஷல்லா pizza ..... எல்லாம் தயாரா இருக்கு.... சண்ட போடாம வந்து எடுத்துகங்க......

தீபா யாரும் துவங்கவில்லை என்று நான் துவங்கிவிட்டேன். மன்னிக்கவும் இந்த பகுதியை முடித்துவிட்டு. அதை தொடரலாம்.

எல்லோரும் இங்கே வாருங்கள். குழப்பம் வேண்டாம். இதை முடித்துவிட்டு அதற்கு போகலாம்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தீபா நீங்கள் என் பெயரை விட்டதால் நான் இனி உங்களோடு பேச மாட்டேன்.

எல்லா தோழிகளும் இங்கே பேசுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தீபா எங்க நினைவெல்லாம் உங்களுக்கு இருக்கிறதா,,,,,,எப்டி இருக்கீங்க,

சஜன்யா

All is well

அட போங்க பா.... இந்த சமாதான அரட்டையில் ஆரம்பத்திலேயே சண்டையா......... ரேவதி...... நீ நல்ல பொண்ணு ஆச்சே..... இதுக்கெல்லாம் நீ கோவிச்சிக்க மாட்டியே........ அங்க பாரு....... இதுதான் சாக்குன்னு... உனக்கு வச்சிருந்த ரிப்பன் பக்கோடாவா இந்த தேவி பொண்ணு அமுக்குது..... விடாத பிடி........

என்னப்பா என்னையும் சேத்துக்கோங்க ம்ம்ம் இதுதான் சரி இந்த டைட்டில்தான் நல்லாருக்கு

//ஹாய் தீபா எங்க நினைவெல்லாம் உங்களுக்கு இருக்கிறதா,,//

என்ன இப்படி பட்டுன்னு கேட்டுடிங்க....... இவ்ளோ அழகான பெயர என்னால மறக்க முடியுமா..... நா அரட்டைக்கு வரலைன்னாலும் உங்க யாரையும் மறக்க மாட்டேன்...... நா நல்லா இருக்கேன்.... நீங்க எப்படி இருக்கீங்க? உங்க குட்டி எப்படி இருக்கா?

தீபா ,,,,
இத்லிருந்தே நீங்க என்ன மறந்துட்டிங்கனு தெரியுது,,,,,எனக்கு குட்டீஸ் லாம் இல்லை இப்பதான் திருமணம் முடிஞ்சு 1 வருடம் ஆகிறது

சஜன்யா

All is well

Basaria உங்க பெயர கரெக்ட்டா சொல்லி இருக்கேன்னா??? தவறா இருந்தா மன்னிச்சிடுங்க..... வாங்க உங்களையும் எங்க ஆட்டத்துல சேர்த்துகிட்டோம்..... :) உங்களை பத்தி நாங்க தெரிஞ்சுக்கலாமா......

எனக்கு நானே தொப்பி தொப்பின்னு..... சொல்லிக்குறேன்....... :( என்ன கொடும்மா சரவணன் இது.......

உங்க கிட்டயும் நா சாரி கேட்டுக்குறேன்...... (ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... இது எனக்கு மன்னிப்பு கேட்கும் வாரம் போல.......)

சஜன்யா..... உங்க குட்டியோட பேருன்னு நா தப்பா நெனச்சுட்டேன்....... பரவால்ல.... அழகான குட்டி உங்களுக்கு சீகரம் பிறக்க என் வாழ்த்துக்கள்.....

மேலும் சில பதிவுகள்