கேரட் பொடிமாஸ்

தேதி: June 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

கேரட் - நான்கு
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பொட்டுக்கடலை - கால் கப்
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - பத்து பல்
தாளிக்க:
பட்டை - மூன்று துண்டு
கிராம்பு - மூன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி (தேவைக்கு)


 

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும்.
வாணலியில் பொட்டுக்கடலை,சோம்பு, கசகசா போட்டு வாட்டி மிக்சியில் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து அதோடு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கேரட் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
அதோடு தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக பொட்டுக்கடலை பொடியை சேர்த்து பொல பொலவென்று வரும் வரை கிளறி இறக்கவும்.
சுவையான கேரட் பொடிமாஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றிகள் பல...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்,போட்டோ பார்த்தவுடனே நீங்கதான்னு நினைச்சேன்.நீங்களேதான்!!

ஹய்யா!!கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டேன் ஸ்வர்,போட்டோஸ் சூப்பராயிருக்கு

ஸ்வர்.கேரட் பார்க்கவே ரொம்ப அழகாயிருக்கு ஸ்வர்.ஸ்வருடைய கைவண்ணம்

சூப்பர்.கேரட் பக்கமே போக மாட்டேன்.உங்க குறிப்பு பார்த்தா சூப்பராயிருக்கும்

போலிருக்கு.கேரட்ல பொடிமாஸ்,அசத்தறீங்கடா.புதுமையான,வித்தியாசமான குறிப்பு.

தொடர்ந்து அசத்தும் என் தங்கத்திற்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

அன்புடன்
நித்திலா

நித்தி பார்த்ததுமே நான்னு கண்டுபிடிச்சியா எப்படிடா? முதலாய் வந்து வாழ்த்துகூறியிருக்க ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடா....பாராட்டுகளுக்கு மிக்க நன்றிடா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரான கலர்ஃபுல் ரெஸிபி..
கலருக்காகவே சாப்பிடலாம்.
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ஸ்வர்ணா,

நிறைய பொருட்கள் சேர்த்து, ரிச் ஆக, கலர்ஃபுல்லாக செய்திருக்கீங்க, பாராட்டுக்கள். செய்து பார்த்து விடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

காரட் பொடிமாஸ் வித்தியாசமா இருக்கு. கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன். நல்லதொரு குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கேரட் கலரும் குறிப்பில் உள்ள படங்களும் அருமை அருமை!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஸ்வர், என்னமா அசத்துரிங்க புது புது குறிப்பா கொடுத்து கேரட் பொடிமாஸ் கலர் செம சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரம்ஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு சீதாம்மா நலமாக இருக்கீங்களா?

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றிங்கம்மா ......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கண்டிப்பாக செய்து பார்த்துட்டு சொல்லுங்க லாவண்யா மிக்க நன்றி..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வனி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிடா... :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,

தெளிவான படங்கள்!!!
கம கமக்கும் காரட் பொடிமாஸ்!!!
வாழ்த்துக்கள் !!!!

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கவி....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா சூப்பரான கலர்ஃபுல் ரெஸிபி செய்துட்டுவாறேன் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி பாத்திமா கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Super swetha.very nice..itha try pana poren...

Poondu ingi vathakumpothu athu venthurukathula..yena pana