"அறுசுவை அரட்டை -- கிசுகிசு பார்ட்2"

வாருங்கள் தோழிகளே இங்கு வம்பிழுப்பு,கிசுகிசு,குழாய் சண்டை,குடுமி சண்டை,சமாதானம், இப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம்.கூடவே அறுசுவை உணவுகள்,தோழிகளின் உண்மை நிலவரம்,உலகில் கண்டு வியந்தவை,காணப்பிடிக்காதவிஅ,சமூக அவலம் இப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம்..பேச்சு அரட்டையாக மட்டுமில்லாமல் அறிவுக்கூர்மையடையும் விதமாகவும் இருந்தால் என் மனம் மிக்க மகிழ்வடையும்....

ஹே ஹே நான் தான் நான் தான் முதலில் வந்தேன் எங்க மாலை சந்தனம் இதுலாம் எதுவும் கிடையாதா? சரி பரவாயில்லை ரே எனக்கு சூப்பர் காபியாவது கொடு.

ஹாய் ஹாய் நான் தான் முதல்ல வந்தேன் .ரேனு நான் நியூஸ் வாசித்து இருக்கேன் பார்த்திங்கலா??????

உன்னை போல பிறரையும் நேசி.

ஹே நானும் வந்துட்டேன்,,,,தேவி,,

சஜன்யா

All is well

இந்த யாழி சூடான சுவையான காபி எடுத்துக்கோ. ரேணு அவர்களே நான் கேட்ட எந்த கேள்விக்கு பதில் இல்லை. இதோ என் தோழிகள் வந்துவிட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் ஸ்ரக் ஆரம்பிக்க உள்ளது.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வணக்கம்.....செய்திகள் வாசிப்பது உங்கள் ரேணுகா ராஜசேகரன்.....

முக்கிய செய்திகள்:
***************************
1. பட்டியில் இழுபறி நிலை.

2. செய்திவாசிப்பாளர் நியாயஸ்தர்.

3.அறுசுவை அரட்டை புதுப்பொலிவுடன்.

4. வனியின் நீண்ட விடுப்பு.

5. சில்வர்ஸ்டார் ரம்யா.

விரிவான செய்திகள்:
******************************
1. நேற்றுவரை சூடான வாதங்களுடன் சென்று கொண்டிருந்த பட்டியில் இன்று சற்று தேக்கநிலை..இதன் காரணமாக நடுவர் இரு அணிக்கும் செல்வதும் வருவதுமாக இழுபறி நிலையில் உள்ளார்.

2.செய்திவாசிப்பாளர் டீ,காபி இவற்றை விரும்பாதவர்.அவற்றை பருகாதவர். அப்படியிருக்க அவர் காசை வாங்கிக்கொண்டு பேசுகின்றார் என்பது அபத்தம்...தோழிகள் யோசிக்கவும்....இதுவரை செய்திவாசிப்பாளர் நியாயம் தவரியதில்லை.

3.அறுசுவை அரட்டை -- கிசுகிசுவின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுள்ளது...அனைத்து தோழிகளும் இங்கு குறிப்பிட்டு உள்ளபடி இங்குவந்து பேசவும்.

4.நமது வெளியுறவு அமைச்சர் வனிதா அவர்களின் திருமணநாளை முன்னிட்டு வெளியே சென்றவஎ எப்போது நம் தளத்திற்கு வருவாரென் இதுவரை அறிவிக்கப்படவில்லை..

5. நம் வேக மங்கை ரம்ஸ் அவர்கள் சமையல் பக்கம் சென்று "சில்வர் ஸ்டார்" வாங்கியுள்ளார்.இதுவரை அவர் வந்து ஸ்டாரை பெற்றூக் கொள்ளவில்லை...இன்னும் ஒரு நாளில் அவர் பெற்றூக் கொள்ளவில்லையென்றால் அதை நம் செய்திவாசிப்பாளர் பெற்றூக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3.30 மணி செய்திகள் நிறாஇவடைகின்றன.......
மீண்டும் செய்திகள் தண்த்தின் போக்கைப் பொறுத்து அமையும்......
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள
"அறுசுவை அரட்டை -- கிசுகிசு பார்ட் 2" பகுதியைப் பார்க்கவும்.....
வணக்கம்...........

தேவி,யாழி நாம மட்டும்தான்டா இங்க இருக்கோம்,யாரையுமே கானோம்,சின்ன பிள்ளைங்கல இங்கே தனியா விரட்டி விட்டுட்டாங்களே,,,,,

சஜன்யா

All is well

தோழிஸ்... செம சாப்பாடு சாப்பிட்டு வந்து இருக்கேன்......

மீன் குழம்பு மீன் வருவல்ன்னு புல் கட்டு கட்டினேன்..... போதாதற்கு என் தோழி பாசமா ஆசையா falooda வாங்கி கொடுத்து சாப்பிடு சாப்பிடு என்று ஒரே அன்பு தொல்லை..... அவ மனசு கஷ்டப் படக் கூடாதே.... சரின்னு அதையும் வாங்கி முடிச்சாச்சு....... ஆஆஆஆஆ........ ஒரே மயக்கமா இருக்கு.... சீகரம் ஜீரணம் ஆகுற மாதிரி எனக்கு ஏதாவது குடுங்க பா.......

வருவாங்க சஜன் இப்ப தான் இந்த புது இழை ஆரம்பித்து இருக்காங்க ரேணு அப்பறம் ரே இப்ப தான் கடை திறந்திருக்கா வருவாங்க

ரே என்னச்சு உடம்பு இப்ப பரவாயில்லையா? கோல்ட் எப்படி திடீர்னு? டாப்லெட் சாப்பிட்டியா. காபி சூப்பர்

தீப்ஸ் இதுலாம் கொஞ்சம் ஓவரா இல்ல. எங்களை எல்லாம் விட்டுட்டு பலூடா சாப்பிட்டியா? இரு இரு நாளைக்கு உனக்கு காங்கோ ஜூஸ் பார்ர்சல் பண்ண சொல்றேன். சரி உண்மைய சொல்லு பிடிங்கி சாப்பிட்ட

மசால் வடையில பூரி மசால் இருக்குமா?இல்லை சென்னா மசால் இருக்கும்மா?மைசூர் மசால்னு யாரோ சொல்ற மாதிரி கேட்குது.நானும் வந்துட்டேன்னு சொல்லத்தான்.எனக்கு காபி,மசால் வடை கொடுத்ததற்கு நன்றி.அதை சாப்பிட்டதன் விளைவுதான் இந்த கேள்வி.
யாழி:தூங்கவே இல்லைப்பா..
சஜன்:நலம்..நலமறிய ஆவல்.

இதுவும் கடந்துப் போகும்.

ஹலோ ரே மேடம் எங்களுக்கெல்லாம் காபி கிடையாதா,,,உங்க கடையா தேடி தேடி வரோம்ள,,சரி நீங்க தரலைனா தேவி கட டீ குடிக்க போரேன்,,,,,,,,தருவிங்களா மாட்டீங்களா,,,,,

சஜன்யா

All is well

மேலும் சில பதிவுகள்