தயவுசெய்து உதவவும்... அமெரிக்காவில் மருத்துவரை அணுக உதவவும்

நான் US ல் இருக்கிறேன் இங்கு வந்து 1 1 /2 மாதம் தான் ஆகிறது. இபொழுது நான் 40 நாட்கள் கர்ப்பம். எனக்கு இங்குள்ள டாக்டர்ஸ் பற்றி ஏதும் தெரியாது... என் தோழி ஒருவர் சொன்னார் இங்குள்ள மருத்துவர்கள் நம்ம ஊரு டாக்டர்ஸ் மாதிரி பாக்க மாட்டாங்க. so நீங்க இப்ப டாக்டர் போனாலும் வேஸ்ட் தா. அவங்க ஒங்கள ஒரு மாதம் கழித்து தான் வர சொலுவாங்க... சோ இன்னும் 1 மாதம் கழித்து போய் காட்டுங்கள் என்று. நான் எபொழுது டாக்டர் கிட்ட போகலாம்... bcoz நான் மிகவும் வீக் கா இருக்கேன். இப்ப போய் காட்டுனா நம்ம ooru டாக்டர்ஸ் மாதிரி தப்ளேட் தருவாங்கள அல்லது 1 மாதம் கழித்து வாங்கனு சொல்லுவகளா. ie) wen ll i fix my appointment here. now i m taking folic acid tablet which s prenatal is it gud for me or i ll go to hospital now... pls anyone answer for my doubt... that tablet s not a medical prescription from doctor... pls pls reply for me....

அபிராமி உங்களுக்கு வாழ்த்துக்கள்...
இந்த கேள்வியை நீங்க ஏற்கெனவே கேட்டு இருக்கீங்க அதுக்கு பதிலும் சிலர் கொடுத்து இருக்காங்க..
முதல்ல அவசரப்படாம கொஞ்சம் நிதானமா இருங்க.
நீங்க எந்த ஊரில இருக்கீங்க? வேலைக்கு போறீங்களா? உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஹெல்த் இன்சுரன்ஸ் யார் பே பண்றது. உங்க கணவரா? இல்லை அவரின்/ உங்களின் எம்ப்ளாயரா?
எந்த மாதிரி ஸ்கீம்ல இருக்கீங்க எல்லாவற்றையும் முதல்ல உங்க கணவர் மூலமா தெரிஞ்சுகோங்க பிறகு உங்க இன்சூரன்ஸ் ரெக்கமென்ட் பண்ணியிருக்கிற முதல் ஃபேமிலி பிராக்டிஸ் டாக்டர் அல்லது பிசிஷியனை பாருங்க. உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க. அவங்க நீங்க கற்பம் என்பதை உறுதி செய்தால் அவங்களே உங்க இன்சுரன்ஸ் கவர் பண்ற நல்ல ஓபியிடம்
(OB - குழந்தை பேறு மருத்துவர்)உங்களை அனுப்புவாங்க. பிறகு அதன் படி நடங்க. நம்ம ஊரு மாதிரி மத்தவங்களை கேட்டு இங்கே எதுவும் செய்ய முடியாது. அது மட்டுமில்லாம இங்கே நீங்க எந்த ஊருன்னு கூட சொல்லவில்லை.... அமெரிக்க முழுவதும் ஒரே மாதிரி இருக்காது. இங்கே என்ன ஒரு ஊரு தான் இருக்கா??? இல்லை ஒரு ஓபி தான் இருப்பாங்களா.... இங்கே இன்சுரன்ஸ் இல்லாமல் ஒரு டாக்டரையும் பார்க்க முடியாது அப்படி பார்க்க ரொம்ப அதிக செலவாகும் முழு பில்லையும் நாமே கட்டுற மாதிரி இருக்கும். உங்க கணவரிடம் இதை பற்றி முதல்ல பேசுங்க...!!!

அப்புறம் பிரிநேட்டல், ஃபோலிக்ஆசிட் எல்லாமே ஓவர் த கவுண்டர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் வாங்கி சாப்பிடலாம். பிரிநேட்டல் பிரகனண்ட் ஆகறதுக்கு முன்னமே தொடங்கலாம் தப்பில்லை. வேற ஏதாவதுன்னு அயர்ன் மாத்திரைகள் மற்றதெல்லாம் உங்க ஓபி சொன்னப்புறம் போயி வாங்கி சாப்பிடுங்க.
இப்போ உங்களுக்கு தெளிவா எல்லாம் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

dear pops...

மிக்க நன்றி... தங்கள் பதிலுக்கு. என் கணவரிடம் கேட்டேன் அவர் இன்னும் ஒரு மாதம் கழித்து டாக்டர் ta போகலாம் nu சொலி இருக்காரு. அவர் தா எனக்கு இன்சூரன்ஸ் பெ பண்றாரு. நான் north Carolina ல இருக்கேன். நீங்களும் US தானா...நீங்க எங்க இருக்கீங்க???? உங்கள் பதில் எனக்கு ரொம்ப பயனுல்லதா இருந்தது மிக்க நன்றி...

அன்புடன் அபி

நார்த் கரோலினாவில் எங்கே இருக்கிங்க.. உங்க இன்ஸ்யூரண்ஸ் நெட்வொர்க்ல இருக்கும் டாக்டர்ஸையும் அவங்க ரெவ்யூவும் பாருங்க.. இங்க CMC, carolina medical centre நல்லா இருக்கும்.. இன்ஸ்யூரண்ஸ் கார்ட்ல உங்க பேரு இருக்கனும்னு கேப்பாங்க.. என்கேன்ஸ்ஸுடு ப்ளானானு பாருங்க.. உங்க பெயர் போட்டு வரும் படி கார்டு கேளுங்க.. கவலை வேண்டாம்.. உங்க கணவருக்கே எல்லாம் தெரியும்.. நான் NC தான்.. சார்லட்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

dear ramya...
thanks for ur reply... i lived in durham...i planned to go duke hospital bcoz my husband workin in duke wat r u doing... nice to hear from your answer. u r my first friend in US... so Glad to meet u.......

அன்புடன் அபி

என் இடத்தில் இருந்து 2.30 மணி நேர ட்ரைவில் நீங்க இருக்கிங்க..
முடிந்தால் தமிழில் அடிக்க ட்ரை பண்ணுங்க.. கீழே தமிழ் எலுத்தவி இருக்கும்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

hello ramya
அப்படியா மிக்க நன்றி...எப்பாவது முடிஞ்ச மீட் பண்லாம் நீங்க housewife தனா... ஒகே என்னை மதித்து பதில் தந்ததுக்கு மிகவும் நன்றி...

அன்புடன் அபி

வாழ்த்துக்கள்...........

இந்த லின்குகளைப் பாருங்க.......உங்க பகுதியிலுள்ள டாக்டரை பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்...

http://www.ratemds.com/

http://www.webmd.com/

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நீங்கள் ஏற்க்கனவே இதே கேள்வியை வேறு ஒரு இழையில் கேட்டிருந்தீர்கள். அதில் நான் பதிவு போட்டிருந்தேன். அதை நீங்கள் படித்தீர்கள என்று கூட எனக்கு தெரியவில்லை. (ஏனென்றால் பொதுவாக இழை ஆரம்பிப்பவர்கள் அவர்களுக்குரிய ஏனைய சந்தேகத்தையும் அதே இழையில் கேட்பார்கள் அதுவும் இல்லாமல்...நீங்கள் அதில் எதுவும் பதில் சொல்ல வில்லையா அதான் தெரியலை )

அந்த பழைய லிங்க் இதோ
http://arusuvai.com/tamil/node/19343

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இது அரட்டைக்கான இழை இல்லன்னு தெரியும்,இருந்தாலும் ரம்யா charlotte,NC-ன்னு சொன்னதும் என்னால் ஆர்வக்கோளாறை கண்ட்ரோல் பண்ண முடியல, ரம்யா நானும் Charlotte தான்.. நீங்க charlotte-ல் எங்க இருக்கீங்க? இதற்கான பதிலை நீங்க அரட்டையிலயே சொல்லுங்க.நம்ம அறுசுவையின் முக்கியப்புள்ளி ஒருவர் இங்க இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

அனேக அன்புடன்
ஜெயந்தி

இது தான் நான் உங்களுடன் முதல் முறை பேசுவது..
உங்க ஐடி இருந்தா கொடுங்க.. இல்லைனா யாரிடம் வாங்குவதுனு சொல்லுங்க..
அதில் பேசலாம் ;) .. நீங்களும் சார்லட்டா ரொம்ப சந்தோசம் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்