பிரசவத்திற்குப்பின் சிலபேருக்கு மட்டும் வயிறு

வணக்கம் அன்புத்தோழ, தோழிகளே! நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களோடு அறுசுவை மூலம் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. சரி நான் கேட்க வந்த விடயம் பிரசவத்திற்குப்பின் சிலபேருக்கு மட்டும் வயிறு பழைய மாதிரியே ஒட்டியவயிறாக இருக்கின்றது, அது நார்மல் டெலிவரியாக இருந்தாலும் சரி சிசேரியனாக இருந்தாலும்சரி அது எப்படி சாத்தியமாகிறது? இது எனது கேள்வி மட்டுமல்ல எனது கவலையும் தான். என்க்கும் 2 குழந்தைகள். 2மே சிசேரியன். 2 வது குழந்தை பிறந்து 5 மாதங்களாகிறது என் வயிறு இப்போதும் 4 மாத கர்ப்பம் போல பெரிதாக இருக்கு.இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா? வாழ் நாள் முழுவதும் இந்தவயிறு இருக்குமா? ப்ளீஸ் யாராவது நல்ல பதிலை சொல்லுங்களேன்!

இதை பற்றி மன்றத்தில் ஏற்க்கனவே நிறைய பேசியாச்சு....அதில் அனேக பேர் ஆலோசனை கூறியுள்ளார்கள். அங்கே பார்த்தால் தீர்வு உண்டா இல்லையா என்று உங்களுக்கே புரியும் :) ...............நிறைய பேசியதால் தான் யாரும் பதில் போட வில்லை :(

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்