நல்ல தேனை வீட்டிலேயே

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

நல்ல தேனை வீட்டிலேயே எப்படி சோதனை செய்து பார்ப்பது.
என்று கூறுங்கள்

தேன் எவ்வளவு சுத்தம்’னு கண்டு பிடிக்க சில வழிகள்:

1. முதல்ல கொஞ்சம் தேனை எடுத்து ஒரு கப் நீரில் விடுங்க. தேன் கொஞ்சமும் நீரில் கலக்காம அப்படியே போய் நீரின் அடியில் தங்கினால் அது சுத்தமான தேன்.

2. மெழுகின் முனையை (அந்த நூல்) தேனில் முக்கி எடுத்து விட்டு பத்த வைங்க... சுத்தமான தேனாக இருந்தால் நிச்சயம் எறியும்.

3. துணியில் தேனை விட்டுவிட்டு அலசிடுங்க... கரை படியாம போனா சுத்த்மான தேன்.

இதெல்லாம் நெட்டில் படிச்சது... நீரில் கரைக்கும் டெஸ்ட் மட்டுமே நான் செய்தது உண்டு. உங்களுக்கு எது செய்து பார்க்க முடியுதோ செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த தேன் டவுட் எனக்கு ரொம்ப நாளாவே இருந்தது.... சின்ன சின்ன சந்தேகம் பகுதில கேக்கலாம்ன்னு இருந்தேன்...... நல்ல வேளை இதுக்கு ஒரு இழை ஆரம்பித்து என் டவுட்டும் க்ளியர் ஆகிடுச்சு.....

அமுதா உங்களுக்கும் என் தேங்க்ஸ்..... :)

வனிதா மற்றும் தீபாவுக்கு நன்றிகள் பல. சென்ற வாரம் எல்லாம் எங்கள் சிஸ்டம் ப்ராப்ளம். அதனால்தான் இந்த தாமதமான நன்றி.

சுத்தமான தேன் மதுரையில் எங்கு கிடைக்கும்.
மதுரை தோழிகள் யாராவது கூறுங்கள். காதியை தவிர. ஏனெனில் காதியிலும் சுத்தமான தேன் கிடைக்கவில்லை.

சுத்தமான தேன் சிங்கபூரில் எங்கு கிடைக்கும்?

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்