சொல்ல விரும்பினேன் - 5 !!

நம்ம முந்தைய சொல்ல விரும்பினேன் 100 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

இதோ புது சொல்ல விரும்பினேன் பகுதியோட வந்துட்டோம்ல... நாளைக்கும், அடுத்த நாளும் என் மகளுக்கு பள்ளி விடுமுறை ஆச்சே... அதான் நம்ம நிம்மதியா வந்தாச்சு!!!

இந்த புது சொல்ல விரும்பினேன் பகுதியில் நான் ஒரு இனிமையான அனுபவத்தை பற்றி எழுத விரும்புறேன். அது என்னன்னு கேட்குறீங்களா??? என் சிறு வயது அனுபவம்.... என் பாட்டியோடு நான் செலவிட்ட நிமிடங்கள், நாட்கள். இதை கருவாக கொண்டு ஒரு சிறு கதை எழுத பல மாதங்கள் சிந்தித்தேன்... நேரம் போதாத காரணமோ இல்லை பக்கங்களை குறைக்க முடியாத காரணமோ.... அப்படியே இருக்கிறது. சிறு கதையாக குறைக்க முயற்சித்த போது பல இனிமைகளை இழக்க நேர்ந்தது... அதனால் ஒரு உண்மை சம்பவமாகவே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இனி ”நீங்கள் விரும்பினால்” அடுத்த பதிவில் பள்ளி விடுமுறையில் பாட்டியுடன் கிராமத்தில் கழிந்த நாட்களை இங்கே பதிக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா இப்படி சொல்லிட்டிங்க நீங்க உங்க கதை யை சொல்லுங்க நாங்க கேட்க ஆவலாக உள்ளோம்

கட்டாயமா எழுதுங்க வனிக்கா ரொம்ப ஆவலா இருக்கு படிக்க. எப்போனு எதிர்பார்ப்பு ஏற்படுத்தீட்டீங்க. நிச்சயம் சுவாரஸ்மா தான் இருக்கும். அந்த அனுபவங்களை ஒரு சிறுகதையா சுருக்கிடாமல் நடந்தாவற்றை அப்படியே எழுதினால் ரொம்ப நல்லா இருக்கும் அதை படிக்க இன்னும் சுவாரஸ்மா இருக்கும். எதை மிஸ் பண்ணிடாதீங்க

விடுமுறை நாட்களில் பாட்டியின் கதையா
நான் பிறந்ததுமுதல் பாட்டியின் அரவணைபில்தான் வளர்ந்தேன் அம்மா வேலைக்கு சென்றுவிட்டதால் 1 வயது முதல் அப்பாவின் அம்மாவிடமும் சில நாட்களுக்குபின் காலத்தின் கட்டாயத்தால் அம்மாவின் அம்மாவிடம் திருமணம் முடியும் வரையும் திருமணத்துக்குபின் என் கணவரின் பாட்டியுடனும் தான் இருந்தேன் இப்போது ஒரு வருடமாக தான் பாட்டி(களின்)யின் துணை இல்லை நாங்குளும் நிறைய எழுதுவோம்முல

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

அனுஷா, யாழினி... மிக்க நன்றி. :) ஆனா நம்ம மீரா தான் எப்பவுமே பாட்டிகள் கூடவே இருந்திருக்காங்களே... அவங்க எழுதினா இன்னும் நல்லா இருக்கும். சரி தானே மீரா... வாங்க நீங்க எழுதுங்க, படிக்க நாங்கலாம் காத்திருக்கோம் :) எங்களுக்குலாம் எப்பவோ ஒரு முறை அந்த வாய்ப்பும் அதிர்ஷடமும் கிடைத்தது, உங்களுக்கு வாழ்க்கை முழுக்க கிடைச்சிருக்கு... அதிர்ஷ்டம் தான். வந்து எழுதுங்க உங்க அனுபவத்தை... காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள வனிதா, எப்படி இருக்கீங்க?

பாட்டி கதையை சொல்லுங்க. கேட்க ஆவலாக இருக்கோம். மீரா நீங்களும் சொல்லுங்க..

என்றும் அன்புடன்,
ஆர்த்தி

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

நான் அவர்களோட இருந்த அனுபவங்களை சொல்றதுக்கு முன்னாடி அவங்களை பத்தி சொன்றேன்

அப்பாவின் அம்மா

இவங்க பேர் மீனாட்சி
20 வயதில் திருமணம் முடிந்து 4 பிள்ளைகளின் தாய்(2 பெண், 2 ஆண்)
முதல் பெண்ணின் திருமணம் முடிந்ததும் கணவர் இறந்துவிட குடும்பத்தை தானே நடத்தி மற்ற பிள்ளைகளின் திருமணத்தை முடித்தவர்

என் அப்பா இவரின் 3வது பிள்ளை. ரொம்ப அன்பானவர் கூட்டு குடும்பமாய் இருந்தபோது 4 ம்ணிக்கு எழுந்து வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வார்
வீட்டில் இருப்பவருக்கு மட்டும் சமைக்க மாட்டார் பக்கத்து வீடு எதிர் வீடு என யார் வீட்டிலாவது அவர்கள் மனைவி ஊருக்கு சென்று விட்டால் அவர்களுக்கு எங்கள் வீட்டில் இருந்து தான் சமையல்

வீட்டுக்கு வருபவர்க்கு யாருக்கு என்ன பிடிக்கும் என கேட்டு அவர் அடுத்த முறை வரும் போது மறக்காது செய்து கொடுப்பார். வீட்டில் என்ன இருக்கு என்ன இல்லை என்று எதுவும் எங்களுக்கு தெரியாது எப்ப எது கேட்டாலும் உடனே கிடைக்கும்(இப்ப எல்லாம் ரெண்டு பேருக்கு சரியா சமாளிக்க முடியல)

தனது 70வது வயதில் ஒரு மகனையும், 82வது வயதில் ஒரு மகளையும் பறிகொடுத்து இப்போது இது எல்லாம் மறந்து ஒரு குழந்தை போல் 88வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

அம்மாவின் அம்மா

இவங்க பேரு சந்திரா
இவங்க பொறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளாவில். 10 வரை படித்தவர்,தையல் வேலை ரொம்ப நல்லா தெரியும், தனது 14 வயது முதல் தனது தம்பி தங்கைகளை பார்த்துக்க ஆரம்பிச்சவர்.18 வயதில் அப்பா வாதம் வந்து படுத்துவிட குடும்ப பொறுப்புகள், 4 ஏக்கர் நிலம், தம்பி தங்கைகள்(அப்போது கடைசி தம்பியின் வயது 6 மாதம்) எல்லாவற்றையும் பொறுப்பாய் நிர்வாகித்தவர.

27 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தம்பி தங்கைகள் ஒரு நிலைக்கு வந்த பின் திருமணம் செய்து கொண்டவர். இங்கு வந்து குடும்ப பொறுப்புகளை விடாது செய்தவர் இன்றும் தனது 76 வயதில் தனது 88 வயது கணவனுக்கு அனைத்து பனிவிடைகளையும் தானே செய்கிறார்.இப்போது வீட்டு நிர்வாகம் சமையல் அனைத்தும் இவரே.

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

உங்க பாட்டிகள் இருவருமே ரொம்ப கஷ்டத்துலையும் சாதிச்சவங்க.... பெரிய மதிப்புக்கு உரிய பாட்டிகளிடம் வளர்ந்திருக்கீங்க. படிக்கும்போதே பெருமையா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கணவரின் பாட்டி(அம்மாவின் அம்மா)

இவங்க பேரு லதா. அந்தகாலத்துலயே english mediumல 12 படித்தவர் அப்பா டாக்டர். bangloreரில் வளந்தவர். ஆனால் விவசாயத்தை தொழிலாக செய்யும் தாத்தாவை மணந்து ஒரு கிராமத்துக்கு வாழ வந்தவர்.மூன்று பெண்கள் மூன்று பேரையும் degree படிக்க வைத்தவர்.

முதல் பெண்னின் திருமணவாழ்க்கை சரியாக அமையாத்தால் அவரது குழந்தைகளை பொறுப்புடன் பார்த்து அவர்கள் திருமணம் வரை அவ்ர்களை தன்னோடு வைத்து பாதுகாப்பாக வளர்த்தவர்.

மிகுந்த மனோ தைரியாசாளி,அறிவாளி,முற்போக்கு சிந்தனை உடையவர்,extrovort, இன்று நாட்டு நடப்பு முதல் தங்கம் விலை,ஒபாமா, google,mp3,cd,cell phone, dth என எல்லாம் அறிந்தவர் இன்றும் கற்று கொள்ளும் ஆர்வம் குறையாமல் எல்லாவற்றையும் அலசி ஆராய்பவர்.76 வயதில் கொஞ்சமும் நினைவாற்றல் குறையாமல் bank விஷயம் முதல் வீட்டு நிர்வாகம் வரை கணக்கு வழக்குகளை கவனித்து கொள்பவர்.

இனி இவங்களுக்கு எனக்குமான இனிய நினைவுகளை அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்