வனிதா, தோழிகள் உதவி தேவை

தோழீஸ்,நாளை இந்தியா (வகேஷன்) வருகிரோம்.உங்கள் உதவி உடனே தேவை.இங்குள்ள அமெரிக்க நண்பர்களுக்கு இன்தியாவிலிருன்து என்ன கிப்ட் (gift)வாங்கி வரலாம்? எங்கு வாங்கலம் சென்னையில், சொல்லுங்கப்பா!

பிரியா ,
எப்படி இருக்கீங்க?பேசி நாளாச்சு..

உங்க இழையில் நானும் கேட்டுக்கிறேன்..
நான் கூட சென்னை செல்ல உள்ளேன் . இங்கு(அமெரிக்காவில்) இருந்து சென்னைக்கு என்ன வாங்கி செல்லலாம் ..அங்கு(சென்னையில்) இருந்து என்ன வாங்கி வரலாம்?

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, எப்படி இருக்கீங்க? ஆமாம்பா பேசி ரொம்ப்ப நாளாச்சு.உங்க சமயல் குரிப்புக்கள் நிறைய பார்த்து செய்து பார்ப்பேன்.நல்ல நல்ல சுவையான குறிப்புக்கள் நிறைய தந்திருக்கிரீர்ள். பின்னூட்டம் அனுப்பதான் நேரமில்லை..அதான் இப்ப சொல்ரேன். (தப்பா எடுத்துக்காதிங்க).நம்ம தோழிகள் பதில் தருவாங்க், வெயிட் பண்ணுவோம்.

நம்ம ஊரில் கிஃப்ட்க்கா பஞ்சம்???

1. நல்ல கைவினை பொருட்கள் வாங்கலாம்...

- மர வேலைப்பாடு
- நம்ம ஊர் சந்தன பொருட்கள்
- ஆண்டிக் வேலைபாடு
- நம்ம ஊர் பெயிண்டிங்
- அழகான சின்ன சின்ன கைவினை பொருட்கள், பொம்மைகள்

2. பட்டு (புடவை, ஷால், சல்வார் என ரகம் கொட்டி கிடக்கே)

3. நம்ம ஊர் கைவேலை செய்த ஹேண்ட் பேக்ஸ்

இதெல்லாம் தமிழ் நாட்டு ஸ்பெஷலா வாங்கலாம்...

பொதுவா இந்தியாவுதுன்னு பார்த்தா

1. குர்தீஸ்

2. ஆண்களுக்கும் ஜீன்க்கு மேல போடுறது ஒன்னு வருமே... நம்ம சுடி போல அது பேரு நினைவு வரல...

3. கேஷ்மீரி ஷால்ஸ்

4. ஃபேஷன் ஜுவல்லரீஸ்

5. நம்ம நாட்டு ஸ்வீட்ஸ்

- இது வெறும் ஐடியா தான்... இந்த பேஸ்’ல யோசிங்க, தேடுங்க, இன்னும் நிறைய கிடைக்கும் :) நான் சிரியாவில் இருந்த போது என்னிடம் அந்த நாட்டு மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வர சொல்லி கேட்பது இவை தான்.

ஒரு குட்டி ரெக்வஸ்ட்:

தலைப்பை தமிழில் மாற்றுங்க ப்ரியா... ப்ளீஸ்... எல்லாரும் வருவாங்க, நிறைய சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க, 'கண்ணம்மா புத்தம் புதிது'ல கூட இது கேட்டிருன்தேன்.இழை உள்ள போயிடுத்து.அதான் புதுசு.பதிலுக்கு நன்றிப்பா.

இங்கிருந்து வாங்கி போக.... அப்படி ஒண்ணுமே பெரிசா இல்லன்னு தான் சொல்லணும். ஏன்னா எல்லாமே நம்ம ஊரிலும் கிடைக்குது. அதையும் மீறி எனக்கு தெரிஞ்ச கொஞ்சம்...

# இங்கே கிடைக்கும் ஃபேஷன் ஜுவல்ஸ் சின்ன பொண்ணுங்க, வயசு பொண்ணுகளுக்கு வாங்கலாம்.
# அதேப்போல சின்ன சின்ன மேக்கப் கிட்ஸ்.
# ஃபேன்சி, டிசைனர் வாட்ச் ஆண்களுக்கும் பெண்களுக்கும்.
# மறக்காம கொஞ்சம் வித்தியாசமான சாக்லேட்ஸ் வெரைடிஸ்.
# மேசிஸ்ல நல்ல பர்ஃபியும் வெரைடிஸ் இருக்கு. கொஞ்சம் காஸ்ட்லி தான் என்றாலும் மிகவும் முக்கியமானவங்களுக்கு வாங்கலாம், அதேப்போல நல்ல குவாலிட்டி மேக்கப் ஐடம்ஸ் கூட இங்கே கிடைக்கும்.

இன்னும் நிறைய இருக்கு ஞாபகம் வந்தா சொல்றேன்.

உமா, எப்படி இருக்கீங்க? உங்க பதிலுக்கும் தேங்க்ஸ்பா.அங்க இருன்து என்ன எடுத்துண்டு வருதுன்னும் சொன்னா உதவியா இருக்கும்.

பிரியா நல்லா இருக்கேன்...நீங்களும் குழந்தைகளும் நலமா? நாளைக்கு ஊருக்கு போறேன்னு சொன்ன மாதிரி இருக்கு.... என்று கிளம்பறீங்க???
அங்க என்னவெல்லாம் கிடைக்கும்ன்னு வனிதா தெளிவா சொல்லிட்டாங்க... நாம யாருக்கு கொண்டு வரோம்ன்னு பார்த்து வாங்கனும்.
உங்களோட அமெரிக்கன் ஃபிரண்ட்சா? , இல்லை நார்த் இந்தியன் ஃபிரண்ட்சா?? அமெரிக்கன்ஸ் என்றால் எதுவேண்டுமானாலும் வாங்கலாம். நார்த் இந்தியன் என்றால் அவங்களிடம் ஃ ஸ்பெஷலா என்ன வேணும்ன்னு கேட்டா அவங்களும் தெரிஞ்சதை சொல்லுவாங்க.

*** தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் ரொம்ப நல்லா இருக்கும்... அழகு அழகான பொண்ணு பொம்மைகள் நடனம் ஆடுவது போல இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். வேலைப்பாடமைந்த யானைகள் பொம்மை இது போல நிறைய இருக்கு...
*** மர வேலைகள் செய்த ஷோகேஸ் பொருட்கள், மூங்கில் மூலம் செய்த பொருட்கள். சந்தன மர பிள்ளையார் இப்படி... அதற்கான தனிப்பட்ட கடைகளுக்கு போனா நிறைய வெரைடிஸ் கிடைக்கும்.
*** அமெரிக்கன்ஸ் - ஆக இருந்தால் நம்ம ஊரு ஸ்நாக்ஸ் கண்டிப்பாக எடுத்து வாங்க. நார்த் இந்தியன் - ஆக இருந்தால் நம்ம தமிழ் நாட்டு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் கண்டிப்பாக கொண்டுவாங்க.

அப்புறம் வேற ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்றேன்.

மேலும் சில பதிவுகள்