சூஜி அல்வா

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவா - ஒரு கப்
சீனி - ஒரு கப்
நெய் - 100 கிராம்
முட்டை - 2
வற்றிய பால் - 2கப்
முந்திரிப்பருப்பு - 10
கேசரி பவுடர், உப்பு - அரை சிட்டிகை


 

முதலில் ரவாவை வாசம் வரும் வரை லேசாக வறுத்து ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
முட்டையை நன்றாக கலக்கி அத்துடன் சேர்த்து, சீனி, நெய், வற்றிய பால், உப்பு, கேசரி பவுடர் அனைத்தையும் போட்டு கலந்து அடுப்பில் வைத்து ரவா வேகும் வரை கிளற வேண்டும்.
கடைசியாக முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அதன் மேல் கொட்டி இறக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சகோதரியே வற்றிய பால் என்றால் என்ன?

அன்புள்ள சசிகலா! வற்றிய பால் என்றால், பாலை வற்றவைத்து கிடைப்பது. சுலபமாக செய்ய விரும்பினால், சுகர் இல்லாத கன்டன்ஸ்டு மில்கில் செய்யலாம்.