கிச்சன் கலாட்டா(புதுப்பொலிவுடன்)

-- ஹாய் தோழிஸ், என்னடா தலைப்ப தலைகீழ போட்டு இருக்காங்களேன்னு பார்க்கறீங்கலா?????? ஆமாங்க நான் தான் கணக்கபிள்ளை ;)))) இந்த பகுதியை கொஞ்ச நாளைக்கு நான் தலைமைதாங்க போகிறேன்.
(யாழியின் உதவியோடும் உங்க அனைவரின் ஆதரவோடும் ).;)))

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்;) ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இன்று முதல் கிச்சன் கலாட்டா ஆரம்பம். தயவு செய்து தோழிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்;)

"கூட்டாஞ்சோறு" பகுதியிலிருந்து நாம் சமைக்க இருக்கும் குறிப்பு

ஹமீது பாத்திமா---- 37

ரம்யா கார்த்திக் --- 26

சுவர்ணா விஜயகுமார் --- 25

இவற்றில் இருந்து வரும் 04.07.2011 ஆம் தேதி முதல் 11.07.2011 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை சூட்டப்படும்......

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் பை ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை தேவி....(முதல் முறையாக) செல்ல கொட்டு வாங்க தயாராக வந்திருக்கிறேன். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.....

ஹாய் தேவி நீதான் கணக்குபுள்ளையா ஒரே காமெடி போ. சரி சரி முதல் முதலில் நான் தான் பதிவு போடுகிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம். இன்று இரவு முதலே என் சமையலை ஆரம்பித்துவிடுகிறேன். ஒவ்வொரு நாளும் என்ன குறிப்பு செய்கிறேன் என்று சொல்கிறேன். மறக்காமல் குறித்தி வைத்துக் கொள். என் மேல் இருக்கும் போட்டியால் தவறாக கணக்கு எடுத்துக் கொள்ளாதே! சரியா. வாழ்த்துகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்டா.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் புது கணக்குபிள்ளை வாங்க வாங்க :)

வாழ்த்துக்கள் தேவி :)

இன்று என் மெனு :

ரமயாகார்த்திக் --- முருங்கைக்காய் சாம்பார்,

பவித்ராராம் --- பட்டை அவரை பொரியல்,

தேவி கணக்கு வச்சிக்கோ மறந்துடாதே :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புதுகணக்கபிள்ளையே வருக வருக. புது பொலிவுடன் புது குறிப்புகளுடனும் புது கலட்டா கிச்சன் ஆரம்ப ஆகியாச்சு. எல்லாரும் வந்து இந்த பகுதி சிறப்பாக அமையா ஒத்துழைப்பு தாங்க. நம்ம புது கணக்கபிள்ளைய உற்சாகப்படுத்தலாம் வாங்க.

தேவி இன்றிலிருந்து நானும் சமைக்க தொடங்க போகிறேன் செய்து விட்டு வந்து பதிவிடுகிறேன். நீ கணக்கு எடுத்துக் கொள்

ஹாய் கணக்கு பிள்ளை.

இன்று இரவு

ரவா தோசை - பவித்ரா
தக்காளி தொக்கு - சுமதி

கணக்கு வைத்துக் கொள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வணக்கம் தேவி முதல் முறையாக கணக்குபிள்ளை வாழ்த்துக்கள்..நானும் இன்றைக்குத்தான் முதல் முறையா கலாட்டா கிட்சென் வறேன்...

********************************

கோதுமை பரோட்டா - hameed fathima

கடலை குழம்பு - சுவர்ணா

********************************

இவைதான் நான் இன்று இரவு சமைக்க போகிறேன். இரவு நான் வழக்கம்போல செய்ற சப்பாத்திதான் செய்லாம்னு இருந்தேன் இங்கே கலாட்ட கிட்சென் பார்த்தேன் கொஞ்சம் வித்யாசமா நம்ம தோழிகளோட குறிப்பை தேர்ந்தெடுத்து இருக்கேன்..

கடலை ஊற வைக்க போகிறேன் நாளை வந்து எப்படி இருந்ததுன்னு சொல்றேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கணக்கு பிள்ளைக்கும் மற்றும் பங்குபெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.நானும் என்னால் முடிந்ததை அவ்வபோது செய்கிறேன்.
ஒரு சந்தேகம்:ஏற்கெனவே புகைபடத்துடன் இருக்கும் குறிப்புகளையும் சமைத்து பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் புகைபடம் எடுத்து அனுப்ப வேண்டுமா?

இதுவும் கடந்துப் போகும்.

புது கணக்குபிள்ளையாக பொறுப்பேற்றுள்ள தேவிக்கு வாழ்த்துக்கள். இப்போதுதான் குறிப்பு பார்த்து வைத்துள்ளேன். செய்துபார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.

அஸ்வினி //புகைபடத்துடன் இருக்கும் குறிப்புகளையும் சமைத்து பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் புகைபடம் எடுத்து அனுப்ப வேண்டுமா?//தேவையில்லை. செய்து பார்த்த குறிப்பின் கீழ் உங்கள் கருத்துகளை கூறலாம். படத்துடன் அல்லாத வெறும் குறிப்பை செய்துபார்த்து படம் எடுத்து அனுப்பலாம்.

முதல்ல இந்த பகுதியை திரும்ப துவங்கினதுக்கு வாழ்த்துக்கள் :)

சுமதி, பவித்ரா குறிப்புகள் ஏற்கனவே செய்துட்டோமே... ஏன் அதையே இப்பவும் எடுத்திருக்கீங்க??? மீண்டும் கீழிருந்து வந்தா மேலே போகும் முன் தொங்கிடும்... அதனால் கீழே புதிதாக இணைந்தவர் குறிப்புகளை மட்டும் செய்ய ஆரம்பிக்கலாம்... இது தான் என் யோசனை... முன்பு விட்டதை தொடரலாம் என்பது... அப்படி பார்த்தா இது பகுதி 10ன்னு நினைக்கிறேன். உங்களுக்கு இப்படியே தொடர தோனுச்சுன்னா உங்க விருப்பம்... தோழிகள் ஆலோசனையும் கேட்டுக்கங்க. நான் வழக்கம் போல் பங்குபெற வருவேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தேவி,புதுகணக்கு பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.புதுப்பொலிவுடன்

கிச்சன் கலாட்டா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்டா.

அன்புடன்
நித்திலா

ஹாய் ரேவதி,ஸ்வர்ணா,யாழினி,குமாரி, வினோஜா,வனிதா நீங்கள் என்னை தயவுசெய்து மன்னியுங்கள். இந்த கணக்குபிள்ளை பொறுப்பை முதல்முறையாக ஏற்றுகொண்டதால் தவறு நடந்துவிட்டது. முன்பு எடுத்த குறிப்பை மீண்டும் எடுத்துவிட்டேன். சாரி......

ஹாய் ரேவதி, உங்க பதிவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி;) உங்க மேல போட்டியெல்லாம் இல்ல கண்டிப்பா கணக்குல கவனமா இருக்கேன். ரேவதி நான் குறிப்பு மாத்தி இருக்கேன்.நீங்கள் செய்த 2 குறிப்பையும் கணக்கில் ஏற்றி கொள்ளமுடியாது. சாரி......

ஹாய் ஸ்வர், ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய ஒரு குறிப்பு அதாவது ரம்யா குறிப்பு மட்டும் கணக்கில் சேர்த்து கொள்கிறேன். சாரி.....

யாழி, உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி;)

ஹாய் குமாரி, வணக்கம் ;) ரொம்ப நன்றி குமாரி. பவித்ரா ராம் குறிப்பு முன்பு செய்ததால் நான் பெயர் மாற்றி இருக்கேன். மேல குறிப்பிட்டுள்ள 3 பேர் குறிப்பை எடுத்து செய்ங்க ப்ளீஸ்.. நீங்கள் செய்ததில் இருந்து சுவர்ணா குறிப்பு மட்டுமே கணக்கில் வைக்கிறேன். சாரி..

ஹாய் அஸ்வினி,வாழ்த்துக்கு நன்றி;) கண்டிப்பா செய்து அசத்துங்க ஆனால் நான் மேல குறிப்பிட்டு இருக்கும் 3 பேர் குறிப்புகளில் இருந்து செய்யனும். நீங்க கேட்ட சந்தேகத்திற்க்கு பதில். வினோ சொல்லி இருக்காங்க.உங்க வீட்டில் நீங்க செய்யும் சமையலை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். இங்கு இல்லாத குறிப்பு அனுங்க;)))))

ஹாய் வினோ, ரொம்ப நன்றிடா, சீக்கிரம் செய்துட்டு இங்கு வந்து பதிவு போடுங்க;)))))

ஹாய் வனி, உங்க வாழ்த்தை நான் ஏற்றுக்கொள்கிரேன். நன்றி;) கண்டிப்பா நீங்க கலந்துகோங்க. உங்க கோரிக்கை ஏற்றுகொண்டு பெயர் மாற்றிவிட்டேன். நன்றி வனி;)))

ஹாய் நித்தி, ரொம்ப நன்றிமா;) அவசியம் நீயும் கலந்துகோமா;))))))

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்