தனுராசனம் செய்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் தீருமா ?

தோழிகளே யோகாசனத்தில் தனுராசனம் செய்தால் ,பெண்களின் மாத விலக்கு பிரச்சனைகள் நீங்குமா ?உடல் குறைய வாய்ப்புகள் உண்டா ?யாரேனும் இதை செய்து பலனடைந்து உள்ளாரா ?ப்ளீஸ் தோழிகளே தெரிந்தவர்கள் கூறவும் ..
நான் கூகுள் செய்து பார்த்தேன் ,நீங்கள் செய்தவர்கள் யாரேனும் இருந்தால் இதை பற்றி தெளிவாக கூறுங்கள் தோழியரே ,இங்கே அனைத்து தோழிகட்கும் பயன்படும் விதத்தில் தெரிந்த தோழிகள் வந்து கருத்தை கூறவும் ..

பாரதி,

நீங்கள் இணயத்தில் பார்த்தது சரியே... இந்த ஆசனம் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் ,உடல் பருமன் மட்டும் இல்லாமல் கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து பாதம் வரை பல உறுப்புகளையும் பலப்படுத்தவும் ரத்த நாளங்கள் நன்கு இயங்கும் வண்ணம் தூண்டிவிடவும்,நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தவும் செய்கிறது.

ரத்த அழுத்தக் குறைபாடு,செரிமானத்தை சீர்படுத்துவதுடன் டையேரியா,குடல் பலஹீனம் போன்றவை ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது..

மொத்ததில் மிகச் சிறந்த ஆசனமே :)..

மாதவிலக்குப் பிரச்சினைக்கு யோகாவில் மேலும் சில ஆசனங்களும் இருக்கின்றன..உடல் பருமன் குறைவதென்பது அவரவரின் உடல் வாகைப் பொருத்தது..ஒரு சிலருக்கு உடனே குறையும் ஒரு சிலருக்கு நாளாகும்.. ஆனால் உள்ளுறுப்புகளின் இயக்கதை சீர் செய்வதில் உடற்பயிற்சியை விட யோகாதான் பெஸ்ட்.. அதுமட்டும் இல்லாமல் உடலுக்கு நல்ல flexibility யும் கிடைக்கும்..

வீடீயோவில் பார்த்தோ, கேட்டோ செய்யாமல் யோகாவை ஒரு குரு மூலமாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.. ஏனினில் ஏற்கனெவே ஏதேனும் உடல் நலக் குறைவு இருப்பின் சில ஆசனங்களைத் தவிர்க்க வேண்டும்.. அவற்றை எல்லாம் தெரிந்து செய்ய வேண்டும்..

நீங்க தமிழ் நாட்டில் இருப்பதானால் வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றம் செல்லலாம்.. எனக்குத் தெரிந்து அங்கே அடிப்படையான ஆசனங்களை இலவசமாவே சொல்லிக் கொடுக்கிறார்கள்..

யோகா செய்தால் பலன் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் எல்லாம் தேவையே இல்லை ;) நீங்க தாராளமா ஒரு நல்லா யோகா சென்டர் ல ஜாயின் பண்ணுங்க..அது உங்க உடலுக்கு மட்டும் நல்லது இல்லை மனதுக்கும் ரொம்ப ரொம்பவே நல்லது... :) ஆனால் தொடர்ந்து செய்யுங்க..

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.. எனக்குத் தெரிந்த வரை கூறுகிறேன்..

YOGA SEYVATHU NANRAGA ULLATHU AANAL KIRUSTHUKKUL SEYVATHU NERUDALAGA ULLATHU ENAKU THELIVANA VILAKKATHUDAN PATHIL VENDUM PLEASE ENNAKKU UTHAVUNGAL

THANK YOU

REGARDS

R. DHARANI RAJ

மேலும் சில பதிவுகள்