சென்னையில் டிசைனிங் ப்ளௌஸ் தெய்ப்பவர்கள் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிஸ்....

அன்பிற்குரிய அறுசுவை தோழிகளே....

கல்யாணம் மற்றும் இதர முக்கியமான விசேஷங்களுக்கு அணிந்து செல்லக் கூடியே டிசைனிங் ப்ளௌஸ் தெய்க்கும் டைளர்கள், யாராவது சென்னையில் தெரிந்திருந்தால் எனக்கு அவர்களின் முகவரி தந்து உதவுங்கள் தோழிஸ்.....

என் தங்கையின் திருமணத்தை முன்னிட்டு அவளுக்கு சற்று விசேஷமாக ப்ளௌஸ் தெய்க்கலாம் என்று தேடி கொண்டிருக்கிறேன்.... அவ்வாறு நான் தேடியதில் கிடைத்த டைளர்கள், நாங்கள் வாங்கிய பட்டு புடவை விலையை விட அதிகமாக தையல் கூலி கேட்கிறார்கள்...

திறமை மிக்க தரமான டைளர்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்..... அவ்வாறு நடுத்தரமான பட்ஜெட்டில் தெய்க்கும் நல்ல டைளர்கள் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லி உதவுங்கள்.....

அன்பான தோழிகளே...

சென்னையில் டிசைனர் ப்ளௌஸ் தெய்க்கும் நல்ல டைளர்கள் யாராவது உங்களுக்கு தெரிந்திருந்தால் அவர்களை பற்றிய விவரம் எனக்கு தந்து உதவுங்கள் தோழிஸ்.....

ரொம்ப காஸ்ட்லியாக சார்ஜ் செய்பவர்கள் அல்லாமல், நடுத்தரமாக பட்ஜெட்டில் தைத்து தருபவர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்....

அன்பு தீபா,

வடபழனியில் “உல்லாஸ் டெய்லர்ஸ்” என்ற கடை இருக்கு. உங்களுக்குப் பிடித்தமான டிசைன் - ஃபோட்டோ எடுத்துட்டு, அது மாதிரி தைக்கணும்னு கேட்டுப் பாருங்க. இவர்கிட்ட சார்ஜ் அதிகமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்.

(கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் தெரு) அந்த ஏரியாவில் கேட்டுப் பார்த்தீங்கன்னா, இடம் கரெக்டாக சொல்லிடுவாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹேய் தீப்ஸ், சுவாகிட்ட கேட்டு பார்த்து பார்த்து நொந்து போயி தனி இழையே ஓபன் பண்ணிட்டியா? இந்த பாவம் சுவாவை சும்மா விடாது ;)) இந்த தீப்ஸை இப்படி பொளம்ப விட்டுட்டாங்களே... சரி விடுப்பூ... நம்ம சீதாம்மா சொன்ன அட்ரஸ்ல ட்ரை பண்ணி பாரு.... அப்படியும் இல்லைனா நம்ம வனி வருவாங்க. அவங்க தான் ஆல் இன் ஆல் அலகு ராணியாச்சே :) அப்புறம் பயமேன்.... எனக்கும் இந்த தகவல் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். நான் வழக்கமா ராயப்பேட்டைல ஒரு டைலர்கிட்ட கொடுத்து தைப்பேன். ஆனா அவர் பேன்ஸி பிளவுஸ் தைப்பாரான்னு தெரியல. ஆனா ஜெனியூன் டைலர். சொன்ன டைமுக்கு முன்னாடியே தந்துடுவார். இந்த காலத்துலயுமெ இப்படி ஒரு டைலரா? நம்ப முடியலல? :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தோழி,
தீபாவுக்கு வணக்க்கம் என் பெயர் முத்து மாரி நான் உங்கள் கருத்தை படித்தேன். உங்களுக்கு டிசைன் ப்ளவுஸ் தைக்க விருப்பபடுவதாக சொல்லி இருந்தீர்கள். நாங்கள் டிசைன் பிளவுஸ் வெளியில் தைத்து கொடுக்கும் வேலை தான் பார்க்கிறோம். அதனால் உங்கள் ஆர்டரை எங்களிடம் தரலாம். நீங்கள் விரும்பும் டிசைன் எதுவானாலும் தைக்கலாம். டிசைனை பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படும். விலை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை இருக்கும். நாங்கள் வடசென்னையில் வசித்து வருகிறோம். நீங்கள் வசிக்கும் ஊர் மற்ற விவரங்களைபற்றி(அட்ரஸ்) எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மற்ற விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்
நன்றி!

முத்துமாரி சிவசக்திவேல்

ஹை... டிசைனர் பிளவுஸா??? கலக்குங்க. எனக்கு தெரிஞ்ச இடம் சில இருக்கு... ஆனா துல ரொம்ப நல்லா நம்மல அசத்தும் விதமா தைக்கும் கடைன்னு சொன்னா “பெனாச்”. இது வேளச்சேரி - தாம்பரம் வழியில் இருக்கு. ஆனா விலை கேட்டா தலை சுத்தும் ;( அதாவது இவங்ககிட்ட சாதாரண லைனிங் ப்ளவுஸ் வேறு விதமா, இல்ல சும்மா டிசைன்(பேட்டர்ன்) பண்ணி தைக்கன்னா 500க்குள்ள முடிஞ்சுடும், கண்டிப்பா. ஆனா கை வேலை... எம்ப்ராயிடரி, பீட்ஸ் இப்படி போனா கூட ஆகலாம், டிசைனுக்கு ஏற்ற மாதிரி. ஆனா சாதாரண ஹேண்ட் ஒர்க் இல்லாத ப்ளவுஸ்’னா மற்ற டெயிலர்ஸ் வாங்கும் விலை தான்... பயம் வேண்டாம். இது நாங்க கொடுக்கும் இடம்... நேரம் அதிகம் எடுப்பாங்க, ஆனா சொன்ன தேதியில் கொடுப்பாங்க. வேலையில் நேர்த்தி இருக்கும். அளவு எடுத்தும் தைப்பாங்க, அளவு துணி கொடுத்தாலும் தைப்பாங்க... பெண்கள் தான் நடத்துறாங்க.

அடுத்தது சீப்... பெஸ்ட்டான்னு எனக்கு தெரியாது... ஆனா எல்லா விதமான டிசைனர் பிளவுசும் தைப்பாங்க... மேடவாக்கம் - பெரும்பாக்கம் சாலையில் டெய்லரிங் சொல்லி கொடுக்கும் இடம் ஒன்னு இருக்கு.

வேளச்சேரியில் அரும் ஐஸ்க்ரீம் பார்லர் பக்கத்தில் மாடியில் ஒரு கடை இருக்கு... அங்கையும் இது போல் வேலைகள் செய்வாங்க... விலை நிச்சயம் தெரியாது.

மற்றபடி... வேலச்சேரியிலேயே “soft wear”னு ஒரு கடை bata showroom கீழ இருக்கு... அங்க விலை மீடியமா இருக்கும்... ஸ்டிட்சிங் நல்லா இருக்கும். ஒரு கேரளா லேடி நடத்துவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

///ஹேய் தீப்ஸ், சுவாகிட்ட கேட்டு பார்த்து பார்த்து நொந்து போயி தனி இழையே ஓபன் பண்ணிட்டியா? இந்த பாவம் சுவாவை சும்மா விடாது ;))///

ஏன் கல்ப்ஸ் இந்த கொலைவெறி என் மேல :)))
நான் ஏற்கனவே தீபு கிட்ட சொல்லிட்டேன் நான் எங்க தைச்சேன் எவ்வளவு ஆகும்னு :) என்னை கலாய்க்க என்ன வேகமா வந்திருக்கீங்க ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் :)

தீப்ஸ் முத்துமாரி வந்துருக்காங்க அவங்ககிட்ட நீ ட்ரை பன்னி பார்த்துட்டு சொல்லுப்பா

நான் சொன்ன இடத்துலயும்(srees ethnic wear) நாம் என்ன விலைக்கு ஒர்க் பன்னசொல்றோமோ பன்னி தருவாங்க பா,ஒர்க் பன்னி வாங்கிட்டு நீங்க எப்பவும் தைக்கும் இடத்தில் கூட தச்சுக்கலாம் இல்லன்னா பேட்டெர்ன் ஒர்க்கும் பன்னித்தருவாங்க.
உதாரணத்துக்கு 1000க்கு பன்னிக்குடுங்க இல்ல 750க்கு பன்னுங்க அப்படின்னு சொல்லலாம் நம் இஸ்டம் தான் பா.ஆனால் 1000க்கு மேல பன்னினாதான் ஒர்க்(ஆரி,ஜர்தோசி,கட் ஒர்க்) கிராண்டா இருக்கும்.

இதுல இப்போதைக்கு சீப்&பெஸ்ட் பேட்டெர்ன் ஒர்க் தான் பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதலில் வந்து பதிவிட்டு உதவியதற்கு நன்றி மா..... “உல்லாஸ் டெய்லர்ஸ்" வட பழனியிலா.... அந்த தெருவின் பெயர் தெரிந்தால் நல்லா இருக்கும்..... உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்க சீதாம்மா.....

நீங்க சொல்றது நுங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ள பூர்னிமா பாக்கியராஜ் கடை தானே???!!! அப்ப காஸ்ட்லி தான்... ;) அங்க மோஸ்ட்லி செலெப்ரெடீஸ் தான் ஆர்டர் பண்றாங்க. ஆனா வேலை பிரமாதமா இருக்கும்னு கேட்டிருக்கேன். நானும் ஒரு முறை ட்ரை பண்றேன். தேன்க்ஸ் சுவர்ணா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம ஸ்வர்ணா ஏற்கனவே அவங்க தெய்ச்ச ப்ளௌஸ் டீடைல்ஸ் கொடுத்துட்டாங்க...... அவங்க சொன்ன விலையை கேட்டு அதிர்ச்சியில் ஒகார்ந்தவதான்..... சுமார் ஒரு மணி நேரத்துக்கு அப்பறம் தான் சுயநினைவே வந்தது......

ஏதோ எனக்கேத்த எள்ளுருண்டையாய் நீங்க யாராவது சொல்வீங்கன்னு தான் இந்த இழையை ஆரம்பித்தேன்..... அப்பறம் எனக்கு பின்னால வரும் சந்ததிகளுக்கும் இது யூஸ் ஆகும்ல..... :)

ராயப்பேட்டை என் அம்மா வீடு பக்கம் தான்..... நீங்க அந்த டைலர் முகவரி கொடுத்தா மத்த நோர்மல் ப்ளௌஸ் தைக்க உதவும்....

ஹாய் வனி வேளச்சேரி மெயின் ரோடு பக்கம் தான் என் வீடு அங்கே ஏதும் டைலர் இருந்தா சொல்லுங்க பா. எனக்கு சுடிதார் தான் தைக்கணும்..புடவை ப்ளௌஸ் எல்லாம் நமக்கு ஒத்தே வராத ஒன்னு..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்