புதுப் புது பெயர்கள்

இப்போதுதான் (அறுசுவை உபயத்தில்) சமைக்கக் கற்றுக் கொண்டிருக்கும் நான், நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. சமைக்கும் போது நிறைய சந்தேகங்கள் வருகின்றன. அது மட்டுமல்லாமல், சில சமயம் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கேள்விபட்டிராதவையாக இருக்கின்றது. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான குறிப்புகளில் மாசிக் கருவாடு, கலோஞ்சி போன்ற பொருட்கள் உள்ளன. இவையெல்லாம் என்னவென்றே தெரியவில்லை.

குறிப்புகள் கொடுப்பவர்கள் இது போன்ற புதுப் பொருட்களைக் கொடுக்கும்போது அவற்றைப் பற்றின சிறு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். திருமதி. தேவசேனா அவர்கள் லெமன் கிராஸ், தாய்லாந்து இஞ்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதற்கு மாற்றும் கொடுத்துள்ளார். இது பாராட்டுக்குரியது. இதுபோல் மற்றவர்களும் செய்ய வேண்டும். கிடைக்காத பொருளாக இருப்பின் அதற்கு மாற்று என்ன சேர்க்கலாம் என்பதையும் அவசியம் தெரிவிக்கவும்.

பழைய அறுசுவை இணையத்தளத்தில் உணவுப் பொருட்களுக்கென்று தனிப்பிரிவு இருந்தது. அதில் பொருட்களின் படம் மற்றும் நியூட்ரிசியஸ் வேல்யூஸ் எல்லாம் இருந்தது. புதிய தளத்தில் அது இல்லை. என்னவாயிற்று? புதிதாய் சமைப்பவர்களுக்கு அது மிகவும் உதவியாய் இருக்கும். உணவுப் பொருட்களுக்கான Glossary மிகவும் அவசியம். படங்களையும் வெளியிடுங்கள்.

நன்றி

Dear anusha,
கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில் பொருட்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியாவிட்டால், அந்த குறிப்புகளை கொடுத்தவர்களிடம் நீங்கள் கேட்கலாமே! எல்லா நேரத்திலும் எல்லா பொருட்களுக்கும் விளக்கம் கொடுத்தால், குறிப்பு கொடுப்பதே சிரமமான காரியமாகிவிடும். மாசிக்கருவாடு என்பது உங்களுக்கு புதிய சொல், கலோஞ்சி என்பது எனக்கும் புதிய சொல்தான்!அதனால், இதற்கு ஒரு ஈசியான வழி உள்ளது. அந்தந்த குறிப்புகளுக்கு கீழே "கருத்து தெரிவிக்க" என்ற ஒரு வசதியை ஏற்படுத்தி உள்ளார்கள். அதை பயன்படுத்தி நீங்கள் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள். "மாசிக்கருவாடு" என்பது என்னுடைய குறிப்பில் உள்ளது. அதற்கு சிலர் "கும்பலமாசி" என்றும் சொல்வார்கள். இதுபோன்று மளிகை கடைகளில் கேட்டால் கிடைக்கும். கடினமாக இருக்கும். சுத்துளியால் அல்லது அம்மியால்தான் உடைத்து பிறகு பொடியாக்க வேண்டும்.விளக்கம் போதுமா? இனி நீங்கள் விளக்கம் கேட்டால், "கருத்து தெரிவிக்க"வில் கேட்கவும். ப்ளீஸ்!

பாராட்டுக்கு நன்றி.மாசிக்கருவாடு என்பது dried tuna fish.tuna fish ஐ (மாசி மீனை) காய வைத்தால் அது மரக்கட்டைபோல் கடினமாகிவிடும்.பாக்கு வெட்டி போல் இருக்கும் கருவியில் துருவி விற்பார்கள்.மாசி பொடி சம்பல் அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.ஏனெனில் அது ஸ்ரீலங்காவில்,மாலத்தீவில் பிரபலமான கருவாடு வகை.இந்தியர்களுக்கு அவ்வளவாக பிடிக்காது.கருவாடு சம்பல் செய்ய உகந்தது நம்ம ஊர் பாறை கருவாடு,வஞ்சிர கருவாடு,கொடுவா போன்ற சதைப்பற்றுடைய கருவாடு வகைகள்.

உங்களுடைய கோரிக்கை நிச்சயம் நியாயமானது. தவறு எங்களுடையதுதான். குறிப்புகள் கொடுப்பவர்கள், தங்களுக்கு மிகவும் பழக்கமான, தாங்கள் அடிக்கடி செய்து ருசித்த உணவினை, மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இங்கே கொடுக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், குறிப்பில் இடம்பெறும் பொருட்கள் அனைத்தும் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பொருட்களாக இருக்கும். மற்றவர்களுக்கு எந்தப் பொருட்கள் தெரியும், எவை தெரியாது என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தப் பொறுப்பு எங்களுடையதாகிறது. அனைத்து உணவுப்பொருட்களைப் பற்றின முழுமையான விபரங்களை, படங்களுடன் கொடுக்க வேண்டியது எங்களது கடமை. நீங்கள் குறிப்பிட்டு இருந்ததுபோல் பழையத்தளத்தில் உணவுப் பொருட்களுக்கென்று தனிப்பிரிவு இருந்தது. அதோடு மட்டுமன்றி குறிப்புகளில் வரும் தேவையானப் பொருட்களை கிளிக் செய்தால் அவை பற்றின விபரங்கள் உடனே தோன்றுமாறு வைத்திருந்தோம். புதியத் தளத்தில் அதை அப்படியே செயல்படுத்த முடியவில்லை. புதியத்தளம் முழுமையும் Dynamic pages என்பதால் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருந்தன. அதையும் மீறி செயல்படுத்தினால், பக்கங்கள் தோன்றும் வேகம் மிகவும் குறைந்து போயிற்று. நிறைய முயற்சித்து பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.

வெகு விரைவிலேயே நீங்கள் எதிர்பார்க்கும் உணவுப்பொருட்களுக்கான Glossary இத்தளத்தில் இடம் பெறும். பழையத் தளத்தில் இருந்ததைவிட அதிகப்படியான தகவல்கள் அவற்றில் இடம்பெறும் என்று உறுதியளிக்கின்றோம்.

அஸ்மா மேடம், மிக்க நன்றி. குறிப்புகள் குறித்து எனக்கு தோன்றும் சந்தேகங்களை நான் கண்டிப்பாக குறிப்புகளுக்கு கீழே உள்ள கருத்து தெரிவிக்க வில்தான் கேட்பேன். அந்த வசதியை அதிகம் பயன்படுத்துவது நான்தான் என்று நினைக்கின்றேன். இங்கே நான் மாசிக்கருவாடு, கலோஞ்சி என்றால் என்னவென்று கேட்கவில்லை. அவற்றை உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். என்னுடைய கேள்வியை மீண்டும் ஒருமுறைப் படித்தீர்கள் என்றால் நன்கு தெரியும்.

நான் முன்வைத்தது இரண்டு கோரிக்கைகள். ஒன்று, குறிப்பு கொடுப்பவர்கள் புதிய பொருட்களைப் பற்றி சற்று விளக்கத்தையும் குறிப்புடன் கொடுங்கள் என்பது. மற்றொன்று, பழைய அறுசுவையில் இருந்த உணவுப் பொருட்கள் என்ற பகுதி என்னவாயிற்று? அதை புது அறுசுவையில் கொண்டு வாருங்கள் என்பது.

நீங்கள் குறிப்பிட்டு உள்ளதுபோல் எல்லாப் பொருட்களுக்கும் விளக்கங்கள் கொடுப்பது மிகவும் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து நீங்கள் குறிப்புகள் கொடுத்து வருகின்றீர்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. அதேசமயம் என் போன்றவர்கள் (நிச்சயம் நான், மற்றவர்களும் அப்படிதான் என்று நினைக்கின்றேன்) முதலில் கவனிப்பது தேவையானப் பொருட்களைத்தான். அவை வீட்டில் இருக்கும் பொருட்களாக இருந்தால் அந்த குறிப்பை உடனே செய்து பார்க்கின்றோம். இல்லையெனில் தள்ளிப் போடுகின்றோம். அல்லது மறந்து விடுகின்றோம். ஆகவே, வெறும் செய்முறைக் குறிப்புகள் என்று இல்லாமல் அவற்றுடன் கூடுதலாக சேர்க்கப்படும் தகவல்கள் ஒரு வித attractionஐ உண்டு பண்ணுகின்றது. உடனே செய்து பார்க்கத் தூண்டுகின்றது.

Dear Anusha,
உங்களுடைய குறிப்பை நன்றாக படித்துவிட்டுதான் உங்களுக்கு பதில் அளித்தேன். நீங்கள் கேட்டதுபற்றி சந்தோஷம்தான்! ஆனால், அதை "கருத்து தெரிவிக்க" -வில் கேட்டால் பதில் கொடுக்க வசதியாக இருக்கும் என்பதைதான் உங்களுக்கு சொன்னேன். ஏனென்றால், வேலை பளுவின் காரணமாக 'அறுசுவை.காம்' மை நான் பார்ப்பது மிகவும் கம்மியாக உள்ளது. அதிலும் மன்றத்தை பார்வையிடுவது ரொம்ப கம்மி! அதனால்தான் (ஒரு வேண்டுகோளைதான்) நானும் உங்களுக்கு வைத்தேன்.

அத்துடன் 'மாசிக்கருவாடு' பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததால் அதன் சிறு விளக்கத்தையும் தந்தேன்.முறைப்படி செய்தால் அது ஒரு அருமையான கறிவகை என்பதையும், தஞ்சை,நாகை மாவட்ட இஸ்லாமிய மக்கள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதையும் திருமதி. சித்ரா துரை அவர்கள் என்னுடைய "புதினா சம்பால்" குறிப்பின்கீழ் மாசிக் கருவாட்டு சம்பால் பற்றி கேட்டிருந்தார்கள் என்பதையும் இத்துடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

நேரமின்மையின் காரணமாக என்னுடைய குறிப்புகளில் கூடுதலாக விளக்கம் தராமல் இருந்தால், நீங்கள் தாராளமாக "கருத்து தெரிவிக்க" வில் கேளுங்கள், நேரம் கிடைக்கும் சமயம் பதில் தந்து விடுவேன். உங்களின் சமையல் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்!

டியர் அஸ்மா,
நான் செட்டிநாட்டை சேர்ந்தவள். எங்கள் ஊர் பக்கமும் மாசிக் கருவாட்டு சம்பல் மிக பிரபலம். செய்முறையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

Vazhga Tamil!!!

Maasi karuvadu = Maldev Fish

மேலும் சில பதிவுகள்