how to prepare சத்துமாவு

Hello can anybody help me? How to prepare sathumaa? wht ting nedd it to that.
<!--break-->

என்னுடய குழந்தைக்கு 9 மாதத்திலிருந்து இந்த சத்துமாவுதான் குடுத்து வருகிரென்

தேவையானவை:

புழுங்கலரிசி - 100 கிராம், புட்டரிசி - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், பாசிப்பயறு - 100 கிராம், கொள்ளு - 50 கிராம், ராகி - 200 கிராம், கம்பு - 100 கிராம், வெள்ளை சோளம் - 100 கிராம், மக்காச்சோளம் - 100 கிராம், வெள்ளை சோயா - 100 கிராம், பார்லி - 100 கிராம், பாதாம் - 50 கிராம், முந்திரி - 50 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், சம்பா கோதுமை - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், ஏலக்காய் - 25 கிராம், சுக்கு- சிறிதளவு.

செய்முறை: அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய்,சுக்கு தவிர்த்து, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவையுங்கள். இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி வைத்துவிடுங்கள். அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் (அதாவது, இரண்டாம் நாள்) பிரித்தால், தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும். அன்று முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள். நன்கு காய்ந்ததும், அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி, பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள். பார்லியை வறுக்க வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள் (சலிக்கத் தேவையில்லை). சத்துமாவு கஞ்சிக்கு, இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த முழுமையான உணவு இது. காலை உணவு சாப்பிட முடியாத அவசரத்தில் இதை ஒரு கப் குடித்தால் போதும்.

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

thrathiga தேடுகவில் சத்துமாவு என்று டைப் பண்ணி தேடிப்பாருங்கள் உங்களுக்கு தேவையான குறிப்பு கிடைக்கலாம். மேலும் பத்மா அவர்களுடைய குறிப்பையும் முயன்று பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/8471
http://www.arusuvai.com/tamil/node/18332

Hello evrybody. Can any body tell me where i can get all ingriedts to sathuma? I ask her in asian shops they didnt have it. I hpoe i ca get any help her.

கோபித்துக்கொள்ளாமல் தமிழில் கேளுங்கப்பா கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க

இன்கு அனைது பொருலும் கிடயது அதனல் யரும் உதவ முடிஉமா? எனது 6மொந் குட்ட்யிகு

இந்த சத்து மாவை தோலுடன் அரைத்துக் கொடுப்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லையே

மேலும் சில பதிவுகள்