சோரு உன்ன 1 மணி நேரம்

ஹாய் ப்ரண்ட்ஸ் நான் ப்ரியா என் 3 வயது பெண் சஷ்டிகா மிகவும் எடை குரைவாக இருகிறாள்.1 வாய் சாதத்தை 15 நிமிஷம் அப்படியெ வாயில் வைத்து இருப்பாள்.மிகவும் ஒல்லியாக இருக்கிராள்.மிகுந்த கவலை ஆக உள்ளது.உங்கலிடம் தீர்வு இருந்தால் சொல்லுகள்
அன்புடன்,
ப்ரியா

பிரியா, நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். உங்க மகளாவது பரவாயில்லை. என் 10 வயது மகள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் எடுக்கிறா..வாயில ஒதிக்கியே வச்சிருப்பா..தினமும் 3 வேளையும் எங்கிட்ட திட்டு வாங்குவா. ஆனாலும் மாற மாட்டேங்கிறா. என்னப்பண்ணனுமுனு தெரியலையப்பா..எனக்கும் ஒரே கவலையா இருக்கு...

அன்புடன்,
குரு.

hai guru enakkum athe kavalai than.en ponnum ataye than seiyara.adichachu.kenjiyachu...but no devolope.time than 1 maninerathula irunthu 1 1/2 mani nerama develope aguthu.
with love,
priya.

ஹாய் பிரியா, குரு... என் இரண்டே கால் வயது பெண் குழந்தை ஐஸ்வர்யா வும் இதே போல் தான் செய்கிறாள்.

7மாதமா இருக்கும் போதிலிருந்தே பால் குடிப்பதிலிருந்து இப்பவரைக்கும் போராட்டம் தான்...
டாக்க்டரிடம் கேட்டா அம்மா தாங்க குழந்தைக்கு பிடித்ததை கண்டுணர்ந்து விளையாட்டு காட்டி சாப்பிட வைக்கனும்னு சொல்லிட்டார்...
எங்க அம்மா கிட்ட கேட்டா நீங்களும் அப்படிதான் இருந்தீங்க... இந்த ஸ்டேஜ்ல இப்படி தான் பண்ணுவாங்க என்றார்.

ஆனால் இப்ப சுவற்று சுண்ணாம்பை சுரண்டி சாப்பிடுவது, சாக்பீஸ் சாப்பிடுவது என்று சாப்பாடு,ஸ்நாக்ஸ் தவிர அனைத்தையும் ருசிக்கிறாள்.

பெரியவர்கள் அவளை டாக்டரிடம் காண்பித்து அயர்ன் டானிக்,டிஜெஸ்ட்டிவ் என்சைம் பசிஎடுப்பதற்கு டானிக் வாங்கி தர சொல்கிறார்கள். அநேகமா இந்த வீக் என்டு போவோம் என்று நினைக்கிறேன். டாக்டர் என்ன சொல்லப்போறார்னு தெரியலை...

அதுவரை எங்க சாப்பட்டு நேரம் 1 மணி நேரம் ரோட்டில் தான்... அம்மம். என் பொண்ணு வீட்டுக்குள்ள சாப்பிட்டதா சரித்திரமே இல்லை... வெளிய போய் விளையாடிகிட்டே தான் சாபிடுகிறாள்...

பக்கத்து வீட்டு பாட்டி"பிள்ள வளர்க்கிறது என்றால் சும்மாவா....இப்படிதான் செய்வார்கள்" என்று...

எனவே கொஞ்சம் நேரத்தை அதிகமா செலவு செய்து முயன்று பாருங்கள். தொடக்கத்தில் சிரமமாதான் இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமா சீக்கிரம் சாபிட பழகிடுவார்கள்... கொஞ்சம் போல என் பெண்ணிடம் முன்னேற்றம் தெரிகிறது...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அன்பு பிரியா, குரு, ஆனந்தப்ரியா....,

குழந்தைக்கு உணவு ஊட்டும்போது ஒரு பிக்சட் டைம் வச்சுக்குங்க. அரைமணிநேரம் மட்டும் ஊட்டுங்க. இரண்டு வாய் சாப்பிட்டாலும் பரவாயில்லை ...டைம் ஆயிருச்சுனா ஊட்ட வேண்டாம். சாப்பிடும் நேரம் டிவி போடவே வேண்டாம். என் பையனுக்கு அந்த தப்ப பண்ணி இப்ப அஞ்சு வயசாகும்போதுதான் சொல்லி சொல்லி டிவி பாக்காம சாப்பிட ஆரம்பிச்சிருக்கான்... பொண்ணுக்கு ஆரம்பத்தில இருந்தே டிவி கிடையாது.. அவளும் ஒன்றரை வயசுக்கு மேல சாப்பிடற உணவ வாயில அடக்கி வச்சுக்க ஆரம்பிச்சா.. நானும் சுவிட்ச் போட்டு ஆப் பண்ணி காமிச்சு ஊட்டறது... காலிங் பெல் அடிச்சு ஊட்டறதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டும் ம்ஹும் எதுவும் பலிக்கலை;௦(

இப்ப பையனும் பரவாயில்லை பொண்ணும் பரவாயில்லை...சாப்பிடறாங்களோ இல்லையோ வெரட்டியா பிளேட்டுல அழகா வச்சு கொடுத்து பாருங்க. அவங்களுக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ வாங்கி வச்சுடுங்க சாப்பாடு சாப்பிட்டா கிடைக்கும்னு சொல்லிடுங்க...நம்ம வழிக்கு வந்துடுவாங்க;) கொஞ்ச நாள் ஆகும் ஆனா முயற்சிய கைவிடாதிங்க.

ஆனந்தப்ரியா.. உங்க குழந்தை சுண்ணாம்பு சாப்பிடறதா சொன்னீங்க... எப்பவும் குழந்தைய கண்பார்வையிலேயே வைங்க..குழந்தையோட விளையாடுங்க சரியாயிடும்.

Don't Worry Be Happy.

எப்பொழுதுமே குழந்தைகளை ஒரு விஷயத்திற்காக திட்டினாலோ அடித்தாலோ அவர்கள் அந்த விஷயத்தில் முரண்டு தான் பிடிப்பார்கள். அதனால் அவர்களை அவர்கள் போக்கிலே விட்டு தான் பிடிக்க வேண்டும்.

ஓடி ஓடி சாப்பாடு ஊட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு இடத்தில் அவர்களை உட்கார வைத்து தான் சாப்பாடு குடுக்க வேண்டும். அதுவும் இல்லாமல் அவர்களுக்கு நாம் ஊட்டுவதை விட அவர்களே எடுத்து சாப்பிட பழக்க வேண்டும். ஒரு சின்ன டேபிள் சேர் வாங்கிக் கொடுங்கள். அவர்களுக்கென்று ஒரு தனி ப்ளேட் டம்ப்ளர் ஸ்பூன் என்று எல்லாமே தனியாக அவர்கள் விருப்படியே இருக்கட்டும். எல்லோரும் உட்கர்ந்து சாப்பிடும் போது அவர்களுக்கும் அந்த தட்டில் சாப்பாடு போட்டு அவர்களின் டேபுள் சேரில் உட்கார வைத்து சாப்பிட சொல்லுங்கள். குழந்தைகளுக்கு எப்பொழுதுமே எல்லாத்தையும் அவர்களாகவே செய்ய பிடிக்கும். அவர்களிடம் சொல்லுங்கள் பிளேட்டை காலி பண்ணினால் தான் அந்த இடத்தை விட்டு நகரணும் என்று. பாரு அப்பா அம்மா எப்படி சுத்தமாக சாப்பிட்டு விட்டோம் அதனால் தான் பிக் ஆகா இருக்கோம்...நீங்களும் சாபிட்டால் தான் அவர்களுக்கு பிடித்த கார்டூன் அல்லது யாரையாவது காட்டி அவர்கள் மாதிரி ஆகணும் னா நல்ல சாப்பிடனும் என்று சொல்லுங்கள். அவர்கள் என்ன சாப்பிடறாங்க என்று சொல்லிகொடுத்து சாப்பிட வைங்க. குழந்தைகளுக்கு எப்பொழுதுமே தெரிந்துக் கொல்லனும் என்று ஆசை இருக்கும் அதனால் பாரு இதில் காரட் இருக்கு பீன்ஸ் இருக்கு இது என்ன கலர் இது சாப்பிட்டால் நமக்கு இது ஸ்ட்ராங் ஆகும் என்று சொல்லி சாப்பிட வைக்கலாம்.

நான் என் மகளை ஒரு வயது முதலே அவளையே எடுத்து சாப்பிட விடுவேன். முதலில் கொஞ்சம் காய்கறிகளை போடுவேன். பிறகு சாதத்தை உருண்டைகளாக பிடித்து வைப்பேன். அவர்களுக்கு சாப்பிட தெரியாது தான் இருந்தாலும் சீக்கிரமே பழகி விடுவார்கள். மேலும் கீழும் சிந்தும். இருந்தாலும் நாம் ஊட்டுவதை அவர்களாகவே எடுத்து ஒரு பிடி சாப்பாடு சாப்பிட்டாலும் அவர்கள் உடம்பில் ஒட்டும்.

என் அம்மா சொல்லுவார் நமக்கே சில நேரங்களில் சர்க்கரை சாப்பிட தோன்றும்...அது ஏனென்றால் நம் உடலுக்கு சர்க்கரை அப்பொழுது தேவை படுமாம். ப்ரியா ஒருவேளை உங்களின் குழந்தைகளுக்கு கால்ஷியம் தேவை படுதோ என்னவோ? அவர்களை ஒரு முறை மருத்துவரிடம் காண்பித்து அனீமிக்கா என்றா செக் பண்ணவும். இருந்தாலும் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அதுவே பழக்கமாகி விடும். அது உடலுக்கு நல்லதல்ல.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் ' சாப்பாடு கொண்டுவந்தாலே என் இரண்டரை வயது மகன் எங்கதான் ஒழிவான்டே தெரியாது

ஆனா நான் குடுப்பது வெண்டி கேரட் கீரை அவியவச்சு அரச்சுதான் குடுக்குரேன் இது ஒரு வாட்டி........

இரண்டாவது பதாம் முந்திரி கிஸ்மிஸ் கோதுமை ஓட்ச் இதல்லாம் போட்டு [எல்லாமை கொஞ்சமாத்தான் போடனும்] அரச்சு அடிப்பில் சிறிது காச்சி குடுப்பேன்.......
ஒள்ளியா இருந்தா பிறச்சனை இல்லை நல்லா ஆரோக்கியமா நோய்கள் அண்டாம அறிவா வழப்போம் .......

பசரியாக்கா சொன்ன சாப்பாடு எல்லாமை குழந்தைக்கு தேவையான்வை

vitamin C ... CHAMBS M Lysine Chewable இந்த விட்டமின் தான் என் மூண்று குழந்தைக்கும்[வயது;;;12;;;10;3 ] குடுக்குறேன் .....

முக்கியாமா ஒண்ணு டாக்டரிடம் கேட்டுக்கொகொள்ளுங்கல்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

முதலில் குழந்தை விரும்பும் உணவு கொடுங்கள்.
கொஞ்சமாகக் கொடுங்கள்.
..உமிழ்நீர் ஊரும் உண்வுகள் சேர்க்கவும்.
உமிழ்நீர் சேரவில்லை. ருசித்துச்சாப்பிடபழக்கவும்
. நாம் விரும்பும் உணவைவிட அது விரும்பும் ருசிக்கேற்ப மாற்றங்கள் இருக்க வேண்டும் .
இன்னைக்கு பாப்பாக்கு என்ன பண்ணட்டும். என்று அதனிடம் கேட்டு சமைக்கலாம்
. உனக்காக இதோசெய்திருக்கிரேன் என்றால்சாப்பாட்டில் ஆர்வம் ஏற்படும்.
அதற்க்காக சமைக்கும் போது முட்டை பொரித்தல்போன்ற சிறிய சமையல்களில் பாப்பாவையும் அருகில் வைத்துக்கொண்டு அது பார்க்க சமைக்கவும்
.சமையல் பன்னும்போது சிரிய உதவிகள் செய்ய பழக்கவும்

. கரண்டி எடுத்துட்டு வா ,, அந்தக்காயை எடுத்துட்டு வா இதுக்கு கொஞ்சம் உப்பு போடு , போன்ற செயல்களைப்பழக்கவும்
.ருசி பார்க்கச்சொல்லவும்
.இது நல்லாஇருக்கா என அதனிடம் ஒப்பீனியன் கேட்கவும்
. இப்படி சாப்பாட்டின் மீது ஆர்வம் ஏற்பட வைக்கவும்
உங்களுடன் சேர்ந்து சாப்பிட வைக்கவும். யார் முதலில் சாப்பிடுகிறார்கல் என போட்டி வைக்கவும் ப்ரைஸ் கொடுக்கவும்

மிளகு சீரகம் தூள் சிறிதும் நெய்யும் சிறிது உப்பும் சாததில் கலந்து கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர்வரை விரும்பி சாப்பிடுவார்கள் எல்லாக்குழந்தையும் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள் செரிமானத்துக்கும் நல்லது

அன்புத்தோழிகள் ஜெய், லாவண்யா, பல்கிஸ், பஸாரியா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். அலோசணைகள், குறிப்புகள் நன்றாக இருந்தது. இன்றிலிருந்து நீங்க சொல்வது போல செய்ய முயற்சி எடுக்கிறேன்... நன்றி தோழிகளே... சீக்கிரம் இம்ப்ரூவ் ஆன செயல்களை பகிர்ந்து கொள்ள வரேன்ன்.....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய். என் குழந்தையும் இப்படி தான் இருப்பார்கள். நான் ஒரு டம்ளரில் தண்ணிர் ஊத்திக் கொடுத்து ஆற்ற சொல்லுவேன். அப்படியே ஊட்டி விட்டு விடுவேன்,. இப்போ பரவாயில்லை. எதேனும் விளையாட்டு சாமான் கொடுத்து விளையாட சொல்லவும் . கலர் புக் வாங்கி கொடுத்து கலர் அடிக்க சொல்லவும்.அப்படியே ஊட்டி விட்டு விடுங்கள்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்