பிரிட்ஜ் வாடை இல்லாமல் வைக்க வழி சொல்லுங்களேன்.

பிரிட்ஜில் உள்ள பொருட்கள் ஐஸ் கட்டி கொள்வது ஏன்?மிக குறைவாக வைத்து அடிகடி சுத்தம் செய்தும் பார்த்து விட்டேன்.புதினா இலை வைத்த மறுநாளே விணாகிவிடுகிறது?இதை பாதுகாக்க வழியும் பிரிட்ஜ் வாடை இல்லாமல் வைக்க வழி சொல்லுங்களேன்.

டீப்ராஸ்ட் செய்து பாருங்கள்.தெர்மோஸ்டாட்டின் கன்ட்ரோல் சரியாக உள்ளதா என்று பாருங்கள்.
ப்ரிட்ஜை சுத்தம் செய்ததும் ஏதாவது ஒரு புட் எஸன்ஸை (ரோஸ் அல்லது வென்னிலா) ஒரு பஞ்சில் நனைத்து ப்ரிட்ஜின் கதவு மூலையில் இரண்டு நாள் வைத்துப் பாருங்கள். வாடை இருக்காது.

Vazhga Tamil!!!

ப்ரிட்ஜை நன்கு துடைத்து சுத்தம் செய்த பின் ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக cut பண்ணி வைத்து விட்டால் வாடை வராது.ப்ரிட்ஜ்ஜும் நல்ல மணமாக இருக்கும்.

அதே போல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி வைத்தால் சட்டென்று வாடிவிடுகிறது, இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.

மிக்க நன்றி

------------------------
Vidhya Kamalesh :)
------------------------

------------------------
Vidhya Kamalesh :)
------------------------

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றின் இலைகளை மட்டும் எடுத்து air tight box ல் போட்டு fridge ல் வைத்தால் 2 மாசம் ஆனாலும் வாடியே போகாது

ramba

ப்ரிட்ஜில் பூ வைக்கும் போது பூவின் மணம் மற்ற பொருட்களில் அடிக்காமல் எப்படி தடுப்பது?
--Chandru

******அன்பே சிவம்******

ஹலோ சந்துரு, பிரிட்ஜில் பூவை காற்றுபுகாத ஸ்டீல் டப்பாவில் வைத்து நன்கு அழுத்தி மூடிவைத்தால் மற்ற பொருட்களில் அதன் நருமணம் பரவ வாய்ப்பிருக்காது.நன்றி.

பிரிட்ஜில் வாடை வராமல் இருக்க
1. மல்லிகை பூவை பிரிட்ஜில் வைப்பதாக இருந்தால் எவர் சில்வர் டப்பாவில் மூடி வைக்கவும்.

2. பிரிட்ஜை தொடைக்கும் போது தண்ணீரில் சோடாமாவு கலந்து தொடைக்கவும்.

3. வாடை வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை அங்காங்கே கட் பண்ணி வைக்கவும்.

4. பிரீஜரில் மட்டன்,சிக்கன்,இறால்,மீன் வைக்கும் போது சின்ன சின்ன கவரில் போட்டு அத்ன் பிறகு தனித்தனியாக ஒரு திக் கவரிலும் போட்டு வையுங்கள். ஒரு மாதம் ஆனாலும் வாடை வராது.

5. எல்லாம் வைக்குமுன் ஒரு பெரிய திக் கவர் (அ) ஷீட்டை கீழே விரித்து கொள்ளவும்.

ஜலீலா

Jaleelakamal

தகவலுக்கு நன்றி

hi every body... I am a newly joined memeber.. எங்கள் வீட்டில் வாரம் ஒரு தேங்காய் தான் செலவு ஆகும்.Polythene cover இல் போட்டு fridge இல் வைத்தால் முற்றிலும் கெடுவதில்லை எனினும் உட்பரப்பில் வழ வழப்பான ஒரு படலம் உருவாகி விடுகிறது.தற்போதைக்கு கொதி நிரில் கழுவி பயன் படுதி வருகிறேன். இதை எப்படி தவிர்ப்பது.. உதவுங்கள் தோழிகளே!!!

தேங்காயை ப்ரிசரில் (Freezer) வைத்தால் எப்பொதும் கெடாது. நான் 1 வருடம் வரை வைத்து பயன்படுத்தி இருக்கிறேன். உபயோகிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு எடுத்து வெளியில் வைக்கவும். தேங்காயை உடைத்து ப்ரிசரில் (Freezer) வைக்கவும். துருவியும் ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

மேலும் சில பதிவுகள்