help panungapa,biryani kuzhaiyudhu

nan birayani samaichen. ana adhu kuzhainjiduchu. jeera samba la seithen, periya cooker ah mudi podama dhan use panren,rendu pangu thanni dhan vechen. en mami seitha nalla iruku, nan pana ipadi agudhu. yena panrathu.

திவ்யா எப்படி இருக்கீங்க?

பிரியாணி குழைந்தால், தண்ணீரை வேண்டுமானால் குறைத்துப் பாருங்கள். 2 கப்புக்கு பதிலாக 11/2 கப்). இது 1அல்லது 2 கப் அரிசிக்கு. 3கப்புக்கு மேல் செய்தால் 2 கப் தண்ணீர் அளவிலேயே கணக்கு எடுத்து கடைசியாக 1 கப் வீதம் குறைத்து கொள்ளவும்.(3கப்புக்கு 6 கப் தண்ணீருக்கு பதில் 5 கப் விடுங்கள்).

அரிசியை கழுவி ஊற வைத்த பின், பிரியாணியில் சேர்க்கும் முன் அதிலுள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும். சில சமையம் அதுவே 1/2 கப் இருக்கும்.

சில சமயம், அரிசி புது அரிசியாக இருந்தாலும் குழைய வாய்ப்பிருக்கு.

குக்கரில் செய்யும்போது, 1 விசில் போதும். நிறுத்தியதும் அடுப்பிலிருந்து எடுத்து சூடு இல்லாத இடத்தில் வைத்து விடுங்கள். குக்கரின் சூட்டிலேயே வெந்துவிடும். ப்ரெஷர் அடங்கியவுடன், வேறு பாத்திரத்துக்கு மாற்றி வைத்து விடுங்கள். குக்கரிலேயே விட்டோமென்றால், நேரம் ஆக ஆக அடியில் இருக்கும் பிரியாணி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.

குக்கரில் மூடி போட்டு விசில் விட வேண்டாமென்றால், திறந்து வைத்தே செய்து, அரிசி முக்கால் பாகம் வெந்ததும் விசில் போடாமல் மூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கலாம்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன். வேறு தோழிகள் வந்து சொல்லுவார்கள். அடுத்த முறை தமிழில் டைப் செய்யவும். கீழே 'தமிழில் எழுத்துதவி' என்று இருக்கும். அதில் டைப் செய்து பேஸ்ட் செய்யவும். பிரியாணி நன்றாக வர வாழ்த்துக்கள். நன்றி.

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

பிரியாணிக்கு அரிசியை ஒரு இருபது நிமிடம் மட்டும் ஊறவிடுங்கள் ,அதிக நேரம் ஊறினாலும் குழையும் . பிரியாணிக்கு குக்கரில் மசால், காய் அல்லது இறைச்சி மற்றும் ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் அளவே தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். நீங்கள் காய் சேர்த்தால் மசாலை வதக்கும் போது நன்கு வதக்கிவிட்டு தண்ணீர் சேர்க்கவும்,இறைச்சி சேர்பதாக இருந்தால் ஒரு அரைவேர்காடு முன்னாடியே வேக வைத்து சேர்க்கவும். நீங்கள் பிரியாணி அளவு தண்ணீர் சேர்க்கும் போது இந்த இறைச்சி வேக வைத்த தண்ணீரையே சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும்

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

மேலும் சில பதிவுகள்