தோழிகள் எனக்கு ஆலோசனை கூறவும்

அன்புள்ள தோழிகளே,

வணக்கம். எனக்கு மனது குழப்பமாகவும் அதே நேரத்தில் வருத்தமாகவும் உள்ளது. யாராவது தோழிகள் எனக்கு ஆலோசனை கூறவும். என்னுடைய மாமியாரும் , நாத்தனாரும் என்னை எதிரி போல் பாவிப்பதே இதற்கு காரணம். நானும் எனது கணவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறோம், என் மாமியார் இந்தியாவில் தனியாக , நாத்தனார் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார். என் கணவர் மிகவும் அன்பானவர். அதிக இரக்க குணம் உள்ளவர். என் மாமியார் நல்லவர் தான். ஆனால் நாத்தனாரின் வார்த்தைகளை கேட்டு கொண்டு என்னிடம் தேவை இல்லாமல் பேசுவது, என் கணவரிடம் என்னை பற்றி கூறுவது [என்னவரிடம் ரொம்ப உன் மனைவியை நீ தங்குகிறாய், இப்படி இருக்காதே என்று கூறி உள்ளார்.]
நாங்கள் இப்போது இந்தியா வுக்கு பெர்மனன்ட் ஆக செல்வது என்று திட்டமிட்டுள்ளோம். நான் தாய்மை அடைந்துள்ளேன்,இப்போது நான்கு மாதம். என்னக்கு இந்தியா செல்வதற்கு பயமாக வுள்ளது. காரணம் எனது நாதனார் வார்த்தை களை கேட்டு கொண்டு என்னை அவர் நடத்தும் விதம், நாத்தனாருக்கும் அவள் கணவருக்கும் நானும் என் கணவரும் பணிவிடை செய்ய வேண்டும் என்று மாமியார் எதிர் பார்க்கிறார். சின்ன விசயங்களுக்கு மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார் என் மாமியார். ஆரம்பத்தில் அவர் கணவர் இல்லாதவர் , தனியாக வேறு உள்ளார் என்று நான் அவர் சொல்வதை காதில் வாங்குவதில்லை. ஆனால் இப்போது என் கணவர் ஏதாவது எனக்கு வங்கி கொடுப்பதை கூட அவர்கள் விரும்புவதில்லை. இருவரும் என் கணவருடன் சண்டை இடுகின்றனர்]. நாத்தனார் வார்த்திகளை வேத வாக்காக எடுத்து கொண்டு என்னை எதிரி போல் பார்கிறார் என் மாமியார்.
என்னக்கு இப்போது அவர்கள் இருவரையும் நினைத்தாலே என்னக்கு பயமாக உள்ளது. இதனால் என்னாகும் என் கணவருக்கும் சண்டை வருகிறது. என்ன செய்வதென்றே என்னக்கு புரிய வில்லை. நான் என்ன செய்வது ? ஆலோசனை கூறுங்கள் தோழிகளே.

REJI.

முதலில் நீங்க தாய்மை அடைந்ததுக்கு வாழ்த்துக்கள்.

உங்களது கவலை புரிகிறது, எல்லார் வீட்டிலும் நடக்கும் இதே பிரச்சனை தான், நீங்க இந்தியா வரதா சொல்றீங்க, இங்க வந்தா உங்க மாமியார் கூட தான் இருப்பீங்களா? அதாவது, கூட்டு குடும்பமா? இப்ப மாமியார் எந்த ஊரில் இருக்காங்க?

உங்க கணவருக்கு இந்தியா வந்தா எங்க வேலை செய்ய போகிறார்? உங்களது கணவர் உங்கள் மேல் பாசமா இருக்கார் இல்ல, இது போதும். வேறு யார் என்ன சொன்னாலும் அவர் மாற மாட்டார் தான? ஆயிரம் தான் அம்மா சொல்லி குடுத்தாலும், தன் வாரிசை சுமக்கும் மனைவியை யாரும் கஷ்ட்ட படுத்த மாட்டாங்க. உங்களது ஒரே நம்பிக்கை உங்களது கணவர் தான்.

இந்த மாதிரி சமயத்துல, நீங்க சந்தோசமா இருக்கணும், இந்த தேவை இல்லாத குழப்பங்களை இந்த நிமிடமே விடுங்க, இப்ப நீங்க 4 மாசம், அதுனால இனிமேல் இப்படி மனதை போட்டு குழப்ப வேண்டாம். உங்களது குழந்தை ஆரோக்கியம் பாதிக்க படும். உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை பற்றி மட்டுமே யோசிங்க.

மாமியார், நாத்தனார் எல்லா பிரச்சனையும் தூர வெச்சு பாருங்க, உங்க கண் முன்னாடி உங்க அன்பு கணவரும், உங்க குழந்தையும் மட்டுமே தெரியனும். சரியா? கவலை இல்லாம சந்தோசமா இருங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்கள் பதிலுக்கு நன்றி சுகந்தி.

என் மாமியார் சென்னை யில் உள்ளார், நாங்களும் சென்னை தான் வர உள்ளோம்.[அதுதான் என் பயம்]. நான் அதை மறந்தாலும் அவர்கள் எனக்கு Phone செய்து எதோ ஒரு வகையில் எனக்கு பிரச்சினை ஏற்படுத்துகின்றனர்.
நீங்கள் சொன்னதுபோல் நான் அதை தூரத்தில் வைப்பது என்று முடிவு செய்துள்ளேன். மீண்டும் ரொம்ப நன்றி சுகந்தி.

hi reji...
உங்கள் நிலைமை நன்றாக புரிகிறது. உங்க மாமியர ice வச்சு பாருங்க. எது சொன்னாலும் நீங்க சொல்ரது தான் அத்தை correct நு சொல்லுங. அப்பரம உங்க கணவரிடம் நல்லது எது கெட்டது எதுனு எடுத்து சொல்லுங்க. எவ்லொ கெட்ட மாமியாரா இருந்ததாலும் ice வச்ச உருகிருவங்க. இது என் அறிவுரை. இதையும் முயற்சி செட்யிது பாருங்க...

அன்புடன் அபி

தோழி ரெஜி,

தாயான உங்களுக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள். வீட்டிற்கு வீடு வாசப்படி. மாமியார், நாத்தனார் பிரச்சனை என்பது புகுந்த வீட்டில் வாழப்போகும் பெண்ணிற்கு இரு கண்களை போன்றது. நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது உங்கள் கணவர் உங்கள் மாமியாருக்கு ஒரே பிள்ளை போன்றுள்ளது. அவரும் இந்த பிள்ளையையே சார்ந்திருக்க வேண்டும். அதனால் தானோ என்னவோ உங்கள் நாத்தனார் உங்களுக்கு எதிராக எதையாவது சொல்லி கொடுத்து கொண்டே இருக்கிறார் போலுள்ளது. ஒரே பிள்ளை இருக்கும் வீட்டில் பெரும்பாலும் நடக்கும் சம்பவம் தான் இது. அதிலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி ஆவது தான் கொடுமையே.

முதலில் நீங்கள் உங்கள் மாமியாரிடம் உங்களை குறித்து இருக்கும் (நாத்தனாரால் உருவாக்கப்பட்ட) தவறான அபிப்ராயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். மாமியாரும் என்ன செய்வார் பாவம். பெண்ணும் மணம் முடித்து இன்னொரு வீடு போய் விட்டார். இனி மகன் தானே காலம் முழுக்க அவரை தாங்க வேண்டும். அதை நீங்கள் உங்கள் அன்பை கொண்டு எங்கே கட்டி போட்டு விடப்போகிறீர்கள் என்ற பயத்திலேயே இப்ப நடந்து கொள்ளலாம். உங்களை குறித்து நல்ல அபிப்ராயத்தை அவருக்கு ஏற்படுத்துங்கள். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை புரிய வையுங்கள். கடைசிவரை நீங்களும், உங்கள் கணவரும் அவருக்கு அரவணைப்பாக இருப்பீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். கண்டிப்பாக உங்களை உங்கள் மாமியார் புரிந்து கொள்வார். இன்னும் ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகும். அவர் இப்போது தனியாக இருப்பதால் இப்படியெல்லாம் எண்ணத்தோன்றுகிறது. ”சும்மா இருக்கும் மூளையில் தானே சாத்தான் குடியேறும்” அது போல தான் உங்கள் மாமியார் நிலையும். நீங்கள் இந்தியா வந்த பிறகு அனைத்தும் சரியாகும்.

இதையும் மீறி உங்கள் நாத்தனார் இது போன்ற சின்ன புத்தி வேலைகளை செய்து கொண்டிருந்தால் சும்மா இருக்க வேண்டாம். உங்கள் கணவரிடம் நாத்தனார் குறித்து ஆதாரங்களோடு தெரியபடுத்துங்கள். இனி உங்கள் குடும்பம் குறித்த விஷயங்களில் அவர் தலையிடக்கூடாது என்று தீர்க்கமாக சொல்லிவிடுங்க. முதலில் பயத்தை விடுங்கள். நீங்கள் பயந்து ஓட ஓட தான் இது போன்ற மனிதர்கள் துரத்திக் கொண்டே இருப்பார்கள். நின்று திருப்பி கேள்வி கேளுங்கள். உங்களை போல உங்கள் நாத்தனாரும் ஒரு வீட்டிற்கு வாழ் போன பெண் தானே. அவர் உங்கள் வாழ்க்கையில் செய்யும் அதே வேலைகளை அவருக்கு அவர் நாத்தனார் செய்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பாரா என்று கேளுங்கள். தோழியே அனைத்து விஷயங்களையும் கண்டு பயந்து கொண்டிருந்தால், அந்த பயமே ஒருநாள் நம்மை தின்று விடும். அடங்க வேண்டிய விஷயங்களுக்கு அடங்கி போகலாம். அடக்கப்பட வேண்டிய விஷயங்களுக்கும் அடங்கித்தான் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை... நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எதுக்கும் பயம் கூடாது.ஏன் நாம்யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. .குடும்பதைபிரிக்கவில்லை .பின் ஏன் பயம். நான் இப்படித்தான் என்று இருந்தால், இருந்தால் அவர்களும் ஒரு எல்லையோடு இருப்பார்கள். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது .குட்ட குட்ட குனிவது முட்டாள்தனம். அதுவேபிறகு உங்களுக்குப்பழக்கமாகிவிடும். அதனால் எதையும் கடமையையும் மறக்காமல், ,நேர்மையுடன்ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும் இல்லாவிட்டால் காலம் பூராவும் இதேகதிதான்.

சகோதரி,
தாய்மை பேறு அடைந்துள்ள நீங்கள் முதலில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் குழந்தை நல்ல முறையிலும், பூரண ஆரோக்கியத்துடனும் இருக்கும். மாமியார் நாத்தனார் பற்றிய பிரச்சனைகளை கணவரிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள். உங்களை மாமியாரும் நாத்தனாரும் புரிந்து கொள்ளும்வரை அவர்களிடமிருந்து விலகி இருக்க விரும்புவதாகவும் கணவரிடம் சொல்லி அவர்கள் சம்பந்தபட்ட பிரச்சனைகளை கணவரையே பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். உங்களுக்கு இப்பொழுது முக்கியம் உங்களின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அதில் கவனமாக இருங்கள். குழந்தை பிறக்கும்வரை பிடிக்காத விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். இறை வழிபாட்டில் மனதை செலுத்துங்கள். நல்லதே நடக்கும்.

அன்புடன்
THAVAM

ரெஜி நிலைமையில் தான் நானும் உள்ளேன் . என் கணவருக்கு மூன்று தங்கைகள். என் மாமியார் மாமனார் இருவருமே தங்களின் பெண்பிள்ளைகளின் வார்த்தைகளை வேதம் எனக் கருதுவார்கள் . இவருக்கும் அது தெரியும் . நான் திருமணத்திருக்கு பிறகு ௪ மாதங்கள் என் மாமியார் வீட்டில் இருந்தேன் . மனதை புண்படுத்தும் அளவு வார்த்தைகளை வீசுவார்கள் . இவர் பஹ்ரைன் ல இருந்தார். இவர் முதல் தங்கை விவாகரத்து ஆனவர் . மற்ற இரு தங்கைகளில் ஒருவருக்கு என் திருமனத்துக்கு பின் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 நாட்களில் அவர் பஹ்ரைன் கிளம்பிட்டார் . நான் அவர் முகத்த கூட சரியா பார்த்ததில்ல .

இவரிடம் நான் நடக்கும் பிரச்சனைகளை சொல்லும் போது இவர் உன்னக்காக நான் பேசினால் மனைவி பேச்சை கேட்டு ஆடுகிறான் என்பார்கள் . நான் எதுவும் கேட்க முடியாது என்று சொல்லிவிட்டார் . அந்த நொடி நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும். வாழ்க்கை நம்பிக்கை எல்லாம் அவர் தான் அப்படின்னு அவர நம்பி அவர் வீட்டுக்கு வந்தோம் . ஆன அவரே இப்படி பேசினா நான் என்ன பண்ணுவேன் .
அவர் 2 வது தங்கை திருமணத்திற்கு வந்தார் . அப்பொழுதும் பிரச்சன்னைகள் வந்தன. என் நாத்தனார் என்ன விவாகரத்து பண்ண சொல்லி இவருக்கு msg அனுப்புனாங்க. நானும் இவரும் என் அம்மா வீட்டில் தங்கிருந்தோம் . பிறகு என்னை என் அம்மா வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவர் பக்ரைன் கிளம்பினார். பின்னர் எனக்கு விசா எடுத்து அனுப்பினர் .இங்கு வந்த பின்னரும் பிரச்சனைகள் வந்தன.என் மாமியார் வீட்டுக்கு போன என் முகத்த பார்த்து கூட இவர் பேசமாட்டார் . ஆன இங்க இருக்குறப்ப நான் தான் , நான் மட்டும் தான் . என் நாத்தனார் ஏன் என்னை விரோதியா நினைகிரங்கனு தெரில . இத்தனைக்கும் 3 நாத்தனார் கல்யாண செலவு எல்லாம் இவர் தான் பண்ணுவார் . நான் இது வர இவர் salary என்னனு கூட கேட்டதில . நம்மக்கு என்ன savings இருக்குனு கேட்டதில. அப்பவும் சரி இப்பவும் சரி நான் இவர் கிட்ட சொல்றது மாமா கேட்கிறதவிட அதிகமா குடுங்க. இவர் வாங்குற இடம் நிலம் எல்லாம் என் மாமனர் பேர்ல தான் வாங்குறார். நான் இங்க இருக்கேன் (அப்ப நான் அம்மா வீட்ல இருந்தேன்) யார் பேர்ல பத்திரம் முடிக்க நு கேட்டார் . மாமா பேர்ல வாங்க வேண்டியது தானே அப்டின்னு சொன்னேன் . அவங்க கிட்ட இருந்து பிரச்சன்னைகள் வரும் பொழுது நான் என்னகுள்ள சொல்லிக்கிறது " குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை ".
எதையும் கண்டுக்காத....... நான் நானாக இருப்பேன் .... கோப படமாட்டேன் ... porumaiyinal ethaiyum sathikkalam ... kudumba vazhkkaiyil porumai remba avaisyam apdinratha nan kaththukittathu

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

really great.

இப்படித்தான் எல்லாப்பெண்களும் இருக்கிரோம். ஒரு கட்டத்தில் நம் மேலே நமக்கு கழிவிரக்கம் வந்துவிடும். அப்போ ஒன்றுமே செய்ய வழி தெரியாது. ஆனால் எனக்குத்தெரிந்தவரை பேச வேன்டிய இடத்தில் பேசிவிட வேன்டும். இல்லாவிட்டால் நாம்தான் பாதிக்கப்படுகிரோம். ஒவ்வொருத்தரும் உணர்ந்து புரிந்து கொள்வதற்குள் நம் மனமும் உடலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். உரிமையையும் தன் மானத்தையும் விட்டுக்கொடுக்க வேணும் என்கிற அவசியம் இல்லை.

(ஒவ்வொருத்தரும் உணர்ந்து புரிந்து கொள்வதற்குள் நம் மனமும் உடலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். உரிமையையும் தன் மானத்தையும் விட்டுக்கொடுக்க வேணும் என்கிற அவசியம் இல்லை). Its Realy True...... in my Married life...

மேலும் சில பதிவுகள்