பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

வாங்க... வாங்க... எல்லாரும் வந்து தீர்ப்பு சொல்ல உதவுங்க. கொஞ்சம் காரசாரமான தலைப்பு தான்!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் சரியான தேர்வு!இப்படி நானே என்னை புகழ்வதாய் நினைக்கவேண்டாம்!டாபிக் அப்படி!தேர்வு செய்தமைக்கு நன்றி!விரைவில் ஆயுதம் ஏந்தி வருகிறேன்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பட் வனிதா மேம்..மூன்றாவது அணியா ஏழ்மைன்னு சேர்த்திருந்தேன்..இரண்டு அணிக்கே ஆள் பத்தாது என நினைத்துவிட்டீர்களா?எனிவே இந்த பட்டி கின்னஸ் சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பட்டி தலைப்பு எதுக்கு வாதிடுரதுன்னு கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு யோசிப்போம்

நடுவர் அவர்களுக்கு இனிய மாலை வணக்கம். தலைப்பு மிகவும் சீரியசான விஷயமால்ல இருக்கு.

கண்டிப்பா ஒரு குடும்பத்தில் பெண் குழந்தையை விரும்பாதத காரணம் குடும்பமே என்றுகூறி எனது வாதத்தை துவக்குகிறேன்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் பருவம் வரும் வரை ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

அதற்க்குப்பிறகு தான் ஆரம்பிக்குதே பிரச்சனை. வயசுக்கு வந்த பெண்ணுக்கு எதுக்கு படிப்பு, எதுக்கு இவ்வளோ சுதந்திரம், ரொம்ப அலட்டரா போன்ற் பேச்சுக்கள், சமூகத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள்,

இவற்றையெல்லாம் கடந்து வந்து ஒரு கல்யாணத்தை செய்துவைக்கலாம்னு பார்த்தால் பெண் பார்க்கும் படலம் முதல் அந்தப் பெண்ணை கல்யாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிவைக்கரதுக்குள்ள இந்த ஜென்மமே போதும் பத்தும்னு அக்கிடுதது.

ஹப்பா....

கல்யாணத்த முடிச்சாச்சு கவலையெல்லாம் முடிஞ்சதுனு மட்டும் தப்புக் கணக்கு போட்டுடக்கூடாது... சீர், செய்முறைகள் இருக்கே...

நல்லா செகப்பா மூக்கும் முழியுமான பொண்ணா இருக்கறவங்களுக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் எல்லாம் கிடையாது(ஒரு சிலரைத்தவிர).

கொஞ்சம் சுமாரா, நடுத்தரக்குடும்ம்பமோ, அடித்தட்டுக் குடும்பமோ எவருக்கும் இந்த சீர் விஷயம் ரொம்ப பிரச்சனையான விஷயம் தான். எனவே இதுபோன்ற காரணஙளுக்காக தான் பெரும்பாலோர் பெண்குழந்தை பிறப்பதை விரும்புவதில்லை.

பண, வசதிகள் படைத்தவர்களுக்கு பரம்பரை பரம்பரையா பார்த்து பார்த்து சேர்த்துவைத்துள்ள சொத்துக்கள் போன்றவற்றை காலம் காலமாஇ கட்டிக்காக்க ஆண்பிள்ளைதான் வேண்டும் என்ற ஆசை, சீர் என்றபெயரால் சொத்து குறைந்துவிடக்கூடாதே என்ற சுய நலத்துக்காக, அப்படியே பெண்ணை பெற்றுவிட்டாலும் சொத்து,பணம் போன்றவை வேறொருவர்க்குக் கை மாறிவிடக்கூடாதே அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ நெருங்கிய சொந்தத்திலேயே கட்டிக்கொடுப்பது என்று பல்வேறு சூழ்நிலைகளில் பலியிடப்படுவது பெண்களின் வாழ்க்கைதான்.

வசதியில்லாதவர்களுக்கோ சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலிருக்கும் போது ஒரு பெண்ணை பெற்று வர்ளத்து ஒரு நல்லகாரியத்த நல்லாமுடியுமா என்ற கவலையிலேயே பெண் குழந்தை பிறப்பை வெறுக்கின்றனர்.

எனவே இதுபோன்ற பிரச்சைகளுக்குப் பயந்து, தப்பித்துக்கொள்ளும் நோக்கிலேயே பெண்சிசுக்கொலைகள் நடைபெற்கின்றது...

இவை அனைத்தையும் நடப்பது குடும்ப சூழ்நிலைகள் காரணமாகத்தான்... எனவே பெண்சிசுக்கொலைக்கு இதைவிட வேறு என்ன காரணமாயிருக்கும் சொல்லுங்கள்.... நன்றி நடுவரே.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலே தலைப்பில் சொல்லி இருக்கும் விளக்கம் பாருங்க... நீங்க வளர்த்து, செல்வு செய்து கல்யாணம் பண்றது கஷ்டம்னு சொல்லி வாதாடினா அது “சமூகமே காரணம்”னு இல்ல வரும்... தான் உங்க பதிலளி தட்டாம பதில் போடுறேன்... ;) காரணம்... வரதட்சனை இல்லாம, நகை நட்டு இல்லாம பெண்னை கல்யாணம் பண்ணி கொடுக்க சமூகம் விடுவதில்லை... அதனால் தான் அதை சமூகம் என்ற பகுதியில் சேர்த்தேன். யோசிங்க நாளை வந்து எல்லாருக்கும் பதிவு போடுறேன்.

ஷேக்.. அதுவும் சமூகம்’ல வந்துடும். ஏன்னா ஏழ்மையில் பெண்ணை வளர்ப்பது கடினம்னா... அவளை கட்டி கொடுப்பது கடினம்னு தானே அர்த்தம்?? அதான் விட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... அணி முடிவாச்சா??? தலைப்பில் ஏன் மாற்றம்னு குழப்பம் தீர்ந்ததா?? வாதத்தோடு வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... சீக்கிரம் முடிவெடுத்து வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க அணி எதுன்னு குழப்பம் போச்சா??? சரியா முடிவு பண்ணிட்டீங்களா?? வாங்க இந்த பக்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமுதாயமே என்ற அணியில் வாதாட வந்துள்ளேன்.
*பிறந்தது பெண் என தெரிந்ததும் பெற்றவர்கள் நினைவுக்கு முதலில் வருவது வரதட்சணையே!வேறு எந்த காரணத்திற்காகவும் பெற்ற பிள்ளையை யாரும் வெருப்பதில்லை...
*இந்தியாவில் மட்டுந்தான் பெண்ணை பெற்றவன் வருங்கால கடன்காரன்..ஆண்களை பெற்றவன் வருங்கால லட்சாதிபதி...
*வறுமை மட்டுமே பெண் சிசுவை வெறுக்க காரணமாய் இருக்கமுடியாது..இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் எத்தனை பேர் தெரியுமா? இதில் பெண்களை பெற்றவர்தவிர மற்றவர்கள் வறுமையை தைரியமாய் எதிர்கொள்கிறார்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்