பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

சமுதாயம் தான்னு 3 பாயிண்ட்டில் முடிச்சுட்டீங்களே... வாங்க... இன்னும் கருத்துக்களோடு!!!

ஆனா ஒன்னு... பெண்ணை பெற்றவன் கடங்காரன் ஆகறான்னு முடிக்காம, ஆண்களை பெற்றா லட்சாதிபதின்னு சொல்லி வம்பிழுக்குறீங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமூகம் தான்னு நீங்களும் அந்த பக்கமே தாவிட்டீங்களா??? இதெல்லாம் ரொம்ப அநியாயம்... ;) எதிர் கட்சிக்கு ஆளில்லாம போச்சே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அசத்திட்டீங்க... எதிர் அணி பக்கம் ஸ்ட்ராங்க்கா வந்துட்டீங்க.

//தனக்கு பின் தனது சொத்து மற்றும் தொழிலை கவனித்துக் கொள்ள ஒரு ஆண்வாரிசு வேண்டும்//

//பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் கொள்ளி வைக்க பேரன் வேண்டும்.//

//பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஆண்குழந்தைகளுக்கு என்பதாலேயே இருக்க வேண்டும்// - அருமை அருமை... நான் யாராவது எதிர் அணிக்கு வர மாட்டாங்களா, இதெல்லாம் சொல்ல மாட்டாங்களான்னு எதிர் பார்த்து காத்திருந்த பாயிண்ட்ஸ். நச்சுன்னு புட்டு புட்டு வெச்சுட்டீங்க.

இன்னும் இன்னும்... இன்னும் நிறைய கருத்துக்களை முன் வைங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பதிவுகள் அடை மழை போல கொட்டப் போவது நிச்சயம்// - வெறுப்பேத்தாதீங்க... 2 நாளா இரண்டு பக்கத்தை தாண்டல பதிவுகள். :(

நீங்களும் சமூகம் பக்கமா???

//தனக்காகத் தோன்றா விட்டாலும் அது போல பெண் குழந்தைகளின் பிறப்பைப் பெற்றோருக்கு பாரமாகக் கருத வைப்பது சமுதாயமே// - வித்யா வித்யாசமா ஒரு கருத்தை சொல்லிருக்காங்க. உண்மை எங்க வீட்டுக்கு வருபவர்கள் கூட பலர் “இரண்டும் பொண்ணா???”னு சோகமா கேட்டு நானே பார்த்து இருக்கேன்.

//சமூகத்தின் பேச்சைத் தூக்கி எரிந்து விட்டு நம் பிள்ளைகளை வளர்த்தல்.. பெண் என்ன ஆண் என்ன எல்லாருமே ஓரினம் தான்// - சரியா பாயிண்ட்... ஆனா அப்படி யாரும் வருவதில்லைன்னு தானே உங்க அணி சொல்லிருக்காங்க.. பார்ப்போம்.

மிக்க நன்றி... இன்னும் வாதங்களோடு வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

னீங்க எந்த அணிக்கு வாதிடுறீங்கன்னே எனக்கு இன்னும் புரியல ;( மன்னியுங்கள். நல்ல விளக்கமான வாதத்தோடு மீண்டும் வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அசத்துறீங்க.. ஒவ்வொரு ஸ்டேஜ்ஜுலையும் பெண்ணை பெற்றவர் படும்பாட்டை புட்டு புட்டு வெச்சுட்டீங்க ;)

எதிர் அணி என்னப்பா பதில் சொல்ல போறீங்க??? சமூகம் பெற்றோரை குழப்புதாமே... நிறைய செலவு பண்ணா பொண்ணு திரும்ப செய்யவா போறான்னு கேட்குதாம்... வாங்க பதில் சொல்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க முதல் பதிவு இது என்பதில் உங்களை போல் எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நீங்க சொன்ன மாதிரி எந்த அணி பக்கமும் இல்லாத கருத்து.

உண்மை ”சில” குடும்பங்களில் மாற்றங்கள் இருக்கிறது... ஆனால் இன்றும் “பல” குடும்பங்களில் பெண் குழ்ந்தை வேண்டாம் என்று சொல்கிறார்களோ இல்லையோ “பெண்ணாக பிறந்தால் வருந்துகிறார்கள்” / “ஏமாற்றமடைகிறார்கள்” என்றே சொல்ல வேண்டும். நிச்சயம் இதில் படித்தவரும் வேறுபடவிலை. அனுபவத்தில் கண்ட உண்மையாலேயே இந்த தலைப்பை தேர்வு செய்தேன்.

நீங்க சொல்வது போல் இந்த “சில” சில காலத்துக்கு பின் “பல” ஆகினால் மகிழ்ச்சியே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பா.... தேன்மொழிக்கு கை கொடுக்க குடும்பம் பக்கம் ஒருவராவது வந்தீங்களே!!! மிக்க நன்றி :)

மொத்தத்தில் பெண்ணை பெற்றால் கட்டி கொடுப்பதில் வரதட்சனை பிரெச்சனையை விட பெண்ணை பெற்ரவன் மனதளவில் படும் வேதனை அதிகம்னு சொல்றீங்க!!! கலக்குங்க.

வாங்க இன்னும் வாதங்களோடு... காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தனக்கு பின் தனது சொத்து மற்றும் தொழிலை கவனித்துக் கொள்ள ஒரு ஆண்வாரிசு வேண்டும்//

ஆண் பிள்ளைகள் சொத்துகளை மட்டும் தான் கவனிப்பார்கள். உங்களை அல்ல, உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா?
பொண்ணு பொறந்தா தாவணி போட்ட வுடன் மறந்து விட வேண்டும். பையன் பொறந்தா பொறந்த உடனே மறந்து விட வேண்டும்.

//பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஆண்குழந்தைகளுக்கு என்பதாலேயே இருக்க வேண்டும்//

நமது நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி கொண்டு வருகின்றன. ஆண் பிள்ளைகள் பார்த்து கொள்ளும் லட்சணம் தான் தெரிகிறதே.
இன்று எத்தனை வீட்டில் பெற்றவர்களை பார்த்து கொள்கிறார்கள் ஆண் மக்கள். மருமகள் வந்த பிறகு எல்லோருக்கும் முதியோர் இல்லங்கள் தான் சொந்த வீடு.

ராஜி

இதோ என் இரண்டாம் கட்ட வாதத்தோடு வந்து விட்டேன்...அதாவது பெண் பிள்ளை நா பென்ஸ் கார் மாதிரி.. இல்லேனா பட்டுப் புடவை மாதிரி... அதைப் பாதுகாப்பது கஷ்டம் என்று நினைக்க வைக்கும் சமுதாயத்தைப் பற்றியே என் இந்த வாதம்....

நடுவரே... ஒரு ஆணோ பெண்ணோ வாழும் சூழல் தான் அவர்களை பெண் சிசு வேண்டாம் என்று சொல்ல வைக்கிறது... யாரும் தங்கள் பெரும்பாலான நேரத்தைக் குடும்பத்தோடு செலவிடுவதில்லை... அறியாப் பருவத்தில் இருப்பதோடு சரி... அதன் பின் வெளி உலகம் எனப்படும் சமுதாயத்தோடு மட்டுமே தன் பாதி நேரத்தை கழிக்கின்றார்கள்... ஒரு மனித மனதினுள் தோன்றும் எந்த ஒரு எண்ணத்திலும் சமுதாயத்தின் பாதிப்பு நிச்சயம் இருக்கும்...

பெண்பிள்ளையை வளர்ப்பது சுலபம் இல்லை என்ற ஒரு எண்ணம் பல பேருக்கு இருந்தது உண்மை... காரணம்.. அந்தக் காலத்தில் ஒரு பெண் பிறந்தால் அவளை நல்ல முறையில் திருமணம் செய்து அதன் பின் ஒவ்வொன்றிற்கும் செலவு செய்து... இன்னும் சீர் செய்வதால்... அன்று தந்தை ஒருவரின் உழைப்பிலேயே செய்ய வேண்டி இருந்தது... அவர்கள் கஷ்டப்பட்டார்கள்...
ஆனால் இன்று??? வீட்டில் உள்ள பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.. படிப்பிலும் வெற்றி பெறுகிறார்கள்.. இன்று விமானம் ஓட்டும் பெண்கள் கூட இருக்கிறார்கள்... அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள் படும் சந்தோஷமும் கொள்ளும் பெருமிதமும் அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்குப் புரிய வைக்கும்... பெண் பிள்ளைகள் மீதான வெறுப்பும் குறையும்...பெண் பிள்ளையால் முதியோர் இல்லத்தில் விடப்பட்ட பெற்றோர்கள் மிக மிகக் குறைவு... இன்று தானே படித்து தானே சம்பாதித்து குடும்பத்தைக் காக்கும் பெண்கள் எத்தனை பேர்...??? இதைப் புரிந்து கொள்ளாததால் தான் பெண் சிசுக்கள் வேண்டாம் என்று வெறுக்கிறார்கள்....

"ஒரு ஆணைப் படிக்க வைத்தால் அந்த ஆண் மட்டுமே படிதவனாகிறான்... அனால் ஒரு பெண்ணுக்கு கல்வி கிடைத்தால் அந்தக் குடும்பமே கல்வி கற்றது போல..." தமிழ் புத்தகத்தில் நாம் படித்திருப்போம்... இதை நம் மனதில் வைத்து நாம் இன்று இதைப் பற்றி விவாதிக்கிறோம்... நாளைய சமுதாயத்தில் இது போன்ற பெண் சிசுக்களை வெறுப்பது குறையும்... காரணம் இதைத் தப்பு என்று எடுத்துரைக்க நம்மைப் போன்றவர்கள் சமுதாயமாக இருப்பதால்... நான் நாலு பேருக்கு சொல்லுவேன்... அவர்கள் இன்னும் நாலு பேருக்கு சொல்லுவார்கள்.. இது பலுகிப் பெருகி... நாளை ஒரு நல்ல சமுதாயமாக உருமாறும்... இன்று பெண் குழந்தைகளைப் பெற்று வளர்க்கத் துடிக்கும் கணவன் மனைவிகள் பலர்... அனால் இவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் படித்தவர்களே...
நாளை இவர்களைப் பார்த்து படிக்காத மக்களும் தெரிந்து கொள்ளுவார்கள்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

மேலும் சில பதிவுகள்