பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

;( அழுதுடுவேன்... நன் தேர்வு செய்த தலைப்பு படு குழப்பம் போலிருக்கே... ;(

நீங்க தேன்மொழி பக்கம் குடும்பம் காரணம்னு வாதாடினீங்க... இப்போ தேன்மொழி பாயிண்ட்ஸ்கே ஆப்பு வைக்கறீங்களே... :(( நான் என்ன சொல்ல??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... விடாம வாதங்களை வைக்கறீங்க... எதிர் அணியில் இருந்து தான் சத்தமே காணோம்!!! நீங்க புட்டு புட்டு வைக்குறதை பார்த்தா “சமுதாயமே”னு நான் தீர்ப்பு சொல்லி நாளைக்கே பட்டியை முடிக்க வேண்டியதாயிடும் போலும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாக் காலகட்டத்திலும் சமுதாயம்தான் ஆண் முடிவெடுக்கக்கூடியவனாக இருக்கிரான் பெண் அடி பணியக்கூடியவளாக இருக்கிராள் அப்படி இருக்கும் வரை சமுதாயம் தான் காரணமாயிருக்கும்

ஆம் முதலில் பட்டியின் தலைப்பு மிகவும் குழப்பமாக தான் உள்ளது.
சமுதாயம் நு சொல்றீங்களே , அப்படின்னா என்ன, 4 குடும்பங்கள் சேர்ந்தது தான் ஒரு சமுதாயம். அப்படி இருக்க, 4 குடும்பத்துல நடக்கறத தான் நாம சமுதாயம் நு சொல்றோம். குடும்பம் இல்லாம சமுதாயமே இல்ல. குடும்பம் தான் சமுதாயம். சமுதாயத்துல இருக்குறவங்க எல்லாமே குடும்பங்களை சார்ந்தவர்கள்தானே.

ராஜி

ஆசையாக பட்டியில கலந்துக்கலாம்னு வந்தா தலைப்பு எஅனக்கு பொருந்தல்ல/ ஊடகங்களில் பெண் சிசுக் கொலை ப்ற்றி தெரிந்ததோடு சரி, இனிமேலும் அது போன்ற செய்திகள் நேரடியாகக் கேட்டிடக் கூடாது என்று இறைவனைப் ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்/ ஒரு பெண்பிள்ளைய வச்சிட்டு நாம இன்னொரு பொண்ணூ வேணும்னுட்டிருக்கோம். பெற்றோர் தமக்குப் பிறந்த குழந்தையை தன்னுடைய உயிர் என நினைத்தால் ஆணோ பெண்ணோ அதை அழகாக வளர்க்கலாம்/ அந்தக்குழந்தைக்குரிய அங்கீகாரம் பெற்றோரால் சரியாகத்தரப்பட்டால் குடும்பம் சமூகம் எல்லாம் சூன்யம். இந்த இடத்தில் என்னுடைய கருத்து பொருந்த வில்லையென்றால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் மனதில் தோன்றியதை சொன்னேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அன்பு தோழிகளுக்கு... இந்த பட்டியில் தலைப்பை நான் எவ்வளவோ விளக்க முயற்சித்தும் முடியாமல் போனதாகவே உணர்கிறேன். அனைவரது குழப்பத்துக்கும் இதுவே காரணம். இப்படி ஒரு சூழலில் இப்படியே நடத்தனும்னு நான் நடத்த விரும்பல. முதல்ல தெளிவா ஒரு தலைப்பை விளக்க முடியாமல் போனதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இந்த வார பட்டியை இதோட முடிக்கறேன். இதுவரை பதிவிட்டு பட்டியை நடத்த உதவிய தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. பாதியில் நிறுத்தியதுக்காக முதல்ல மன்னிச்சுடுங்க. அடுத்த வாரம் கலாட்ட கிச்சன் முடியட்டும், அடுத்த ஞாயிறு அன்று நடுவராக வேறு ஒருவரோடு இதே பட்டிமன்றம் - 45, வேறு தலைப்பொடு துவங்கும். தவறுக்கு மீண்டும் மன்னிக்கவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனி வாதங்களை பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக்கறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டியை நடத்த ஆள் இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு முறையும் ,தன் இரு குழந்தைகளையும் சமாளித்து, அத்தனை வேலைக்கு இடையிலும் தடையில்லாமல் நடத்த என்றுமே முன் வரும் நடுவர் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். ஒரு செயல் செய்வது என்பது முக்கியம் இல்லை.. ஆனால் எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.. அதில் உங்களை பற்றி நாங்கள் அறிவோம்.. செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியும், சுத்தமும் இருக்கும்.. அதற்கு செய்யும் வேலையில் உள்ள ஆர்வமே காரணம்.உங்களுக்காகவே வாதிட நினைத்தேன் ..ஆனால் நானும் பிஸி.. ;(

சரி... எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ஏன் பட்டியை நிறுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள் நடுவரே ? பட்டியின் தலைப்பில் யாருக்கு என்ன குழப்பம்.. ? பட்டியின் விதிப்படி, இதை எல்லாம் இங்கே பேசக் கூடாது. பட்டி சிறப்பு இழையில் தான் பேச வேண்டும். பட்டி தலைப்பு பற்றிய சந்தேகத்தைக் கூட சிறப்பு இழையில் கேட்டால் பட்டியில் தேவையில்லாத பதிவுகள் இருக்காது..

பெண் சிசு கொலைக்கு காரணம் சமூகமா? இல்லை குடும்பமா என்பது தலைப்பு.. ஷேக்கும் நல்ல தலைப்பு தான் கொடுத்துள்ளார்.. இந்த கால கட்டத்தில் ஏன் இந்த தலைப்பை வாதிட முடியாது ? ஏன் இன்னும் பெண் உரிமை பற்றி பேசிக் கொண்டுதானே இருக்கிறோம். பெண் சிசு கொலை என்பது இன்னும் பல கிராமங்களில் நடந்துக் கொண்டே தான் உள்ளது..

பல குடும்பம் சேர்ந்தா தான் ஒரு சமூகம்.. பல சமூகம் சேர்ந்தாதான் ஒரு ஊர்..ஊரு சேர்ந்தா வட்டம்.. வட்டம் சேர்ந்தா மாவட்டம்.. இன்னும் நிறையா இருக்கு..

அது சரிதான்.. ஆனா பல குடும்பம் சேர்ந்து ஆகும் சமூகம் நமக்கு சோறு போடுமா? நம்ம குடும்பம் தான் சோறு போடும்.சமூகம், குடும்பம்னு ஏன் பிரிச்சு பேச முடியாது,,. இன்னும் விரிவா பார்த்தா.. ஒரு குடும்பத்துக்குள்ளேயே.. பிள்ளையானது அம்மா செல்லமா.. அப்பா செல்லமானு கூட தலைப்பு வந்து இருக்கு.. நல்லாவும் வாதிட்டு இருக்காங்க.. அவங்களை பிரிச்சு பார்க்க முடியாது ஒரே குடும்பம் தானு சொன்னா வாதிடவே வர வேண்டாமே...

பட்டியை பற்றியோ அதன் தலைப்பை பற்றியோ விமர்சனம் செய்பவர்கள் வாரம் தோறும் பட்டியை ஏற்று சிறப்பாக நடத்தலாமே.. சிலர் பொழுதுபோக்கிற்காக இங்கே வரலாம்.. சிலருக்கு குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பது அறுசுவையே..

பட்டியில் பங்கு பெற விருப்பம் இல்லை என்றாலும், போதுமான தகவல் கிடைக்கவில்லை என்றாலும், தங்களுக்கு விவாதிக்க ஏற்ற தலைப்பு இல்லை என்றாலும் ஒதுங்கிக் கொள்ளலாமே.. இது அரட்டையோ அல்லது பட்டியின் தலைப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று விமர்சனம் கேட்கும் பகுதியோ இல்லை.. சும்மா அரட்டையில் பேசுவது போல வந்து பதிவிடும் பகுதியும் இது இல்லை.. ஆளாளுக்கு கருத்து சொல்லும் பகுதியும் இல்லை.. பின் ஏன் நீ வந்து சொல்கிறாய் எனக் கேட்பவர் பற்றி எனக்கு கவலையும் இல்லை.. நானும் பட்டி சிறப்பிழையில் தான் இதை சொல்லனும்னு நினைத்தேன்..ஆனா அது யாருக்கும் தெரியாமல் போகுமே என இங்கே கூறிகிறேன் குறிப்பாக குழப்பம் இருக்கும் போது.. இங்கே சொல்வது அத்தனை அவசியம்..

முடிந்தால் கலந்துக் கொண்டு நல்லவிதமாக நடத்தி செல்வோம். இல்லையேல் மற்ற பகுதியை பார்த்துக் கொண்டு செல்வோம். நான் ஏதும் தவறாக கூறவில்லை என நினைக்கிறேன். பட்டியின் தலைப்பில் ஏதும் சந்தேகம் இருந்தால் அதை பட்டி சிறப்பிழையில் கேட்கவும். இங்கே கேட்டு பட்டியை குழப்ப வேண்டாம். புதிதாக வந்தவர் தெரியாமல் செய்துவிட்டோம் என்றாலும் இனி வரும் காலத்தில் சரி செய்யலாம். நடுவரின் பெயரை சொல்லலாமல், மற்றவரின் பெயரையும் குறிப்பிடாமல் பட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும்..

நடுவரே..
குடும்பம் தான் காரணம் ...
பெண் சிசுக் கொலைக்கு சமூகம் காரணம் ஆகாது நடுவரே...
நம்மை சுற்றி பல இன்னல்கள் இருக்கும் சமூகம் இருக்கவே செய்யும். அதில் இருந்து பிள்ளையை வேலி போல காத்து வளக்கும் பொறுப்பு குடும்பத்தில் உள்ளவர்க்கே உள்ளது. அவர்கள் சரியாக இருந்தால் எந்த சமூகமும் ஏதும் செய்ய முடியாது..

தனக்கென இருக்கும் பொறுப்பையும், கடமையையும் மறந்து கிடப்பவர்களே சமூகத்தின் மீது குறை சொல்வார்கள் நடுவரே..

என்ன தான் சமூகம் வரதட்சனை, பெண் பிள்ளையை வளர்க்கும் செலவு அது இது என்று குறை கூறினாலும், பிள்ளையை கொல்ல நினைப்பவர்கள் பெற்றவர்கள் தானே... தன் கையில் இருக்கும் முடிவை விட்டுவிட்டு சமூகத்தை காரணம் சொல்வது தன்னையே ஏமாற்றுவது போல நடுவரே ..

இன்னும் பல உண்டு.. பட்டியை நிறுத்த வேண்டாம் என்பது என் பணிவான கருத்து.. இருவர் வாதிட்டாலும் தீர்ப்பை சொல்ல நீங்க ரெடினா வாதிட நாங்க ரெடி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவருக்கு வணக்கம்.

நான் நிறுத்திப் போடாதீங்கோ என்று சொல்ல நினைத்ததை எனது அணிக்காரர் சொல்லி விட்டார் நன்றி.

பி.எஸ்.சி எட்டும் வரை வீட்டிலிருந்து தினம் நடந்து பள்ளி சென்றேன், ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் பஸ்ஸில் பயணிக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது இந்த இடி மன்னர்கள் தொல்லை...எம்.சி.ஏ. சேர்ந்த பிறகு இரவு தோழிகளுடன் இரவு தனியாக பயணிக்கும் போதுதான் தெரிந்தது இந்த நோண்டும் தொல்லை... இரவு அனேகமாக தூங்காமலேயே போய் சேர்வேன். அன்று வகுப்பில் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும். உடல் சோர்வு மட்டுமல்லாமல் மன சோர்வும் படுத்தும். ஏன் எல்லா ஆண்களுமே இப்படித்தானா என்று ஒரே குழப்பம். அப்போது என் தோழி கொடுத்த அட்வைஸ், "நீ தைரியமாக சீட்டிலிருந்து எழும்பி பின்னாடிப் பாரு, நீ பார்க்கறது எல்லாருக்கு தெரியணும், குறைந்தது ட்ரைவர், கண்டக்டருக்காவது தெரியணும்" என்று. இந்த பாயிண்டை ஏன் இங்க சொல்றான்னு நீங்கள் இன்னும் குழம்பினால் மன்னிக்கவும். வந்துட்டேன் பாயிண்டுக்கு...

இது அவளது அம்மா கொடுத்த அட்வைஸ். அவள் தனியாக ட்ரெயினில் வருபவள். இப்படி பெண் பிள்ளைகளை பெற்று பாதுகாப்பது கடினம் என்ற எண்னத்தில் விட்டுவிடாமல் எப்படித் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கத் தவறுவது குடும்பமே... தெளிவா சொல்லிட்டனா???

//இதோ என் இரண்டாம் கட்ட வாதத்தோடு வந்து விட்டேன்...அதாவது பெண் பிள்ளை நா பென்ஸ் கார் மாதிரி.. இல்லேனா பட்டுப் புடவை மாதிரி... அதைப் பாதுகாப்பது கஷ்டம் என்று நினைக்க வைக்கும் சமுதாயத்தைப் பற்றியே என் இந்த வாதம்....//

பென்ஸ், பட்டு புடவை என்று உயிரற்ற பொருட்களோடு கம்பேர் பண்ணுவதை விடுத்து பெண்ணும் எலும்பும் சதையும் நிறைந்த மனித ரூபம்தான் என்பதை குடும்பம் உருவாக்கத் தவறுகின்றன. தேவையில்லாமல் சமுதாயத்துன் மீது பழிப் போடுகின்றனர்.

இன்றைய நிலமையில் சிறிது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. எனது உறவில் ஒருவருக்கு பெண் தேடும்போது இது புரிந்ததது.

நடுவரே குழம்பாமல் தொடருங்கள், இன்னும் வாதங்களுடன் கண்டிப்பாக வருவேன்.

நடுவரே,

பட்டியை சரியான நேரத்தில் நடுவர் பொறுப்பேற்று ஆரம்பித்து நடத்துவதற்கு வாழ்த்துக்கள்.
நல்ல தலைப்பு. வாதாட கருத்துக்கள் யோசித்து வைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக பதிவு போட முடியவில்லை.

பட்டியை முடிக்க நினைக்கும் உங்கள் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. ;-(

தயவுசெய்து பட்டிக்கு வாதாடும் நோக்கத்தில் வரும் பதிவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற தேவையற்ற பதிவுகளை,நடுவர் எனும் முறையில் தடுத்து/தவிர்த்து பட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியை தொடர்வீர்கள் எனும் நம்பிக்கையில் என் வாதங்களை வைக்கிறேன்......

********************************************

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

********************************************
நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து,அணிகளை பற்றி தெளிவான விளக்கங்களும் கொடுத்து இருக்கீங்க.இதற்கு மேலும் அணிகள் பற்றி வேறென்ன விளக்கம் வேண்டும்?

இன்றைய சூழலிலும் இந்த தலைப்பு அவசியமானதே!

கருவில் உள்ள குழந்தை ஆணா?பெண்ணா? என்று தெரிந்து கொள்வதை நம் அரசே தடை செய்துள்ளது.காரணம்....கருவில் உள்ளது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் வேண்டாம் என்று அழிக்க நினைப்பவர்கள் பெற்றவர்களும்,குடும்பமும் தான் நடுவரே!

அதனால் தான் அரசே ஸ்கேனில் என்ன குழந்தை என்று சொல்வதை தடை செய்துள்ளது.

என்னதான் சமுதாயத்தில் இருக்கும் அரசாங்கமும்,மருத்துவர்களும் கருவில் என்ன குழந்தை என்று சொல்லாமல்,பெண் சிசு அழிவை தடுக்க முயன்றாலும்,
பிறந்தவுடன் அந்தக் குழந்தையை குடும்பம் தான் அழிக்கவோ அல்லது மறுக்கவோ செய்கிறது.

இதை தடுக்கவே அரசாங்கம் தொட்டில் குழந்தை திட்டம் போன்ற திட்டங்களை பெண்சிசுவை காக்கவே செயல் படுத்தி வருகிறது.பெண்சிசு வேண்டாம் என்று மறுத்தால்,அதை அழிக்காமல் இந்த அரசு தொட்டிலில் விடலாம்.குழந்தை அரசாங்கமே பொறுப்பேற்று வளர்க்கும்.இது போன்று சமுதாயம் பெண்சிசுவை காக்க முயன்றாலும் அழிக்க,மறுக்க நினைப்பது குடும்பமே!

அதனால் பெண்சிசு மறுக்கப்படுவதன் காரணம் குடும்பமே என்று கூறி என் முதல் கட்ட வாதத்தை வைக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்