பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

அழகான வாதங்கள் என் அணி தோழிகளே ;)

நடுவர் அவர்களே...
பெண் குழந்தையை வெறுக்க வைக்கவும், சிசுக் கொலைக்கும், விரும்பாமல் இருக்கவும் சமூகம் தான் முக்கிய காரணமாக உள்ளது என்று எங்கள் அருமை எதிரணி தோழிகள் கூறியுள்ளனர்..

சமூகம் வன்சொல் தான் ..அதில் இருந்த தான் பெற்ற பிள்ளையை காக்கமுடியாமல் போகும் எனில் அது முழுக்க குடும்பம் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்..

உதாரணத்துக்கு.. நம்ம சமூகத்தில் யாருமே படிக்கலை.. நீ ஏன் பொண்ண படிக்க வைக்கிற.. அது பொறந்ததே வேஸ்ட்னு... அந்த சமூகத்தின் அங்கம் கூறினால்.. ஆமாம் என ஆட்டுமந்தை போல தலையாட்டி சமூகம் தான் எனக்கு படிக்க வைக்க வேண்டாம்னு சொல்லி தந்தது என ஒரு குடும்ப அங்கத்தினர் சொன்னால் அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும்?

சரி நம் சமூகத்தின் யாரும் சரியா படிக்கலை.. ஆனா நான் என் பொட்டபுள்ளைய படிக்க வைக்கறேன்.அது நல்லா இருக்கட்டும்னு ஒரு பெத்தவன் நினைத்தால்.. எந்த சமூகமும் அந்த பிள்ளையின் எதிர்காலத்தை சீரழிக்க முடியாது,..

அதனால் யோசிங்க.. பெண் சிசு, பெண் பிள்ளையின் வாழ்க்கை யார் கையில் உள்ளது. முழுக்க முழுக்க குடும்பத்தின் கையில் தான் நடுவரே.. அந்த குடும்பம் சரியாக இல்லாததால் தான் பெண் பிள்ளை பற்றிய தேவையில்லா பேச்சுக்கள் வருகின்றன..

அதனால் பெண் பிள்ளை மறுக்கப்படும் காரணம் குடும்பத்தினரிடம் தான் அதிகம் உள்ளது..

சரி..ஏன் மறுக்கிறார்கள் ?

1. வாரிசு என்பது ஆண் தான்.. அவன் மூலம் தான் தன் பரம்பரை வளரும் எனும் தேவையில்லாத காரணத்தால்,

2.சீர், சடங்கு, சம்பரதாயம்,திருமணம், சீமந்தம், குழந்தை பிரசவம், பண்டிகை சீர் என அனைத்தும் செய்ய வேண்டிய காரணத்தால்,

3.புருசன் சரியில்லை எனில் கண்ணை கசக்கிக் கொண்டு பிரந்த வீட்டிற்கு தான் வரும் என்பதால்,

4.கொல்லி போட ஆண் தான் வேண்டும் என்பதால்,

5.கடைசி வரை கூட ஆண் தான் இருப்பான் என்பதால்,

6.ஆண் மகன் உழைப்பும், பணமும் தனக்கு கிடைக்கும் என்பதால்,

7.பெண் எனில் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதால்,

8.இன்னொரு வீட்டிற்கு செல்லும் பெண்ணுக்கு ஏன் படிப்பு செலவு என நினைப்பதால்,
என இன்னும் பல காரனத்தால் பெண் பிள்ளைகள் வெறுக்கபடுகின்றன..

அதற்கு காரணம்..சமூகமா?
இல்லை நடுவரே... நான் மேலே குறிப்பிட்ட காரணத்தில் சமூகத்தின் செயல்பாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.. அதற்காக பயந்து பெண் பிள்ளை மீது வெறுப்பை காட்டும் குடும்பம் ‘மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எறிப்பதற்கு சமம் ஆவார்கள்’

குடும்பம் நினைத்தால்,
ஏன் வதவதனு பெத்துக் கொள்ள வேண்டும்.. பெண் எனில் தன் வருமானத்துக்கு ஏற்ற வண்ணம் ஒரு பிள்ளையோடு நிறுத்தி அதை நன்றாக வளர்க்க வேண்டியது தானே

பெற்றது பெண் எனில் அதற்கு காரணம் யார்..? அந்த குழந்தையா? பெற்றவர் தானே.. அதை உணர்ந்து நல்லபடி வளர்க்கலாமே...

ஏன்..சீர் சடங்கு, திருமணம் என அனைத்தையும் நல்லவிதமாக செய்யலாமே.. நீ பெற்ற பெண் தானே.. அதை விட வேறு என்ன கடமை உள்ளது..
ஏன் பெண் கொல்லி போட்டால் எறியாதா?

இல்லை கண்ணை கசக்கி கொண்டு பிறந்தவீட்டிற்கு வந்தால், அதற்கு ஒரு நல்ல ஆதரவை தர வேண்டியதும் அந்த குடும்பத்தின் கடமை தானே.. ஆனால் எத்தனை பேர் அவ்வாறு இருக்கிறார்கள் நடுவரே ?...

எனவே நடுவரே.. சமூகம் எத்தனை காரணகர்த்தாவாக இருந்தாலும், குடும்பம் நினைத்தால், பெண் பிள்ளையை ஆதரிக்க முடியும்.. அதனால் குடும்பத்தின் கையில் தான் அனைத்தும் உள்ளது..

ஊதாரியாக.. பொய்யான வாழ்க்கை வாழும் சில குடும்பத்தினாலேயே பெண் இனம் வெறுக்கப்படுகிறது..

மீண்டும் வருவேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அருமையான தலைப்பு
........... இன்றைக்கு ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தலைப்பு ............................சமூகம் தான் காரணம்.
அந்தகாலத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது. அப்போவும் சமூகம்தான் அப்புறம் போர்க்கால்ங்களில் பெண்கலந்துகொள்ள்வும் முடியாது
பற்றக்குறைக்கு பாதுகாக்கவேனும்வேற
அதுக்காகவே உயிருடன் பெண்பிள்ளையை புதைத்தார்கள்
பிறகு பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் உடன்கட்டை ஏற வச்சாங்க
அப்புறம் வரதட்சணை ஆணை உயர்த்தி பெண்ணை விலைபேசுனாங்க
அதுக்காகவும் பெண்குழந்தை வேண்டாம்னு நினைச்சாங்க
இப்பொ பெண்படிச்சு வேலைக்குப்போனாலும் அந்தபெண்ன்ணைவிட்டுடு எத்தனையோ ஆண்கள் விட்டுட்டு போயிடுராங்க
இப்படி ஒவ்வொருகாலத்திலும் பெண் மதிக்கப்படுவதில்லை
ஆனால் இதே சவுதியில் பெண்குழந்தைஎன்றால் சந்தோசம்
அங்கே பெண்ணுக்குத்தான் முதலிடம்
அங்கேதனது உரிமைகளில் அதிகம் முடிவெடுக்ககூடியவளாக இருக்கிறாள்
வரதட்சனை கிடையாது
அங்கே அவளுக்கு பாதுகாப்பும் அதிகம்
ஆண் என்றால் வீரம் பெண் என்றால் போதை என்ற எண்ணம்
கற்பு நெறிகளில் ஆண்செய்த தவறுகள் வெளித்தெரியாமல் இருக்கும் தோற்றம்
குலப்பெருமை நிலைனாட்டபோன்ற காரணம்
மறுதார மணம் என்றால் மட்டம், என்ற நிலைகளால்
முதலில் பெண்களே பெண்களை மதித்தல் கிடயாது
எங்கே பெண்கள்மதிக்கப்படுகிறார்களோ அங்கே இந்தப்பிரய்ச்சனை இல்லை
நம் ஊர்களில் அதிராம் பட்டனம் காயல் பட்டிணம் போன்ற ஊர்களில் பெண்களுக்குத்தான் வீடு
எத்தனை பெண்கள் இருந்தாளும் அத்துனை பேருக்கும்வீடு

எத்தனை பென்கல் இருந்தாளும் அத்துனை பேருக்கும் தகப்பனது வீடில் தான்பெண் இருப்பாள்
சகோதரன் வந்து போவார் ஆண்கள் மாமியார் வீடில் வசிப்பார்
அங்கெல்லாம் பெண்பிள்ளைகளுக்கு மவுசு
அங்கு பெண்பிள்ளை வேண்டாம் என நினைப்பதில்லை
சமூகம் தான் குடும்பம் குடும்பம்தான் சமூகம் என்றால் குடும்பமென்ற சிறிய சமூகமே பென்களுக்கு எதிராக செயல்படுகிறது
இதுவேபெணடிமைத்தனம் இருக்கும் இடத்தில் தான் இப்படி
இதுவே வெளினாடுகளில் முன்னேரிய நாடுகளில் இந்தப்பிரச்சனை இல்லை
இது ஒரு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு
எங்கே பெண்கல்வி மறுதார மணம் பெண் உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தகொலைகளும் நடக்கிறது
, .அது நாலுபேர் கொண்ட குடும்ப உறுப்பினர் சமூகமாகட்டும் அல்லது நாலுபேர்கொண்ட குடும்ப உறுப்பினரல்லாத சமூகமாகட்டும் மதம் என்கிற பெயரால் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றனர் இதற்கு பெண்களே ஓத்துப்போகின்றனர்

ஒரு சமூகமானது பெண்ணை இழிவுபடுத்த முயலும் போது அதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் நினைத்தால் அவளை எதிர்த்து போராட வைக்கலாம்.. தாய் தந்தை தரும் ஊக்கத்திற்கும் தைரியத்திற்கும் அளவு கோல் கிடையாது.. அது எப்போது கிடைக்கப்படாமல் போகிறதோ அன்றே சமூகம் அவளை மிதிக்க ஆரமிப்பிக்கிறது..

ஒரு பெண் பிள்ளையை படிக்க வைத்தால் ஒரு குடும்பத்தை பயிழ்விப்பதற்கு சமம்.. ஒரு குடும்பத்தில் பெண் படித்தால் அவள் தங்கள் சந்தியினரை படிக்க வைப்பாள்.. ஒவ்வொரு குடும்பமும் இதை நினைத்தாலே வருங்கால சந்ததியினர் திருந்தும் வாய்ப்பு ஏற்படும்..

அப்படித் தான் சமூகத்தை திருத்த முடியும்.. உடனே சமூகமே திருந்து என்றால் திருந்தாது.. குடும்பத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் மட்டுமே நல்ல ஒரு சந்தியினரையும்,சமூகத்தையும் உருவாக்க முடியும்.

அதனால் முழு பொறுப்பு இருப்பது குடும்பத்தினருக்கே.. அவள் விரும்பப்படாமல் போக காரணமும் அந்த குடும்பத்தினாலேயே..

பல வெளிநாட்டு வரலாற்றை நாம் பார்க்கிறோம். பெண்கள் ஓங்கியே இருக்கலாம்.. ஆனால் அந்த நிலைக்கு அந்த நாடு கொண்டு வந்த கதை நமக்கு தெரியுமா? ஒவ்வொரு குடும்பமும் அதற்கு உழைத்திருக்க வேண்டும் ஒரு புரட்சியை உருவாக்க... அப்படி இல்லாத குடும்பமே பெண் வெறுக்கப்பட காரணம்.

மீண்டும் வருவேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவரே பட்டியை தொடருவீர்கள் எனும் நம்பிக்கையில் எனது பதிவுகளை இங்கே தருகிறேன். (கையில் ஒரு சிறிய எலும்பு முறிவு காரணமாக சில பட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இம்முறையும் முடிந்தவரை மட்டுமே பதிவிட முடியும்).

பெண் வேண்டாம் என நினைப்பதற்கு காரணம் சமூகமே. பல தாய்மார்கள் "பெண்ணாய் பிறந்து இந்த சமூகத்தில் நான் படுற கஷ்டம் போதும் என் பிள்ளைக்கும் இந்த நிலை வேண்டாம். அதனால் ஆண் பிள்ளை பிறந்தாதான் நல்லது" என சொல்லி நான் கேட்டிருக்கிறேன். இப்படி அவர்களை சொல்ல வைத்தது சமூகமே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பெண்ணிற்கு பாதுகாப்பான சூழ்நிலையை தர மறுப்பது சமூகமே, அவளை அந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பது அவள் குடும்பமே என்பதை எதிரணியினர் மறுக்க முடியாது. அப்படியிருக்க பெண் குழந்தையை குடும்பத்தார் மறுப்பதாக கூறுவது சரியா நடுவரே.

\\ஒரு சமூகமானது பெண்ணை இழிவுபடுத்த முயலும் போது அதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் நினைத்தால் அவளை எதிர்த்து போராட வைக்கலாம்..\\

குடும்பம் பக்கபலமாய் இருந்தால் சமூகத்திடம் போராடலாம் என்னும் வரிகள் படிக்க நன்றாக இருந்தாலும் அது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டும். இதற்கு எவ்வளவு வைராக்கியம் ஒரு பெண்ணிற்கு வேண்டும் என்பது நாமறிந்ததே. இதே வரிகளை இன்னொரு கோணத்தில் யோசித்தால், குடும்பத்தார் நினைத்தால் தான் அவளால் போராட முடியும். தனியொரு பெண்ணாக முடியாது என்று பொருள், இந்த நிலை வந்ததற்கு காரணமே சமூகம் தானே. ஒரு பெண் தனது வாழ்வில் எந்த பருவத்திலும் தனியே ஊன்றி செயல்பட முடியாதவாறு இந்த சமூகம் உள்ளது, யாரையாவது அண்டியே வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியது சமூகமே என்பது என் வாதம்.

இதுவும் கடந்து போகும்.

குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும் என்ற பழமொழி உண்டு, அது போல குழம்பி தெளிவதுதான் நல்லது.
பள்ளியில் ஆசிரியர் பாடத்தை நடத்தி முடித்து விட்டு பாடம் புரியுதான்னு ஒரு கேள்வி கேட்பார்... புரிந்ததுன்னு மண்டையை ஆட்டற பசங்களை கண்டுக்க மாட்டார், அமைதியா உட்கார்ந்திருக்கற மாணவனை பார்த்து என்னடா உனக்கு புரியலியா என்று கேட்பார். புரியவில்லை என்று சொன்னால் மீண்டும் விளக்குவார்.
நீங்கள் எடுத்துள்ள தலைப்பு அருமையானது மட்டுமல்ல தற்போது மிகவும் அவசியமாய் தேவைப்படுகிற தலைப்பு... மீண்டும் தொடர வாருங்கள். காத்திருக்கிறோம்.
ஓட்டுனர் இல்லாமல் பேருந்து எப்படிங்க ஓடும்?... வாங்க.

அன்புடன்
THAVAM

அன்பு தோழிகளே... பட்டியில் உள்ள எந்த பதிவுக்காகவும் பட்டியை நான் நிறுத்த நினைக்கல... அது உங்களுக்கும் தெரியும். குழப்பமான தலைப்பை எடுத்துட்டேன்னு நினைக்கிறேன். அதனால் தானோ என்னவோ இம்முறை பட்டியில் அதிகம் யாரும் இல்லை... ஆரம்பத்தில் இருந்து இருந்த குழப்பத்தை கவனித்தேன், கூடவே தேவையில்லாத கேலி பேச்சுக்கு இடம் கொடுக்க விரும்பாததும் ஒரு முக்கிய காரணம். இதை நேரடியாக சொல்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை.

பட்டியை மதித்து இங்கு வந்து பதிவிட்டு வாதத்தை வைத்த ஒவ்வொரு தோழிக்கும் என் மனதார நன்றி சொல்லிக்கறேன்... நிச்சயம் நீங்க குழம்பியதால் மட்டும் பட்டியை நிறுத்த நினைக்கல. காரணத்தை விளக்கமா சொல்லவும் இது இழை அல்ல. அதனால் நீங்க எல்லாரும் புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். நீங்க யாரும் வந்து பட்டியில் பதிவிட்டு பாதியில் முடிந்ததென நினைக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக உங்களுக்காக நான் தொடர்கிறேன். உங்களுக்காக பட்டியை நடத்தி முடிக்க நான் முன்பே நினைத்து தான் 2 நாட்களாக தொடர்ந்தேன்... ஆகவே நிறுத்த காரணம் நீங்கள் யாரும் அல்ல, உங்கள் பதிவுகளும் அல்ல. தொடருங்கள் வாதத்தை... நான் காத்திருக்கேன். இடையில் ஏற்பட்ட குழப்பத்தை மறந்துடுங்கன்னு கேட்டுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமூகம் தான்
ஒரு மனிதனின் ஒவ்வொரு செயலிலும் தாக்கத்தை எற்ப்படுத்துகிறது
குழந்தையைவளர்ப்பதிலும் படிக்க வைப்பதிலும் திருமணதிலும் மற்றும் அவனது சொந்த செயல்கலிலுமே கூட சமூகம் தான் அவனை செயல்பட வைக்கிறது
தனி மனிதனாக எவனும் இருப்பதில்லை
சமூகம் சார்ந்தே வாழ்கிறன்
சமுதாயதைஒட்டி வாழும் போது அவனின் தனி எண்ணங்கள் செயல்படுத்த முடிவதில்லை
அவனின் வாழ்கை அவன் கையில் இருந்தாலும், அவன் கையில் இல்லை சமுதாயத்திற்கே பயப்படுகிறான்

பட்டி பக்கம் யாரும் வரலயா?? இருங்க வந்து எல்லாருக்கும் பதிவு போடுறேன். கோச்சுக்காதீங்க நடுவர் காணோம்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! (கும்மி)

பாரதியார் கவிதையை முன் வைக்கிறேன்...

நடுவருக்கு வணக்கம்.

பட்டியைத் தொடர்வதற்கு நன்றி. காரணம் சொல்லத் தேவையில்லை. தொடர்வதே மகிழ்ச்சி.

அத்தனை வருடங்களுக்கு முன் பாரதியாருக்கிருந்த அந்த தெளிவு நம்மில் எவ்வளவு அறிவியல் வளர்ச்சிகளை கண்டும் நமக்கு இன்னும் இல்லை.

நாம் குடும்பத்தில் விழிப்புணர்வுடன் பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்தோமானால் பெண்கள், நாளை உலகில் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் நிச்ச்யம்.

முடிந்தால் இந்த பாடலை முழுவதும் படியுங்கள்... குடும்பம் நினைத்தால் பெண்ணை சமூகம் என்ற மாய கண்ணாடியைத் தகர்த்தெறிந்து ஆணுக்கு சமமாக நிற்க வைக்க முடியும் என்பதை நிச்சயம் உணர முடியும்.

ஆண்களுக்கு பெண் எங்கே தன்னை முந்திவிடுவாளோ என்ற பயம் அதன் காரணமாக உருவாக்கியதே - இந்த சமுதாயக் கட்டுப்பாடுகள். வீணாக அவற்றைச் சாடிக் கொண்டு அவற்றையே சார்ந்திருக்காமல், குழந்தை பெண்ணாகப் பிறந்தால் போற்றி வளர்ப்போம். இந்த கருத்தை ஒவ்வொரு குடும்பமும் செய்தால் நல்லதொரு சமுதாயம் உருவாகும்.

புத்தம் புது பூமி படைப்போம். இது தமிழில் குயில் பாடும் ஆசையில்லை, தங்க மழை பெய்யும் ஆசையும் இல்லை ஆனால் சர்வ நிச்சயமான, நியாயமான ஆசை... சேர்ந்து செயல்படுவோம்.

நடுவருக்கு மீண்டும் வணக்கம்
//அவனின் வாழ்கை அவன் கையில் இருந்தாலும், அவன் கையில் இல்லை சமுதாயத்திற்கே பயப்படுகிறான்//

குழப்புறீங்களே. அவன் வாழ்க்கை அவன் கையில் இருக்கா? இல்லையா?

சமுதாயம் என்ன பேயா? பூதமா? பயப்பட... நம்மைப் போல் நாலு குடுமபம் சேர்ந்ததுதானே....

நடுவரே எதிரணி எங்கே போனாங்க?

மேலும் சில பதிவுகள்