பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

சமுதாயமே....சமுதாயமே... சமுதாயமே.....

நடுவ்ர் அவர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்....

நடுவரே...என்ன தான் சமுதாயம் என்பது பல குடும்பங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு குடும்பம் ஒரு சமுதாயமாகிவிடாது என்பதைப் புரிஞ்சுக்கனும்...
இதைத்தான் பெரியவர்கள் 'தனி மரம் தோப்பாகாது', 'ஒரு ஓசை எழுப்பாது', 'ஒருதலை ராகம்'(...????) அப்படீனு பலவாறு சொல்லொயுள்ளனர்.

எதற்க்கு சொல்லி இருக்காங்க........ எதற்கென்றால் முழுக்க முழுக்க அந்த ஒரு குடும்பத்தின் சூழல் தான் காரணம் அப்படீனு சொல்லிவிட முடியாது.

சமூகம்தான் பெண்ணின் மீது ஒரு கடினமான திரையைப் போட்டுவைத்துள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் பெண்குழந்தைகளின் பிறப்பைப் பற்றி சிந்திக்கவே பயப்படக் காரணம் சமூகத்திலிருக்கும் பெண்களுக்கெதிரான விஷயங்களே...

என் நெருங்கிய உறவினருக்கு மூன்று பெண்கள். தந்தை அரசுக்க்கல்லூரியில் பேராசிரியர். மூத்தவர் 5க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் வாங்கியவர்.சுயமாக கால் சென்ட்டர் தொழில் செஇபவர். மற்ற இருவரும் மென்பொருள் வல்லுனர்கள். பரம்பரை சொத்துக்கள், வருமானம் போன்றவற்றிற்கு பஞ்சமில்லை. சில வருடங்களுக்கு முன் அந்தக் குடும்பத்தலைவர் இறந்துவிட்டார். பல வருடங்களாக மூத்தவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். பொருந்திவந்த வரன்களுக்குப் பள்ளிப் படிப்பு தான் இருக்கு. படித்த வரன்கள் என்றால் அப்பா இல்லாத குடும்பம். மூத்த மருமகனா போனால் மற்ற இரு பெண்களின் திருமணப்பொறுப்பை நம் தலையில் தான் கட்டுவர் என்று தட்டிக் கழிக்கின்றனர். இதில் என்ன கொடுமையென்றால் அவர்களின் நெருங்கிய உறவுகளே பொறுப்பை எடுத்து செய்ய முன்வருவதில்லை.
அந்த பெண்களின் தாய் கவலையில் நோய்வாய் பட்டுவிட்டார்.

இப்ப சொல்லுங்கள் நடுவரே...... மேற் சொன்ன நிகழ்வு ஒரு தூசு தான். இதுபோல பல ஆயிரமாயிரம் குடும்பப் பெண்களின் துயரங்களுக்கு இந்த சமுதாயம் தானே நேரடிக்காரணமாய் இருக்கிறது...

அதைப்போன்ற நிகழ்வுகளை நம் நமக்கோ,உறவினருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ நிகழ்ந்ததை நாம் கண்கூடாக பார்க்கும் போதும் காதால் கேட்கும் போதும் பயந்த சுபாவமுள்ள எவரையும் பாதிக்கத்தான் செய்யும். அந்த பயத்தின் விளைவுகள் தான் இதுபோன்ற முடிவுகள்.

எனவே ஒருகுடும்பத்தை, ஒரு தாயை ஒரு தந்தையை பெண்சிசுக்கொலை "செய்யத்தூண்டுவது" சமுதாயமே.......

நடுவரே..... நான் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கும் - செய்யத்தூண்டுவது- என்பதற்குக் காரணம் :
நாம் எத்தனை சினிமாவில், நடப்பு வழக்கு விவகார தீர்ப்புகளில் பார்த்தும் கேள்விப்பட்டு இருப்போம் "குற்றம் செய்தவரைவிட அந்தக் குற்றத்தை செய்யத்தூண்டுகோலாய் இருப்பவர் தான் முதன்மைக் குற்றவாளி" என்ற வாசகத்தை. சட்டமும் அதைத்தான் தெள்ளத்தெளிவாக கூறுகிறது.

அதன் படி குடும்பம் என்பவர் குற்றம் செய்தவர்...

சமுதாயமே அந்தக் குற்றத்தை செய்ய மறைமுகமாகவும், நேரடியாகவும் தூண்டுகோலாய் இருக்கிறது...

எதிரணியினர் கூறியுளனர் 'சமுதாயம் சட்டம் போட்டு தடுக்கிறது' என்று. நான் சொல்கிறேன் இந்த சமுதாயம் அழுகிற பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிற வேலையை செய்கின்றது நடுவரே...... நன்றி...(அருமையான தலைப்பு நடுவரே...... குழம்ப ஒன்னுமே இல்லை...சீக்கிரம் வாங்க....)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பட்டி எனும் கப்பல் நடுக்கடலில் நிற்காமல் கரை சேர்க்க வந்ததற்கு நன்றி நடுவரே! ;-)))

// அவனின் வாழ்கை அவன் கையில் இருந்தாலும், அவன் கையில் இல்லை சமுதாயத்திற்கே பயப்படுகிறான்//

வரும்...ஆனா வராது... என்பது போல் உள்ளது,எதிரணியின் வாதம். ;-)))

பெண் சிசுவை அழிக்க சொல்லி சமுதாயம் சொல்கிறதா?இல்லவே இல்லை, நடுவரே!
பெண்ணுக்கு சமுதாயத்தில்/சமுதாயத்தால் பிரச்சனை உள்ளது.அதை நாங்கள் மறுக்கவில்லை.அதுபோல் ஆணுக்கும் சமூகத்தில் வேறு விதமான பிரச்சனைகள் இருக்கு.அப்படியிருக்க,பெண்சிசுவை மட்டும் பிறக்க விடாமல் கருவிலேயே அழித்தும்,அப்படியே பிறந்தாலும் வாழ விடாமல் அழிப்பதும்/மறுப்பதும் குடும்பமே!இதற்கு சமூகம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

\\***ஒரு சமூகமானது பெண்ணை இழிவுபடுத்த முயலும் போது அதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் நினைத்தால் அவளை எதிர்த்து போராட வைக்கலாம்***..\\
(இது எங்க அணித்தோழியின் வாதம்.)

// இதே வரிகளை இன்னொரு கோணத்தில் யோசித்தால், குடும்பத்தார் நினைத்தால் தான் அவளால் போராட முடியும். தனியொரு பெண்ணாக முடியாது என்று பொருள்,//

நடுவரே!

எதிரணியினர்,எங்கள் அணியின் வாதத்தை தவறான கோணத்திலேயே பார்க்கின்றனர்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவனுக்கு சுற்றி உள்ள பார்வையாளர்கள் உற்சாகம் தந்து,கைத்தட்டி ஓடு,ஓடு என்று ஊக்கம் தந்தால்தான் அவன் இன்னும் வேகமாக ஓடி முதலிடம் பிடிப்பான்.

அதுபோல் பெண் சமுதாயத்தில் போராடும் போது,குடும்பம் கண்டிப்பா அவளை சப்போர்ட் பண்ணனும்.குடும்பத்தின் ஆதரவு இருந்தால் அவள் இன்னும் தைரியமாக போராடி,நினைத்ததை சாதிக்க முடியும்.அதற்காக குடும்பத்தார் நினைத்தால்தான்,ஒரு பெண்ணால் போராட முடியும் என்று அர்த்தம் அல்ல, நடுவரே!

தனியாளாக நின்று போராடி,வாழ்க்கையில் ஜெயித்த எத்தனையோ பெண்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சமீபத்தில் பார்த்த “நீயா,நானா” நிகழ்ச்சியில் சிங்கிள் பேரண்ட்டாக இருந்து,பிள்ளைகளை வளர்த்த பெண்கள் கலந்து கொண்டனர்.அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தின் உதவியோ,ஆதரவோ இன்றி தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்கள்.வாழ்க்கையில் இந்த அளவு போராடி,ஜெயித்தும் அவர்கள் இன்றும் கலங்குவது”தன்னை தன் குடும்பம் நிராதரவாக விட்டதை எண்ணி தான்.”

அன்று மட்டும் அந்த பெண்களின் குடும்பங்கள் சப்போர்ட் பண்ணியிருந்தால் இன்றும் அவர்கள் தாங்கள் பட்ட துன்பங்களை எண்ணி,வருந்த வேண்டிய நிலை வந்து இருக்காது.

மனித மனம் ஒரு கொடி போன்றது.பற்றி வளரவே விரும்பும்.அது போல் பெண்ணுக்கும் குடும்பத்தின் ஆதரவு வேண்டும்.

//பல தாய்மார்கள் "பெண்ணாய் பிறந்து இந்த சமூகத்தில் நான் படுற கஷ்டம் போதும் என் பிள்ளைக்கும் இந்த நிலை வேண்டாம்.அதனால் ஆண் பிள்ளை பிறந்தாதான் நல்லது"
என சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.//

எதிரணியினர் எங்களணியின் சார்பாக கருத்து சொல்லியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,நடுவரே!

காலம் மாறிக்கொண்டுவருகிறது,நடுவர் அவர்களே!நம் பாட்டி,தாத்தா காலம் மாதிரி நம் அம்மா,அப்பா காலம் இல்லை.அவர்களின் காலம் போல் நம் காலம் இல்லை.

அறிவியல்,பொருளாதாரம்,கல்வி,சமூகம் என்று அனைத்திலும் முன்னேற்றம் இருக்கு.இதை யாராலும் மறுக்க முடியாது.இப்படி இருக்க,நம் பிள்ளைகளின் காலம் இன்னும் சிறப்பானதாகவே இருக்கும்,இல்லையா?இதை கூட யோசிக்காமல், நான் பட்ட கஷ்டம் போதும் என்று பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பது கண்டிப்பாக பெற்றவர்களின்,குடும்பங்களின் அறியாமையே.

நடுவர் அவர்களே!

//என்ன தான் சமுதாயம் என்பது பல குடும்பங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு குடும்பம் ஒரு சமுதாயமாகிவிடாது என்பதைப் புரிஞ்சுக்கனும்...//

குடும்பம் என்ற ஒன்று இல்லாமல்,சமுதாயம் எங்கிருந்து வந்தது?

பெண்சிசு அழிவை தடுக்க சமுதாயம் மாற வேண்டும்.சரி,அதை நாங்களும் ஏற்கிறோம்.

பூனையின் கழுத்தில் யார் மணி கட்டுவது? ஒவ்வொரு குடும்பமும் பெண் சிசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அங்ககீகரிக்க வேண்டும்.அப்போது தான் சமுதாயம் மாறும்.

// அதன் படி குடும்பம் என்பவர் குற்றம் செய்தவர்...
சமுதாயமே அந்தக் குற்றத்தை செய்ய மறைமுகமாகவும், நேரடியாகவும் தூண்டுகோலாய் இருக்கிறது...//

பெண்சிசுகொலை நிரூபிக்கப்பட்டால்,அதை செய்த பெற்றவர்களுக்கும்/குடும்பத்தாருக்கும்,மருத்துவருக்கும் தான் சிறைவாசமே தவிர,அதை செய்யத் தூண்டிய சமுதாயத்துக்கு அல்ல.

சமுதாயம் என்ன வேணும்னாலும் சொல்லும்.நல்லதை மட்டும் எடுத்து கொள்ள தான் பகுத்தறிவு உள்ளது.ஒரு குடும்பத்தின் சம்மதம் இல்லாமல்,பெண் சிசு கொலை என்பது நடக்காது.அப்படியிருக்க,சமுதாயத்தை குறை சொல்வது நியாமல்ல.

//எதிரணியினர் கூறியுளனர் 'சமுதாயம் சட்டம் போட்டு தடுக்கிறது' என்று. நான் சொல்கிறேன் இந்த சமுதாயம் அழுகிற பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிற வேலையை செய்கின்றது //

சமுதாயத்தில் உள்ள அரசாங்கம் தான் சட்டம் போட்டு பெண் சிசு அழிவை தடுக்கிறது என்று கூறினேன் நடுவரே.ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறிப்பிடவில்லை.

நடுவரே!

// பெரும்பாலான குடும்பங்கள் பெண்குழந்தைகளின் பிறப்பைப் பற்றி சிந்திக்கவே பயப்படக் காரணம் சமூகத்திலிருக்கும் பெண்களுக்கெதிரான விஷயங்களே... //

பெண் குழந்தை வேண்டாம் என்று சிந்திப்பதே பெண்களுக்கெதிரான பெரும் குற்றமல்லவா?இப்படி பெண் குழந்தை வேண்டாம் என்ற சிந்தனை குடும்பத்தில் இருந்துதான் வருகிறது.

எதிரணியினர் சொல்வது போல் சமுதாயத்தால் பெண்களுக்கு பிரச்சனைகள் வருகிறது.ஆனால் பெண் சிசுக்களை விரும்பாத குடும்பங்களால் பெண்ணினமே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம்தான் வருகிறது.

"வீட்டில் பெரியவர்கள் ஆண்குழந்தைகளை விரும்புகின்றனர்.ஆண் வாரிசு சொத்துக்களை காப்பாற்றுவான்.பெண் வேறு வீட்டுக்கு செல்வாள்,பெண் பிறந்தால் செலவு,...."
இத்தகைய காரணங்களால் பெண் சிசுவை அழிக்க/மறுக்க நினைப்பவர்கள் ஒரு நிமிடம் குழந்தைகளுக்காக,குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக ஏங்கி,தவம் கிடப்பவர்களை நினைத்துப்பார்த்தால் பெண் சிசுவை போற்றி வளர்ப்பார்கள்.ஒவ்வொரு குடும்பமும் இப்படி மனம் தெளிந்தால் சமுதாயத்தில் பெண்சிசு அழிப்பு/மறுப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

அதனால் பெண் சிசுவை அழிக்க/மறுக்க கண்டிப்பாக குடும்பமே காரணம் என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன்.

ஆண்தான் கொள்ளி போட வேண்டும் என்பது சமுதாயத்தின் திணிப்பு..........
ஆண் வீட்டில் தான் பெண் இருக்க வேண்டும் என்பது சமுதாய ஏற்பாடு ..............
பெண்ணுக்கு வரதட்சனை சீர் கொடுக்கும் முறை சமுதாயத்தின் திணிப்பு.......... .
.மப்பள்ளை வீட்டாருக்கு பெண்வீட்டார் அடங்கி நடக்க வேண்டும் என்பது சமுதாய முறை.....
பெற்ற தாய் தந்தயரை பேணிக்காக்க வேண்டும் என்பது அவர்கள்பெற்ற மகனின் கடமை...
மாறாக வந்தமருமகள் கவ்னனிக்கவெண்டும் என்பது சமுதாய நிலை............
.ஆணுக்கு மறுமணம் 60 வயதிலும் நடக்கும் பெண்ணுக்கு ???35 வயதில் நடந்தால் கூட பெற்றோர் விரும்பினாலும் குடும்ப சமூகமே எதிர்ப்பை கிளப்பும்
ஆண் வரவு...... பெண் செலவு ....
இது இந்த நிலை சமுதாய அமைப்பு
கணவன் இறந்தால் அந்தக்கணவனால் பெறப்பட்ட குழந்தையைபொறுப்பேற்க்க வேண்டியது குழந்தையின் தகப்பன்குடும்பத்தார்
ஆனல் மாறாக தாயும் தாயின் குடும்பத்தார்களுமே அதிகம் பொறுப்பேர்க்கும் நிலை சமூகதவறு
இரண்டு பெண் ஒரு ஆண் என்பதை விட இரண்டு ஆண் ஒரு பெண் என்பது திருப்தியாக இருக்கிறது பெற்றோர்களுக்கு
காரணம் வரவும் செலவும்தான்
.............ஒரு ஆணை படிக்க மேற்கல்விகற்க வெளி நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க சம்பாதிக்க அனுப்ப இப்படி ஆணை அனுப்ப பெற்றவகளுக்கு சிரமமாகவோ பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவோ தோன்றாது
ஆனால் ஒரு பெண்ணை அனுப்ப யோசிக்க வேண்டும்
ஒருதவறு ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்யும்போது ஆணின் தவறுகள் பெறிது படுத்தப்டுவதில்லை ஆனால் பெண்ணின் நிலை?????
இந்த மாதிரி பெண்ணின் நிலை??????? ஆனின் நிலையைவிட ஒருபடி கீழ்தான் இப்படி சமூகமே ஒரு[படிகீழான நிலையிலேயே வைத்திருக்கிரது
பிறகு எப்படி பிறப்பு விஷயத்தில் ஆண்குழந்தையைவிட பெண்குழந்தைக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுப்பர் சமூகம் அவர்களின் கைய்யை கட்டிப்போட்டுள்ளது

உங்கள் அனைவர் பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து வருகிறேன்... ஆரம்பித்த நேரம் போலும், என்னால் பதிவிட முடியாத அளவு சொந்த விஷயங்கள் என்னை பிடித்து வைத்திருக்கின்றது. இரவு நேரங்களில் பவர் பிரெச்சனை... அதனால் யாரும் கோவிக்காதீங்க, முடியும்போது வந்து எல்லாருக்கும் பதில் போடுகிறேன். இப்போது கிடைக்கும் நேரத்தில் படிக்க மட்டுமே முடிகிறது. மன்னியுங்கள். நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க எல்லாருமே. தொடருங்க உங்க வாதத்தை. நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவருக்கு வணக்கம்.

//பிறகு எப்படி பிறப்பு விஷயத்தில் ஆண்குழந்தையைவிட பெண்குழந்தைக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுப்பர் சமூகம் அவர்களின் கைய்யை கட்டிப்போட்டுள்ளது//

சமூகம் என்ற பெயரில் உங்கள் கையை(குடும்பத்தை) நானும் என் கையை (குடும்பத்தை) இன்னொருவர் என சங்கிலியாக தொடராமல், அருகிலிருப்பவர் கட்டை நாம் அவிழ்க்க உதவினால் இந்த சங்கிலியை உடைக்கலாம்.

எனவே இந்த பிரச்னை தீர வழி சமூகத்திடம் இல்லை, குடும்பத்திடம்தான் உள்ளது.

எதிரணி சொன்ன உறவினர் நிலை சிந்திக்க வேண்டியது...

அக்குடும்பத்தில் மூத்த பெண் ஆணாகப் பிறந்திருந்தாலும், திருமணம் தடைப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. நம்ம பொண்ணு அங்க போய் நிம்மதியா வாழ முடியாது, மத்த இரண்டு பெண்களை கரை சேர்க்கிறப் பொறுப்பு விழும்னு சொல்லுவாங்க... இந்த மாதிரி சூழல்களில் ஆண் பெண் வேறுபாடில்லை.

குழந்தைப் பெண்ணாகப் பிறந்தால் பிறந்த நாள் முதல் அக்குழந்தைக்கு தடை போடுவதை விடுத்து என்ன பிரச்னைகள் வரும் எப்படி அவற்றை அணுக வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.

எந்த குழந்தையும் நல்ல குழந்ததான் மண்ணில் பிறக்கையிலே
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...

பெற்றோராகிய நாம், குழந்தை எந்த குழந்தாயாக இருப்பினும் வளர்க்கும் முறையில் வளர்த்தால் மேன்மை பெறுவர்.

குடும்பங்கள் இணைவோம் ... நல் பெண் போற்றும் சமுதாயம் உருவாக்குவோம்.

வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

//சரி நம் சமூகத்தின் யாரும் சரியா படிக்கலை.. ஆனா நான் என் பொட்டபுள்ளைய படிக்க வைக்கறேன்.அது நல்லா இருக்கட்டும்னு ஒரு பெத்தவன் நினைத்தால்.. எந்த சமூகமும் அந்த பிள்ளையின் எதிர்காலத்தை சீரழிக்க முடியாது,..// - உண்மை... இப்போ பல சமூகத்தில் இது நடக்குதும் கூட. பின்னாடி கல்யாணம் பண்ணும்போது படிச்ச பொண்ணு, எங்க ஆட்கள் அதிகம் படிச்சதில்லை, வரன் கிடைக்கலன்னு கூட கவலை படாம வேறு சமூகத்தில் மாப்பிள்ளை எடுக்கும் பெற்றோரை நானே பார்த்திருக்கேன்.

//கடைசி வரை கூட ஆண் தான் இருப்பான்// - இது 100% உண்மை. ;( நாமலான் கூட வெச்சு பார்த்துக்கறெனெனு சொன்னா கூட “சச... மாப்பிள்ளை வீட்டில் வந்து இருக்குறது அசிங்கம்”னு டயலாக் வரும்.

//ஆண் மகன் உழைப்பும், பணமும் தனக்கு கிடைக்கும் // - இப்படியும் சில பெற்றோர் நினைக்குறதை நாம பார்க்க தான் செய்யறோம்.

//ஊதாரியாக.. பொய்யான வாழ்க்கை வாழும் சில குடும்பத்தினாலேயே பெண் இனம் வெறுக்கப்படுகிறது..// - கடைசி பாயிண்ட் நச் பாயிண்ட். நெத்தி அடி ஆண் பிள்ளை கேட்பவர்களுக்கு.

கலக்குங்க ரம்யா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க தோழியின் அம்மா நல்ல ஒரு யோசனையை சரியான நேரத்தில் சரியான வயதில் அவர் பெண்ணுக்கு சொல்லி இருக்கார். பெருமையாகவே இருக்கு.

//பென்ஸ், பட்டு புடவை என்று உயிரற்ற பொருட்களோடு கம்பேர் பண்ணுவதை விடுத்து பெண்ணும் எலும்பும் சதையும் நிறைந்த மனித ரூபம்தான் என்பதை குடும்பம் உருவாக்கத் தவறுகின்றன.// - நச் பாயிண்ட்.

//அத்தனை வருடங்களுக்கு முன் பாரதியாருக்கிருந்த அந்த தெளிவு நம்மில் எவ்வளவு அறிவியல் வளர்ச்சிகளை கண்டும் நமக்கு இன்னும் இல்லை// - வராதுன்னு இல்லை... வரவிட மாட்டங்கறாங்க... பெண்ணுக்கு பெண்ணே எதிரி இந்த காலத்தில். என்ன செய்ய...

//ஆண்களுக்கு பெண் எங்கே தன்னை முந்திவிடுவாளோ என்ற பயம் அதன் காரணமாக உருவாக்கியதே - இந்த சமுதாயக் கட்டுப்பாடுகள்// - ஆண் ஆதிக்கமே காரணம்!!! சரி தான்.

//சமூகம் என்ற பெயரில் உங்கள் கையை(குடும்பத்தை) நானும் என் கையை (குடும்பத்தை) இன்னொருவர் என சங்கிலியாக தொடராமல், அருகிலிருப்பவர் கட்டை நாம் அவிழ்க்க உதவினால் இந்த சங்கிலியை உடைக்கலாம்// - தீர்ப்பை நீங்களே சொல்லிபோடுவீங்க போலிருக்கே!!!

//குடும்பங்கள் இணைவோம் ... நல் பெண் போற்றும் சமுதாயம் உருவாக்குவோம்// - தீர்ப்பை நான் தான் சொல்வேன் நான் தான் சொல்வேன்!!!

அருமை அருமை அருமை தேன்மொழி!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... எங்கே காணாம போனீங்க!!!

நீங்களும் குடும்பம் பக்கமே!!!

பாருங்க... சரியா சொல்லிட்டீங்க!!! பெண் சிசுவை கருவிலேயே அழிக்காமல் தடுக்க சமூகமே கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சொல்ல மறுக்கிறது, அப்படியே பிறந்தாலும் அழிக்காமல் காக்க தொட்டி குழந்தை திட்டம் தந்தது... ஆனா குடும்பம் தான் இதை எல்லாம் மீறி குழந்தையை மறுக்கிறது. சூப்பர்!!

//ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவனுக்கு சுற்றி உள்ள பார்வையாளர்கள் உற்சாகம் தந்து,கைத்தட்டி ஓடு,ஓடு என்று ஊக்கம் தந்தால்தான் அவன் இன்னும் வேகமாக ஓடி முதலிடம் பிடிப்பான்.

அதுபோல் பெண் சமுதாயத்தில் போராடும் போது,குடும்பம் கண்டிப்பா அவளை சப்போர்ட் பண்ணனும்
// - நல்ல உதாரனம் ஹர்ஷா!!

//நான் பட்ட கஷ்டம் போதும் என்று பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பது கண்டிப்பாக பெற்றவர்களின்,குடும்பங்களின் அறியாமையே.
// - கலக்குறீங்க எல்லாருமே!!! தொடருந்த பதில் கொடுக்கறீங்க எதிர் அணிக்கு!!! சூப்பர்!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அந்தகாலத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது. அப்போவும் சமூகம்தான் அப்புறம் போர்க்கால்ங்களில் பெண்கலந்துகொள்ள்வும் முடியாது
பற்றக்குறைக்கு பாதுகாக்கவேனும்வேற
அதுக்காகவே உயிருடன் பெண்பிள்ளையை புதைத்தார்கள்
பிறகு பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் உடன்கட்டை ஏற வச்சாங்க
அப்புறம் வரதட்சணை ஆணை உயர்த்தி பெண்ணை விலைபேசுனாங்க
அதுக்காகவும் பெண்குழந்தை வேண்டாம்னு நினைச்சாங்க// - ஒவ்வொரு காலகட்டதுலையும் பெண் எப்படி அடிமையாக இருந்தங்கன்னு புட்டு புட்டு வெச்சுட்டீங்க.

//சமூகம் தான் குடும்பம் குடும்பம்தான் சமூகம் என்றால் குடும்பமென்ற சிறிய சமூகமே பென்களுக்கு எதிராக செயல்படுகிறது
// - குழப்பிப்போட்டிங்களே என்னை!!!

//குழந்தையைவளர்ப்பதிலும் படிக்க வைப்பதிலும் திருமணதிலும் மற்றும் அவனது சொந்த செயல்கலிலுமே கூட சமூகம் தான் அவனை செயல்பட வைக்கிறது// - ஏன் ஏன்??? ஏன் சமூகத்துக்கு பயப்படனும் நாம் தப்பு பண்ணாத போது???

//ஆண்தான் கொள்ளி போட வேண்டும் என்பது சமுதாயத்தின் திணிப்பு..........
ஆண் வீட்டில் தான் பெண் இருக்க வேண்டும் என்பது சமுதாய ஏற்பாடு ..............
பெண்ணுக்கு வரதட்சனை சீர் கொடுக்கும் முறை சமுதாயத்தின் திணிப்பு.......... // - பாருங்க எதிர் அணி... நீங்க சொன்ன எல்லாமே குடும்பம் செய்வதில்லை, சமூகம் செய்ய வைக்கிறதுன்னு சொல்லிட்டாங்க. கலக்கல் பசரியா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்