பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

இப்போ கை எப்படி இருக்கு??? நலமா இருக்கீங்களா??/ முடியாமலும் வந்து பதிவிடும் உங்களை போன்ற அன்பு தோழிகளுக்காக நிச்சயம் பட்டி தொடரும்.

//பெண்ணாய் பிறந்து இந்த சமூகத்தில் நான் படுற கஷ்டம் போதும் என் பிள்ளைக்கும் இந்த நிலை வேண்டாம். அதனால் ஆண் பிள்ளை பிறந்தாதான் நல்லது// - சமூகம் பக்கம் போயிட்டீங்களா!!!

//குடும்பத்தார் நினைத்தால் தான் அவளால் போராட முடியும். தனியொரு பெண்ணாக முடியாது என்று பொருள், இந்த நிலை வந்ததற்கு காரணமே சமூகம் தானே.// - கரக்ட்டு... குடும்பம் ஒரு பெண்ணை பாதுக்கக்க வேண்டும், ஆனா ஆணை பாதுக்க தேவை இல்லை... ஏன்?? சமூகம் தானே காரணம்!!

நல்ல பாயிண்ட்... மேலும் வாதங்களோடு வாங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி... உங்க வாதத்தையும் வைங்க... நிச்சயம் பட்டி தொடரும். :-)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீர்ப்பா சொல்லிட்டிருக்கீங்க
கொள்ளி போட ஆண் வாரிசு இலாத குடும்பத்தில் பெண் கொள்ளீ போட அந்த தாயோ மற குடும்ப உறுப்பினரோ சம்மதியார்
சகோதரி மறுமணம் செய்ய உடன் பிறந்த சகோதரியோ, சகோதரனோ, மற்ற மருமகனோ, பெற்ற பிள்ளைகளோ, போன்ற குடும்ப உறுப்பினர் சமூகம் எதிர்க்கலாம்
இதைத்தான் குடும்ப சமூகம் என்றேன்
இதில் நாம் என்ன தவறு செய்தோம். செய்யவில்லை. ஆனாலும் மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயப்படத்தான் செய்கிறோம். உற்றார் உறவினர் வாயை மூட .

தோழிகளுக்கும் நடுவருக்கும் அன்பான வணக்கங்கள். பட்டிமன்ற ரயில் தீர்ப்பு ஸ்டேஷனை எட்டறதுக்குள்ள ஏதாச்சும் ஒரு பெட்டியில் நானும் ஓடி வந்து ஏறிக்கறேன் :)

பெண் சிசு மறுப்புக்கு சமூகம்னு சொல்றவங்க யாரெல்லாம் கை தூக்குங்க! அடடே எல்லாரும் நம்ப தோழிகளும் நம்ப அக்கா தங்கைகளும் நம்ப அண்ணன் தம்பிகளும்தான். அதேதான் பெண் சிசு மறுப்புக்கு மிக முக்கிய காரணம் நமது குடும்பங்களே! நம்பளை நாமே எப்படி குறை பட்டுக்கறதுன்னு பொத்தாம் பொதுவா சமூகம்னு சொல்லிப்போடறோம்.

பெண் சிசுக்கள் கருவில் இருக்கும் போதே அது பெண் என தெரிந்து விட்டால் அதை அழிக்க முனைவது சமூகம் அல்ல. சமூகம் குழந்தையின் பாலினத்தை கருவிலிருக்கும் போதே தெரிவிக்கக் கூடாது என்று சட்டம் போட்டு பெண் சிசுவை பாதுகாக்கிறது. பெண் குழந்தை உனக்கு வேண்டாம் என்று கள்ளிப் பாலையும் நெல்மணியையும் தேடாதே அதை அரசு தொட்டிலில் போடு என்று சமூகம் அக்குழந்தையை தத்தெடுக்கிறது. அப்படி அரசுத் தொட்டிலில் போடப்பட்ட முதல் பெண் குழந்தை இன்று தன் வளர்ப்பு பெற்றோரோடு மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

பெண்குழந்தை பெற்றால் வரதட்சிணை கொடுக்க முடியாது அதனால் பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்னால் முடிந்து விட்டதா? நீங்களும் நானும் பிறரும் இணைந்ததுதான் சமூகம். இப்படி பெண்குழந்தை வேண்டாம் என்று பெண்சிசுக் கொலை அதிகம் நடந்த இடங்களில் திருமண வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்க பெண்கள் இல்லை. இதற்கும் காரணம் சமூகம்தான் என்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிட முடியுமா? தனிமனித சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இப்பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும். அப்படி தனி மனித சிந்தனைகளில், குடும்ப உறுப்பினர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இன்று பெண்சிசுக் கொலைகள் குறைந்ததற்கு காரணம். அதன் பின்னே அரசு மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் முயற்சி இருந்தது.

எனக்குப் பிறக்கும் குழந்தைகளை அது ஆணோ பெண்ணோ என்னால் சிறப்பாக வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் சமூகத்துக்கு பயந்துதான் பெண் குழந்தைகளை மறுக்கிறோம் என்று சாக்கு சொல்வார்கள். தன் மீது நம்பிக்கையுள்ள முதுகெலும்புள்ள எந்த ஒரு தாயும் தந்தையும் தனக்குப் பிறந்த குழந்தையை வேண்டாம் என ஒதுக்க மாட்டார்கள்.

பெற்றவர்களுக்கு கொள்ளி போடும் உரிமை பெண்குழந்தைகளுக்கு இல்லையாம். அட போங்கங்க இன்னிக்கு கொள்ளி போட ஆணும் வேணாம் பெண்ணும் வேணாம். ஒரு ஸ்விட்சை யாராச்சும் அழுத்தினா போதும். கொஞ்ச நேரத்தில் சாம்பலை பார்சலில் கொடுத்துடுவாங்க. ஏனுங்க நாம செத்த பிறகு எலெக்ட்ரிக் மயானத்தில் நம்மை எரிச்சா சாம்பலாக மாட்டேன்னு எழுந்து ஓடவா முடியும். இல்லை ஆண்குழந்தை இல்லாதவர்களை அப்படியே அழுக விட்டுட முடியுமா?

இன்னிக்கு ஒரு பெண் தன்னைப் பெத்தவங்களுக்கு மட்டும் இல்லை அனாதையாக இறக்கும் பலருக்கும் செய்ய வேண்டிய காரியங்களை செய்துக்கிட்டு இருக்காங்க. அதனால் கொள்ளி போட ஆண் வாரிசுதான் வேணுங்கறது இல்லை. அந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு.

இன்றைய சூழலில் பெண் குழந்தை மறுப்புக்கு மிக முக்கிய காரணம் குடும்பங்களில் உள்ளவர்களின் பழமையில் ஊறிய எண்ணங்களே! அதனால் குடும்பமே பெண் சிசு மறுப்புக்கு மிக முக்கிய காரணம் எனக் கூறி என்னுடைய வாதங்களை(?!) முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே!

“பெண் குழந்தை வேண்டாம்,பிறக்க போவது ஆண் குழந்தையா இருக்கணும்,ஆண் வாரிசுதான் வேணும்”என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள அம்மாக்களும்,மாமியார்களுமே!இப்படி பெண் குழந்தை வேண்டாம்னு அவங்க அம்மாக்களும்,பாட்டிக்களும் நினைத்திருந்தால் இவர்களின் கதி என்னவாகியிருந்திருக்கும்?

பெண் குழந்தை பிறந்தால்"அய்யோ பொண்ணா?அடுத்ததும் பொண்ணா?" என்ற பேச்சுக்கள் வருவது கண்டிப்பா குடும்பத்தில் இருந்துதான்.என்னதான் படித்து இருந்தாலும்,எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மன நிலை கண்டிப்பா குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் இன்னும் வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை நடுவரே.

பெண் குழந்தை பிறந்தால்,பெற்றவர்களே அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாலும்,குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு மனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.இந்த மன நிலை ஏன்?அந்த பெண்குழந்தையை பெற்றவர்களால் அதை நல்லபடியாக, வளர்க்க கூடிய திறன்,வருமானம்,வயது,பக்குவம் எல்லாம் இருந்தும்”பெண் குழந்தை பிறந்துடுச்சா”எனும் தேவையற்ற பயம்,இன்றைய காலக்கட்டத்திலும் குடும்பத்தின் பெரியவர்களுக்கு தேவையில்லாத ஒன்று.

இத்தகைய காரணங்களால்,குடும்பம்தான் பெண்சிசுவை மறுக்க காரணம் என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்,நடுவரே!

நடுவரே!
// ஆண் வீட்டில் தான் பெண் இருக்க வேண்டும் என்பது சமுதாய ஏற்பாடு ..............
பெண்ணுக்கு வரதட்சனை சீர் கொடுக்கும் முறை சமுதாயத்தின் திணிப்பு.......... .
.மப்பள்ளை வீட்டாருக்கு பெண்வீட்டார் அடங்கி நடக்க வேண்டும் என்பது சமுதாய முறை.....//

இந்த சமுதாயமுறைகள் பற்றி எதிரணி தோழி குறிப்பிட்டுள்ளார்.
இன்று சமுதாயத்தில் காதல் திருமணங்கள் பெருகிவிட்டது.இதனால் நிறைய சமூக மாற்றங்கள் வந்துள்ளன.வரதட்சனை எனும் பேரில் பேரம் பேசுவது என்பது இல்லை.ஆண்,பெண் இருவரும் சம்பாதிப்பதால் இருவரும் சமம் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது.”இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு,பெண் வீட்டார் அடங்கி போவது,ஆண் வீட்டில்தான் பெண் இருக்க வேண்டும்”என்பவையும் மாறிக்கொண்டுவருகிறது.

//பெற்ற தாய் தந்தயரை பேணிக்காக்க வேண்டும் என்பது அவர்கள்பெற்ற மகனின் கடமை...
மாறாக வந்தமருமகள் கவ்னனிக்கவெண்டும் என்பது சமுதாய நிலை............//
இன்று பல குடும்பங்களில் மகனும்,மருமகளும் வெளிநாடு,வெளியூர்களில் வசிக்கும் நிலை.அருகில் வசிக்கும் மகள் தான் பெற்றோரை கவனிக்கிறாள்.இது பல இடங்களில் நாமும் பார்க்கும் நிகழ்வுதான்,நடுவரே!

//.............ஒரு ஆணை படிக்க மேற்கல்விகற்க வெளி நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க சம்பாதிக்க அனுப்ப இப்படி ஆணை அனுப்ப பெற்றவகளுக்கு சிரமமாகவோ பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவோ தோன்றாது ஆனால் ஒரு பெண்ணை அனுப்ப யோசிக்க வேண்டும்.//

வெளி நாடுகளில்,ஆண்பிள்ளைகளைப் போலவே,பெண் பிள்ளைகளும் வந்து,தங்கிபடிக்கின்றனர்,வேலைக்கும் செல்கின்றனர்.

//ஆணுக்கு மறுமணம் 60 வயதிலும் நடக்கும் பெண்ணுக்கு ???35 வயதில் நடந்தால் கூட பெற்றோர் விரும்பினாலும் குடும்ப சமூகமே எதிர்ப்பை கிளப்பும்//

பல விதவை மறுமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.விதவை மறுமணத்தை சமுதாயம் ஆதரித்தாலும்,எதிர்ப்பு சொல்வது குடும்பமே!

எதிரணிதோழி சொல்வதுபோல் மாற்றங்கள் இருந்தால் இந்த தலைப்பு ஏன் வருகிறது?
காலத்திற்கேற்றார்போல் மாற்றங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது/
. இருந்தாலும் என்று பெண் மதிக்கப்படுகிறாளோ/ அவளின் உரிமைகளில் அவளவளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் அவளுக்கு கிடைக்கிறதோ/ அன்றுதான் இதற்குத்தீர்வு
ஆணாதிக்கம் பெண்னடிமைத்தனம் இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாது
ஒரு பெண் நாட்டையே ஆண்டாலும் வீட்டில் அடங்கி நடக்கவேணும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது
ஒரு தாயும் தகப்பனும் பெண்குழந்தை வேன்டாம் என்றுசிந்திக்கிறார்கள் என்றால் காரணம் அவர்கள் வாழும் சமுதாயக்கோட்பாடுகளாகவேஇருக்க முடியும்
பெற்றது இரண்டும் பெண் பெற்றால் ஏன் வருத்தம் கொள்ள வைக்கிறது ஆனால்
இரண்டும் ஆண் என்றால் ஏக்கம் கொள்ள வைக்குமேதவிர வருத்தம் கொள்ள வைக்காது

மன்னிக்கவும் நடுவரே..இந்தமுறை பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை..
கடைசியில் ஒரு பதிவாவது போட்டுடணுமின்னுதான் ஓடிவந்தேன்.
என் ஓட்டு பெண்சிசுவை விரும்பாததன் காரணம் குடும்பம் மட்டுமே
ஏன்னா சமூகம் என்பது நம் எல்லாருக்கும் பொதுதானே..
அப்படியிருக்க சமூகம் மட்டுமே பெண்குழந்தைக்கு பிரச்சனை தருமென்றால்
எல்லாருமே இல்ல பெண்குழந்தை வேண்டாமின்னு சொல்வோம்
ஒருசில குடும்பங்களில் மகாலெட்சுமி அதாவது பெண்குழந்தை தான் வேணுமின்னு ஆசைப்படறாங்களே…சமூகமென்ன அவங்களுக்கு மட்டும் பெண்குழந்தை பெத்துக்கோங்கோ…உங்களுக்கு அதனால் வரும்
பிரச்சனைகளிலிருந்து தள்ளுபடின்னா சொல்லுது…
பெரும்பாலான குடும்பங்களில் பெண்குழந்தையை மறுப்பது பெற்றோர்களின் தன்னம்பிக்கை இன்மை மட்டும்தாங்க காரணம்
ஆண்பிள்ளைன்னா கடைசி காலத்தில கஞ்சி ஊத்துவாங்கற பழைய பஞ்சாங்கத்தையே நம்பி ஆண்பிள்ளை வேணுங்கிறாங்க…
அதோட ஆண்பிள்ளைன்னாதான் தன் ஆஸ்தி அனைத்தும் தன்வீட்டுல இருக்கும்..பெண்பிள்ளைன்னா தன்னைவிட்டு போயிடும் அப்படிங்கற காரணமும்தான்
ஏதோ சட்டத்தில ஆண்பிள்ளை/பெண்பிள்ளைக்கு சொத்துல சமபங்கு உண்டுன்னு சொன்னாலும் எத்தனை பெற்றோர்கள் ஆணுக்கு இணையா
பெண்ணுக்கும் சமமா தர முன்வர்றாங்க..அதுக்கு பெண்ணைவிட ஆண்குழந்தைகளை அதிகம் விரும்பறதுதாங்க காரணம்

அதிகம் செலவு பண்ணி பெண்பிள்ளைகளை ஆணுக்கு இணையா எல்லா
குடும்பங்களும் படிக்கவைக்கிறாங்களா?
வைக்கலாம் வசதியிருந்தா…ஆனா அப்படி வசதி இல்லன்னா யாருக்கு முன்னுரிமை ஆணுக்கா?பெண்ணுக்கா?
இன்னொரு வீட்டுக்கு போகப்போறவளவிட தன் ஆண்பிள்ளையை படிக்கவைச்சா தனக்கு உதவியா இருப்பாங்கற நப்பாசை தான்
இதெல்லாம் பெண்குழந்தையின் மீதான விருப்பமின்மையை மறைமுகமாககாட்டுகிறது
சமூகத்தை காரணம் காட்டி தன் பலவீனத்தை மறைக்க முயற்சிக்கும் எல்லா பெரும்பாலானகுடும்பங்கள் எல்லாமே பெண்குழந்தைக்கு மறுப்புதான் சொல்றாங்க
அதனால குடும்பம்தாங்க பெண்குழந்தைக்கு கறுப்புகொடி காட்டுது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

எங்கடா லீவில் போனவங்களை காணோம்னு நினைச்சிருந்தேன்... நலமா? வருகைக்கு மிக்க நன்றி :)

//எனக்குப் பிறக்கும் குழந்தைகளை அது ஆணோ பெண்ணோ என்னால் சிறப்பாக வளர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் சமூகத்துக்கு பயந்துதான் பெண் குழந்தைகளை மறுக்கிறோம் என்று சாக்கு சொல்வார்கள்// - சம பாயிண்ட், சம அடி!!! ஆண் பிள்ளை கேட்க ஆயிரம் காரணம் சொல்பவர்கள், பெண் பிள்ளை வேணும் என்று சொல்ல ஒரு காரணம் கூடவா இல்லை???!!! ;(

நேரம் கிடச்சா மீண்டும் வாங்கோ!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பெண் குழந்தை வேண்டாம்னு அவங்க அம்மாக்களும்,பாட்டிக்களும் நினைத்திருந்தால் இவர்களின் கதி என்னவாகியிருந்திருக்கும்// - ஹஹஹா!!! நல்லா இருந்திருக்கும்... அட்லீஸ்ட் அடுத்த பெண் வாரிசை அழிக்க ஆளில்லாமல் இருந்திருக்கும். :)

//பெண் குழந்தை பிறந்தால்,பெற்றவர்களே அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாலும்,குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு மனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது// - ஆமாம்... தன் மகனுக்கு ஒரு மகன்/ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணம்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்