பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

//பெற்றது இரண்டும் பெண் பெற்றால் ஏன் வருத்தம் கொள்ள வைக்கிறது ஆனால்
இரண்டும் ஆண் என்றால் ஏக்கம் கொள்ள வைக்குமேதவிர வருத்தம் கொள்ள வைக்காது// - புரியல. அப்படின்னா ஆண் வாரிசு பிறந்துவிட்டால் பெண் பிள்லை பெற்றெட்டுக்க வருந்துவதில்லைன்னு சொல்றீங்களா??? அப்ப மட்டும் வரதட்சனை கொடுக்க வேண்டாமா?? அப்போ மட்டும் இந்த சமூகத்தில் பெண்ணை வளர்ப்பது கஷ்டம் இல்லையா??!!! விளக்கம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... உங்க வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய தலை எல்லாம் குடும்பம் பக்கமா??? ;)

//சமூகமென்ன அவங்களுக்கு மட்டும் பெண்குழந்தை பெத்துக்கோங்கோ…உங்களுக்கு அதனால் வரும்
பிரச்சனைகளிலிருந்து தள்ளுபடின்னா சொல்லுது…
// - ஹஹஹா... நியாயமான கேல்வி. இன்னும் எதிர் அணி பதில் சொல்லலயே!!!

//பெரும்பாலான குடும்பங்களில் பெண்குழந்தையை மறுப்பது பெற்றோர்களின் தன்னம்பிக்கை இன்மை மட்டும்தாங்க காரணம்// - கவிசிவா முதுகுல எலும்பு இல்லன்னு சொன்னாங்க ;) நீங்க தன்நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க.

//அதோட ஆண்பிள்ளைன்னாதான் தன் ஆஸ்தி அனைத்தும் தன்வீட்டுல இருக்கும்..பெண்பிள்ளைன்னா தன்னைவிட்டு போயிடும் அப்படிங்கற காரணமும்தான்// - பிள்ளை சம்பாத்திப்பது வேணுடுமோ இல்லையோ... தன் சம்பாத்தியம் தன்னிடமே இருக்க ஆசை!!!

விட்டுப்போன பாயிண்ட்ஸ்’அ அப்படியே அச்சு பிசகாம சொல்லி இருக்கீங்க... உங்க அணிக்கு இன்னும் கூடுதல் பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து பலம் சேர்த்திருக்கீங்க. நன்றி :) நேரம் கிடைத்தால் மீண்டும் வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வரவும் செலவும் தான் காரணம்
எவ்வளவுதான் படித்து வேளை வாங்கிகொடுத்து வரதட்சனைகொடுத்து வைத்தாலும் பெண் வேரோர் வீட்டிற்க்கூப்போய்விடுமே
தன் வீட்டில் வைத்துக்கொள்ள முடியாதே
இது சமூக அமைப்பு தானே. இது சமூக அமைப்பு தானே. இது சமூக அமைப்பு தானே.
இங்கே பிள்ளையும் போய்விடுகிரது பணமும் செலவாகிரது
இதுவே ஆண் என்றால் வருமானம்
வேரோர்வீட்டுப்பென் நம் வீட்டுக்கு உதவியாக வருகிறாள்
பணம் நகையுடன்
மனிதனின் உள்மனம் சிசுவின் கருவிலேயே கருவின் பிறப்பிலேயே இதைதான் கணக்குப்போடுகிரது

1பெண் சிசு கொலை தற்பொழுது குறைந்துள்ளது என்று தான் நினைக்கிறேன்.அதற்க்கு காரணம் முதலில் வறுமை.
2.இரெண்டாவது பெண் குழந்தை பிறந்தால் திருமணம் செய்து வைக்கணும்
3.வரதட்சணை காசு பணம் என்று கொடுக்கணும்
4.வயதுக்கு வந்ததுல இருந்து பாதுக்கக்கணும்.
படிக்க வைக்கணும்
5.வளர்ந்து கணவர் வீட்டில் அடிபட்டு சாகறதுக்கு நாமே கொன்னுடலம்னு கூட நினைக்கலாம்
6.பிள்ளையை பெற்ற தந்தையும் தாயும் எடுக்கற முடிவுதான் பெண் சிசுகொலைக்கு முக்கிய காரணம்

அன்பு தோழிகளே... பட்டியில் தீர்ப்பு ஏற்கனவே தாமதம்... அதனால் முதல்ல மன்னிப்பு கேட்கிறேன்!!! சொந்த வேலைகள் சில காரணமாக அறுசுவையை எட்டி பார்க்கவே நேற்று முழுக்க நேரமில்லை... இன்று தீர்ப்பை கொடுக்கிறேன்... கோவிக்காதீங்க, இனி தான் தட்டனும் தீர்ப்பை!!! :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

னீங்களும் குடும்பம் தான் காரணம்னு சொல்றீங்களா??? கடைசி நிமிஷத்தில் வாதத்தோடு வந்து அணிக்கு பலம் சேர்த்திருக்கீங்க. நன்றி. அடுத்த பட்டியில் ஆரம்பத்தில் இருந்து வாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சற்றே குழப்பமான தலைப்பு என்பதாலோ என்னவோ ஆரம்பத்தில் பட்டியில் குழப்பம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சூடு பிடித்து பட்டி வெற்றியும் பெற்றது. மிக்க நன்றி.

இங்கு பேசிய யாருமே “பெண் சிசு கொலை இன்று இல்லை / பெண் சிசி வேண்டாம் என்ற எண்ணம் இப்போது இல்லை” என குறிப்பிடவில்லை. சிலர் கருத்துக்களில் “பெண் சிசுவை வேண்டாம் என்று சொல்வது குறைந்திருக்கிறது” என்றே சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் பெண் குழந்தையை மறுக்கும் மக்கள் இன்றும் உண்டு தானே?!! ஆம்.

சமீபத்தில் வந்த கருத்து கணிப்பின்படி கடந்த 30 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட பெண் குழந்தைகள் 12 மில்லியன்.

பெண் சிசுவை வெறுக்க கூடிய ஒரு சமூகத்தில் நாமும் பெண்!!! எந்த பெண்ணுமே தனக்கு பெண் பிள்ளை வேண்டாம், தன் மகனுக்கு பெண் பிள்ளை வேண்டாம் என்று எண்ணும் முன் இதே போல் நம் பெற்றோர் நம்மை வேண்டாம் என்று எண்ணியிருந்தால்!!! என்று எண்ணுவதில்லை.

சரி விஷயத்துக்கு வாரேன்:

யார் பெண் பிள்ளையை மறுப்பவர்?!

ஏழை? பணம் படைத்தவர்?

- பாரபட்சமே இல்லை... இருவருமே!!!

படித்தவர்? படிக்காதவர்?

- பாரபட்சமே இல்லை... இருவருமே!!!

ஆண்கள்? பெண்கள்?

- பாரபட்சமே இல்லை... இருவருமே!!!

அப்படினா என்ன் காரணத்துக்காக பெண் பிள்ளை வேண்டாம் என்று எண்ணம்???!!!

- பொதுவா குடும்பங்களில் பாருங்க... ஆண் பிள்ளை ஒன்று இருந்தால் அடுத்தது பெண்ணாக பிறந்தால் வருந்துவதில்லை.

- தலைப்பிள்ளை பெண்ணாக இருந்தால் அடுத்தது ஆண் வாரிசு வேண்டும் என்று மனதில் ஒரு பயம் அப்போதே தொத்திகொள்ளும். அடுத்து ஆணாக பிறந்துவிட்டால் அங்கும் பெண்ணை பெற்றவர் வருந்துவதில்லை.

இவங்க எல்லாம் “ஒரு பொண்ணு ஒரு பையன்”னு சமூகத்தில் பெருமையாக சொல்பவர்கள்.

- முதல் பெண், அடுத்தும் பெண் : ஒன்னு வேதனை/ஏமாற்றம் இருக்கும், இல்லன்னா மூன்றாவதா ட்ரை பண்ணலாமா பையன் பிறப்பானா என்று ஆசை இருக்கும்.

ஒரு பெண் ஒரு ஆண் என்ற சூழலிலும் செலவு செய்ய தானே வேண்டும் பெண் பிள்ளைக்கு??? ஏன் கவலைபடல? காரணம் பண்ண செலவை வசூல் பண்ண ஆண் பிள்ளை இருக்கே!!!

இன்று மருத்துவமனைகளிலேயே இரண்டாவது குழந்தையும் பெண்ணா இருந்தா என்ன ஃபாமிலி ப்லானிங் பண்ணிக்கங்கன்னு சொல்ல மாட்டங்கறாங்க... இரண்டும் பொண்ணா இருந்தா வங்க கூட தயங்குறாங்க. ஏன்??!! எனக்கு இன்னுமே புரியல.

சில காரணங்களை பெற்றோர்கள் சொல்றாங்க:

1. பெண் பிள்ளை பிறந்தா படிக்க வைக்க, கல்யாணம் பண்ணன்னு நிறைய செலவு. - அப்படின்னா ஆணுக்கு செலவில்லையா?? இருக்கு... ஆனா திரும்ப வந்துடுமே.

2. பார்த்து பார்த்து வளர்க்கனும்... என்னனா பண்னட்டும்னு விட முடியாது.... ஆண் பிள்ளை எப்படி வளர்ந்தா என்ன.

3. ஆண் பிள்ளையா இருந்தா காலத்துக்கும் நம்மோடு இருப்பான்... நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான், கொள்ளி போடுவான்.

4. நம்ம சொத்து நம்ம கைலயே இருக்கும்... யார் வீட்டுக்கோ போகும் பெண்ணுக்கு தர தேவை இல்லை.

இது தான் முதல் காரணங்களா இருக்கு.

அப்படின்னா... யார் வீட்டுக்கோ போய்விடும், நமக்கு பிற்காலத்தில் நாம் செய்ததை கூட நமக்கு திருப்பி செய்யாத பெண் பிள்ளைக்கு செலவு செய்ய தயக்கம்????!!! இதுக்கு ஏழ்மையோ, படிப்பறிவில்லாததோ காரணமில்லை, அதனால் தான் பாரபட்சம் இல்லாம வெறுக்கறாங்க.

இது எங்க இருந்து வந்தது??? குடும்பத்தில் இருந்து தானே? எனக்கு அவர்கள் ஏதும் செய்ய தேவை இல்லை, அவர்கள் வளர்ந்து நல்ல கவி, நல்ல வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற எண்ணம் வந்தால், அங்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதே!!!

என் சுய சம்பாத்தியம், என் சொத்துக்கள்... நான் பெற்ற பெண்ணுக்கும், ஆணுக்கும் சரி பாதி என்ற எண்ணம் நம் குடும்பங்களில் இருந்தால் நாளை ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்காதே!!!

நான் பெற்றேன், நான் கல்யாணம் செய்து வைக்கிறேன் என் பிள்ளைக்கு என்ற எண்ணம் வராமல் யாராவது செலவு பண்ணி கல்யாணம் பண்ணட்டும்னு நினச்சா... ஆண் பிள்ளை தான் வேண்டும்.

என் பிள்ளை சம்பாதிச்சு என்னை ஓகோன்னு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்... ஆண் பிள்ளை தான் வேண்டும்.

யார் கஷ்டப்பட்டா என்ன, என் பிள்ளையும் நாங்களும் கஷ்டப்பட கூடாது என்ற சுய நலம் இருந்தால்... ஆண் பிள்ளை தான் வேண்டும்.

ஆகா சுய நலம் இல்லாமல் எல்லா உயிர்களையும் ஒன்று போல் நேசிக்கும் மனம் படைத்தவர்களுக்கு ஆண் பெண் பேதம் இல்லை!!!

எதிர் பார்ப்பு இல்லாமல் தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் பெற்றோர்ருக்கு ஆண் பெண் பேதம் இல்லை!!!

எந்த பெற்றோரும் பெண் பிள்ளைகளை பெற்றால் சமூகம் “அச்சச்சோ பொண்ணா???”னு கேட்பதில்லை... பெற்றோரே... “பொண்ணா போச்சு”னு வருந்தறாங்க. படிப்பு, வேலை என எல்லாவற்றிலும் சமூகம் ஆணையும் பெண்னையும் சமமாக பாவிக்கிறது, ஆனால் குடும்பமே பெண்ணை வேறு விதமாகவும், ஆணை வேறு விதமாகவும் பாவித்து வளர்ப்பில் கூட பேதம் காட்டுகிறது.

பட்டியில் சில தோழிகள் சொன்னது போல் சமூகம் குழந்தைகளை பாதுகாக்க என்ன திட்டம் தீட்டினாலும் அதை மீறி பெண் பிள்ளைகளை குடும்பங்கள் மறுக்கின்றன. அவர்கள் சுயநலத்தால்.

பெண் பிள்ளை படிப்புக்கு உதவி, திருமணத்துக்கு உதவி என் பல திட்டங்கள் இன்று சமூகத்தில் இருக்கிறது.

எந்த பெற்றோரும் பெண் பிள்ளைகளை பெற்று வளர்த்து, அவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து சமூகத்தில் உயர வைத்தால் சமூகத்தில் தலை குனிவதில்லை!!! ஆனால் பெண் பிள்ளை வேண்டாம் என்று சொல்லும் பெற்றோரை சமூகம் மனிதனாக கூட மதிக்காது என்பதை நினைவில் வைப்போம்.

பெண்பிள்ளைகளை மறுப்பது குடும்பமே!!! இன்று சமூகத்தில் இந்த அளவு கூட கட்டுப்பாடு இல்லாமல் போயிருந்தால் இப்போது இருக்கும் பெண்கள் எண்ணிக்கையில் பாதி கூட இருந்திருக்காது!!!

இனி வரும் காலம் பெண்களை மதிக்கும், நேசிக்கும் காலமாக இருக்கட்டும்!!! குழந்தைகள் வாழ்வு மலரட்டும்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னால் பட்டியில் சுத்தமாக கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தமே அதிகமாக இருந்தாலும், தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இதோ வந்து விட்டது. வனிக்கே உரிய நடையில் விளக்கங்கள் தந்து அசத்தி இருக்கீங்க. கொஞ்சம் இருங்க, வந்து எனக்கு புடுச்ச விளக்கங்களை சொல்றேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சரியான தீர்ப்பு சொன்ன நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து தெளிவான விளக்கங்கள்........அதனையும் நிதர்சனமான உண்மைகள். சமூக அக்கறையுடைய இதுபோன்ற தலைப்புகள் நிறைய விவாதிக்க நம் தோழிகள் முன்வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை மற்றும் வேண்டுகோள்.... குடும்பம் தான் முதன்மை காரணம் என்பதே சரியான தீர்ப்புக்கு நன்றிகள்...நடுவரே..........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பட்டியில் ஏன் வர முடியலன்னு எனக்கு தெரியும் சுகி... அதனால் கவலை வேண்டாம்... முடியும்போது அவசியம் வந்து கலந்துக்கங்க :)

என்னால் இம்முறை தீர்ப்பை நல்லபடியா கொடுக்க முடியல, காரணம் ஏற்கனவே தீர்ப்பு தாமதம், விளக்கமான தீர்ப்பு தர நேரமின்மை... என பல டென்ஷன். மனதில் பட்டதையே தட்டினேன். 1/2 மணி நேரத்துக்கு மேல் தீர்ப்புக்கு ஒதுக்க முடியாமல் போனது வருத்தமே. இப்போது படித்தால் எழுத்து பிழையே ஏகமா இருக்கு ;( மிக்க நன்றி சுகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்