பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

யோசித்து நிதானமா தீர்ப்பை தட்ட முடியல... ஆனாலும் உங்க பாராட்டை படிக்க மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க நன்றி ப்ரியா. இந்த தலைப்பை எடுத்த போது நானும் நல்ல வரவேற்ப்பு இருக்கும், சூடான தலைப்புன்னு தான் தேர்வு செய்தேன்... ஆனா எடுத்த பின் நிறையவே வருத்தம்... இது போல் எந்த பட்டியையும் நான் பாதியில் நிறுத்த நினைத்ததில்லை. பரவாயில்லை... கடைசியில் தோழிகள் உங்கள் ஒத்துழைப்போடு நல்லபடியாகவே முடிந்தது. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஒரு பெண் ஒரு ஆண் என்ற சூழலிலும் செலவு செய்ய தானே வேண்டும் பெண் பிள்ளைக்கு??? ஏன் கவலைபடல? காரணம் பண்ண செலவை வசூல் பண்ண ஆண் பிள்ளை இருக்கே!!!
//

சரியா சொன்னீங்க :)

//நான் பெற்றேன், நான் கல்யாணம் செய்து வைக்கிறேன் என் பிள்ளைக்கு என்ற எண்ணம் வராமல் யாராவது செலவு பண்ணி கல்யாணம் பண்ணட்டும்னு நினச்சா... ஆண் பிள்ளை தான் வேண்டும்.

என் பிள்ளை சம்பாதிச்சு என்னை ஓகோன்னு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்... ஆண் பிள்ளை தான் வேண்டும்.

யார் கஷ்டப்பட்டா என்ன, என் பிள்ளையும் நாங்களும் கஷ்டப்பட கூடாது என்ற சுய நலம் இருந்தால்... ஆண் பிள்ளை தான் வேண்டும்.

ஆகா சுய நலம் இல்லாமல் எல்லா உயிர்களையும் ஒன்று போல் நேசிக்கும் மனம் படைத்தவர்களுக்கு ஆண் பெண் பேதம் இல்லை!!!

எதிர் பார்ப்பு இல்லாமல் தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் பெற்றோர்ருக்கு ஆண் பெண் பேதம் இல்லை!!!//

எல்லாமே முத்தான கருத்துக்கள் வனி..அதுக்குதாங்க இப்படி முத்துக்களை

உதிர்க்கும் சிப்பிகளை வேண்டாம்னு பலர் எப்படிதான் நினைக்கிறாங்களோ

புரியலை:(

//எந்த பெற்றோரும் பெண் பிள்ளைகளை பெற்று வளர்த்து, அவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து சமூகத்தில் உயர வைத்தால் சமூகத்தில் தலை குனிவதில்லை!!! ஆனால் பெண் பிள்ளை வேண்டாம் என்று சொல்லும் பெற்றோரை சமூகம் மனிதனாக கூட மதிக்காது//

சூப்பர்ங்க ..இனிமே மனிதர்களாக இருக்க முயற்சி செய்வோம்..!!

இந்தாங்க ரோஜாப்பூ வாழ்த்துக்கள் அருமையிலும் அருமை தீர்ப்பும் விளக்கமும்..:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அழகான ரோஜாப்பூ... இதை கொடுக்கும் மனமும் அதை ரசிக்கும் மனமும் கூட பெண்ணுக்கே உறியது. வாழ்க்கையை அழகாக ஆக்கும் பெண்களை இனியாவது நேசிக்கும் நல்ல மனிதர்கள் இந்த நாட்டில் இருப்பார்கள் என்றே நம்புவோம். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவருக்கு நன்றி/ நல்ல முடிவே. இருந்தாலும், நீங்கள் வரதட்சனை மற்றும் பெண் உரிமை பற்றியும் இரண்டொரு வார்த்தை கூறி இருக்கலாம். வாழ்த்துக்கள்/ குற்றம் இருப்பின் மன்னிக்கவும்

வெற்றி மீது வெற்றி வந்து சேருது...

தலைப்பு ஓகேதான்... உங்கள் நேரமின்மையும் மற்றும் நம் தோழிகள் அனேகரின் நேரமின்மையே அந்த தொய்வுக்கு காரணம். எனவே வருந்த வேண்டாம்...

மொத்ததிலேயே அறுசுவை சென்ற வாரம் அவ்வளவு கலகலப்பில்லை...:(

உங்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்தில் இவ்வளவு அருமையாக பட்டியை கொண்டு சென்றதே எங்கள் அனைவருக்கும் மிகுந்த திருப்தி.

சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை எனது அக்கா எனக்கு மெயில் பண்ணியிருந்தார்... பெண்களுக்கான வன்முறை பற்றி.. இந்தியா மூன்றாம் இடத்தில்... மற்ற நாடுகளில் செஃஸுவல் அப்யூஸ்மன்ட்... இந்தியா மூன்றாம் இடத்திற்கு வரக் காரணம் நாம் பெண்கள் மீது சுமத்தும் கலாச்சாரத் தடைகள்...

நிச்சயம் நாம் சுயநலமிகள்தான்...

சுயநலம் மிகுந்த, சமூகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும், பெண் குழந்தை பெற்றதால் வருத்தப் படும் அனைத்து பெற்றோர்களும் உங்கள் தீர்ப்பை ஒரு முறை வாசிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

வழக்கம்போல் சூப்பர் வனி...
நன்றி.

நல்ல தீர்ப்பு!முதல் ஆளாக வந்து இரண்டு பதிவுகளோடு ,தொடர்ந்து வரமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன்...ஏனென்றால் நான் நடுவராக இருந்த பட்டிமன்றத்தில் உங்களது பங்களிப்பு அதிகம்!...எளியவனான எனக்கும் இரண்டும் பெண் குழந்தைகள்தான்...வலியவர்களான ரஜினி,கமல் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள்தான்!..ஸோ...என்ன குழந்த என்பதில் பிரச்சனை இல்லை,எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி நீதியை நிலை நாட்டியதற்கு நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நடுவரே!
உங்க வேலைகளுக்கு இடையிலும்,பல இடையூறுகளின் நடுவிலும் பட்டியை வெற்றிகரமாக நடத்தி,முடித்ததற்கு வாழ்த்துக்கள்.

அருமையான தீர்ப்பு!தெளிவான விளக்கங்கள்!பட்டியில் விட்டுப்போன பாயிண்ட்ஸ் எல்லாவற்றையும் அழகா பட்டியல் போட்டுட்டீங்க.

அவசரத்தில் தட்டினாலும் எல்லா கருத்துக்களையும் உங்க தீர்ப்பில் கொண்டுவந்துட்டீங்க.உங்க தீர்ப்பை படிக்கும் போது,பட்டியின் தலைப்பை பற்றி எவ்வளவு அலசி,ஆராய்ந்து,யோசிச்சு இருப்பீங்கனு நல்லா தெரியுது.மனமார்ந்த பாராட்டுக்கள்.

எங்க அணிக்கு சாதகமா தீர்ப்பு வந்ததில் பெரும் மகிழ்ச்சி,நடுவரே.நன்றி.வெற்றி பெற்ற எங்க அணிதோழிகளுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.பட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அருமையான தீர்ப்பு..
அழகா நிதானமா நச்சுனு சொல்லிட்டிங்க..
தீர்ப்பை படிக்க ஏதுவாக ஸ்வாரஸ்யம் குறையாமல் அளவோடு அழகா சொல்லிட்டிங்க..
வளவள கொழகொழ ஏதும் இல்லாம நச்சுனு மேட்டருக்கு வந்து தீர்ப்பை சொல்லிட்டிங்க..
சுருக்கமா சொன்னாலும் அழகா சொல்லலாம்னு நிருபிச்சிட்டிங்க. சூப்பர் வாழ்த்துக்கள் வனி.. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர் தீர்ப்பு நடுவரே... :) நேரமே இல்லாமல் எழுதி வைத்திருந்த வாதத்தைக் கூட போட முடியாமல் போனது.. :( மிக வருத்தமாக இருந்தது... எனினும்... நல்ல தீர்ப்பு... அழகான அலசல்... வாதங்கள் குறைவாக இருந்தாலும் கருத்துகள் நிறைவாக இருந்தது.. :) பங்கு பெற்ற தோழியர் அனைவருக்கும் வாழ்த்துகள்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

மிக்க நன்றி. பெண் உரிமைக்கும் பெண் சிசு மறுப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தோனல,.... அதான் அதை பற்றி இங்கே பேசல. வரதட்சனை... அதான் சொன்னேனே... நம்ம பெற்ற பிள்ளைக்கு நாம் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா பெண் பிள்ளை ஆண் பிள்ளை பேதம் இல்லை... யாராவது பண்ணட்டும்னு நினைச்சா ஆண் பிள்ளை தான் வேண்டும் என்று. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்