பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

மிக்க நன்றி. நீங்களாம் ஒத்துழைக்கலன்னா பட்டி இந்த அளவு போயிருக்காது இம்முறை. உண்மை தான்... இப்பலாம் இந்தியா கெட்ட விஷயத்தில் முந்தி கொண்டு போகிறது!!! எதிர் காலம் பற்றிய பயம் இப்பவே வந்தா நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அடுத்த முறை பட்டியில் முழுமையாக கலந்துக்கங்க. வாதிக்கப்பட வேண்டிய தலைப்பை தந்தமைக்கு மீண்டும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரண்டும் பெண் பிள்ளை என்று உறவுகள் எல்லாம் கைவிட்டாலும் எங்களை பெற்றவர்கள் எங்களை கைவிடவில்லை.... எங்க வீட்டில் ஆண் வாரிசுகளை விட நன்றாக படித்து வேலைக்கும் போன முதல் பெண்கள் என்ற பெருமையை எங்களுக்கு வாங்கி தந்து இன்று தலை நிமிர்ந்து நடக்க வைத்த என் பெற்றோரை மனதில் கொண்டே தீர்ப்பை தட்டினேன். வாழ்த்துக்களும் அவர்களே சமர்ப்பனம். மிக்க நன்றி ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மையில் சொதப்பாம தீர்ப்பிருக்கா?? அது போதும். சொல்ல விரும்பிய கருத்தை தெளிவா சொல்ல கூட நேரம் போதவில்லை. அந்த நேரம் மனதில் பட்டதை தட்டினேன். மிக்க நன்றி ரம்யா. நீங்களாம் வந்து சப்போர்ட் பண்ணலன்னா நான் தொடர்ந்திருக்க மாட்டேன். மீண்டும் நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அடுத்த் அபட்டிக்கு அவசியம் வாங்க... உங்க வாதங்களை பதிக்க முடியாமல் நீங்க வருந்திய அளவு அதை மிஸ் பண்ண நாங்க வருந்துறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான தீர்ப்பு, கலக்கிடீங்க..என்னால் இந்த பட்டி மன்றத்தில் வந்து பதிவிட முடியவில்லை, ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி ஆரம்பத்தில் குழப்பம் போல் தோன்றினாலும் இறுதியில் நன்றாக சூடி பிடித்தது.

ராஜி

அடுத்த பட்டியில் கண்டிப்பா கலந்துக்கங்க. உங்க வாதத்தை ரொம்பவே மிஸ் பண்ணீட்டோம். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,எளிமையாகவும்,தெளிவாகவும் தீர்ப்பு சொல்லியிருக்கீங்க.

எதற்காக பெண் வேண்டாம்,ஆண் வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று மிகத்

தெளிவாக நடைமுறை உண்மைகளை பட்டியல் போட்டு

சொல்லியிருக்கீங்க.பாராட்டுக்கள்,வனி.

அவசரத்தில் தந்த தீர்ப்பென்றாலும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் தெளிவாக

சொல்லியிருக்கீங்க.நேரமின்மையிலும் சிறப்பாகச் செய்யும் உங்களுக்கு ஸ்பெஷல்

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் வனி.

எப்போதும் பட்டியை தாங்கிப் பிடிக்கும் உங்களுக்கு மனமார்ந்த

வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் வனி.

உங்க பட்டியில் கலந்துக்க முடியாம போயிடுச்சு,மன்னிக்கனும் வனி.நீங்க நடுவரா

இருக்கப்ப கலந்துக்கனும்னு இருந்தேன்,முடியலை.ஒரு நல்ல நடுவரை மிஸ்

பண்ணிட்டேன்.தீர்ப்புக்கும் ரொம்ப லேட்டா பதிவு போடறேன்,அதுக்கும்

மன்னிக்கனும் வனி.

இன்னும் நிறைய பட்டிகளில் நடுவராக வந்து சிறப்பிக்க வாழ்த்துக்கள் வனி.

அன்புடன்
நித்திலா

ரொம்ப ரொம்ப நன்றி நித்திலா. பிசியாகிட்டீங்களா??? உங்க பதிவை படிக்க மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாரம் உங்களால் நடுவரா வர இயலுமா??? சொல்லுங்க ப்ளீஸ்.... தொடர்ந்து ஒருவரே பட்டி நடுவரா வர இயலாது... அப்படி வந்த அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க இயலாது போகும். அதனால் இம்முறை யாராவது வந்து பட்டிக்கு கை கொடுங்க... :) தினமும் பதிவிடனும் எல்லாருக்கும்னு அவசியம் இல்லை... உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாங்க. யோசிச்சு சொல்லுங்க ப்ளீஸ்... நாளை தொடங்கனும் பட்டிமன்றம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, தீர்ப்பு படித்தேன். மிக அருமை. உங்களை அடிச்சுக்க முடியுமா. தெளிவா தீர்ப்பு சொல்லிருக்கீங்க. பட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கனும் வனி.

உங்க தீர்ப்பு படிக்கும் போது, ரெண்டும் பெண் பிள்ளையா இருந்தும் இது வரைக்கும் ஒரு ஆண் இல்லையென்று நான் நினைத்தது கூட இல்லைனு சொல்லும் அப்பா அம்மா தான் நினைவுக்கு வந்தாங்க. நான் பெண் பிள்ளை வேண்டாம் என்று சொல்லவில்லை, பெண்ணாய் பிறந்து சில சமயங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம் குழந்தையும் பெற கூடாது என்பதற்காக சில பேர் பெண் பிள்ளை வேண்டாம் என சொல்ல கேள்வி பட்டிருக்கேன்.

வாழ்த்துக்கள் வனி.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்