முறுக்கு

தேதி: July 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (9 votes)

திருமதி. மாலதி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.

 

பச்சரிசி - நான்கு கப்
உளுந்து - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

தேவையானவற்றை தயார் நிலையில் வைக்கவும்.
பச்சரிசியை கழுவி (ஊற வைக்க கூடாது) நன்றாக காய வைக்க வேண்டும்.
உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
காய்ந்த பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு மூன்றையும் சேர்த்து கலக்கவும்.
அதை மெஷினிலோ அல்லது மிக்சியிலோ நைசாக பொடிக்கவும்.
அரைத்த மாவில் வெண்ணெய், சீரகம், பெருங்காய பொடி, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும்.
பிசைந்த மாவை அச்சியில் போட்டு ஒரு தட்டில் இது போல் பிழிந்து வைத்தும் எண்ணெயில் போடலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நேரடியாக பிழிந்து வெந்ததும் எடுக்கவும்.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்தமான முறுக்கு ரெடி.

வித்தியாசமான முறுக்கு இது. உளுந்து சேர்த்து தான் முறுக்கு செய்வார்கள், பாசிப்பருப்பு சேர்த்து செய்தது சுவை நன்றாக இருந்தது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னது பிள்ளைகளுக்கா முதல்ல சாயங்காலமானா எனக்கு வேனும் முருக்கு ம்ம் சீக்கிரம் இங்கிட்டு ஒரு பிளேட் அனுப்புங்க பாப்போம்
உண்மைலே நல்லாருக்கும் ஆமா மிக்சியில போடலாமா கடுக்குன்னு வராதா