ரெக்கார்ட் சாக்லெட் ட்ரே

தேதி: July 15, 2011

5
Average: 4.7 (18 votes)

 

ரெக்கார்ட் – ஒன்று
கர்ட்டன் டை நாப் செட் (curtain tieback knob set) – ஒன்று
அகலமான பழைய பான் (an old large cooking pan) – ஒன்று
நாப் செட்டில் உள்ள ஸ்க்ரூவுக்குப் பதிலாக நீளம் குறைவான, பொருத்தமான வேறு ஸ்க்ரூ - ஒன்று
வாஷர் – 2
மொத்தமான சட்டைப் பொத்தான்கள் – 3 அல்லது 4
சுப்பர் க்ளூ
குரடு
டாய்லி (doily)

 

ரெக்கார்ட் சாக்லெட் ட்ரே செய்வதற்கு மேற்கூறிய அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பானில் ஒரு கோப்பை அளவு நீரைக் கொதிக்க வைக்கவும். நீர் கொதித்ததும் அடுப்பைத் தணித்து வைத்து, ரெக்கார்டை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு மறுகரை பானில் படுமாறு பிடிக்கவும்.
ரெக்கார்ட் மெதுவே இளக ஆரம்பிக்கும் பொழுது வெளியே எடுத்து ஓரத்தைக் கையால் தேவையான அளவு நெளித்துக் கொள்ளவும். (ரெக்கார்ட் கை பொறுக்கும் சூட்டில் தான் இருக்கும்.) மீண்டும் நீரில் அமிழ்த்தி அடுத்தடுத்த நெளிவுகளையும் தேவைக்கேற்ப அமைத்து எடுத்துக் கொள்ளவும். அவை சரியாக அமையாவிட்டால் மீண்டும் பாத்திரத்தில் அமிழ்த்திச் சரிசெய்து கொள்ளலாம்.
முழுவதும் நெளித்து முடிக்கும் போது ஒன்றிரண்டு நெளிவுகள் மீண்டும் சரி செய்யப்பட வேண்டி வரும்.
எடுக்கும் பொத்தான்கள் ஸ்க்ரூவின் தலையை விட மொத்தமாக இருக்க வேண்டும். அவற்றின் பின்புறம் உள்ள வளையங்களை குரட்டினால் நறுக்கி நீக்கி விடவும்.
க்ளூ கொண்டு ரெக்கார்ட்டின் அடியில் பொத்தான்களை ஒட்டிக் காய விடவும். இங்கு பயன்படுத்தி உள்ள பொத்தான்கள் வெல்வெட் மேற்பரப்புக் கொண்டவை, மேசையில் வழுக்கவோ கீறல் விழ வைக்கவோ செய்யாது.
கர்ட்டின் நாப் செட்டில் இருந்து படத்தில் காட்டி உள்ள இரண்டு துண்டுகளையும் விட்டு விடவும். அவை தேவைப்படாது. (இவற்றுக்குப் பதிலாகத்தான் மற்ற ஸ்க்ரூவும் வாஷர்களும் பயன்படுத்தப் படப் போகின்றன.)
பொத்தான்கள் நன்கு ஒட்டிய பின் ரெக்கார்ட் நடுவில் உள்ள துளையின் கீழே ஒன்றும் மேலே ஒன்றுமாக இரண்டு வாஷர்களை வைத்து அதற்குமேல் ஸ்க்ரூவை வைக்கவும்.
ஸ்க்ரூவை கொண்டு நாப் செட்டில் உள்ள நீளமான தண்டினை ரெக்காட்டுடன் இறுக்கமாக இணைக்கவும்.
செட்டில் உள்ள வட்டமான தட்டினை மேலே பிடி போல வருமாறு இறுக்கமாக இணைத்து விடவும்.(இதன் உள்ளே புரி இருக்கும்.)
பரிமாறும் பொழுது வட்டமான டாய்லி ஒன்றை படத்தில் காட்டி உள்ளவாறு வெட்டி ட்ரேயின் உள்ளே வைக்கவும்.
இப்போது ரெக்கார்டுகள் பாவனை அரிதாகி விட்டது. பெயிண்ட் செய்யாமல் அப்படியே விட்டால்தான் சிறப்பாக இருக்கும் என்று வீட்டார் அபிப்பிராயப் பட்டார்கள். அதனால் அப்படியே விட்டுவிட்டேன். விரும்பினால் ஏதாவது ஒரு வர்ணமோ அல்லது அதன் மேல் டிசைன்களோ பெயிண்ட் செய்துகொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போன முறை செய்த ஃப்ளவர் வாஸைவிட இந்த முறை மிகவும் மெனக்கெட்டு பண்ணியிருக்கீங்க. அதுக்கேத்தமாதிரி மிகவும் சிறப்பாகவே வந்துருக்கு சாக்லெட் ட்ரே. கிரேட்..!

Don't Worry Be Happy.

இமா வித்தியாசமா யோசிச்சு பண்ணுறீங்க...ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள்...

இமா,
ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.அபார கற்பனைத் திறன்...அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்,இமா.

ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்பவே வித்தியாசமா யோசிக்குறீங்க.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர்ர்ர்ரர் ...........

ஹிஒஹியோ வடை போச்சே,

:((

இட்ஸ் ஓகே .....
மூன்றாவது வடை எனக்கே....:)

சரி நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களா..
எப்படி எல்லாம் மறு பயன்பாடு
அழகு
எளிமை...

கல்லிலே கலை வண்ணம் கண்டார் மாமலபுரத்தில்
இங்கு பழைய ரெகார்ட் இல் கலையே கொண்டார் இமா
வாழ்க வளமுடன்

"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"

சூப்பரா இருக்கு இமா! ரெக்கார்டுதான் எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை. தேடிப் பார்க்கணும். வாழ்த்துக்கள் இமா.

முதல்ல... குறிப்பை வெளியிட்ட அறுசுவைக்கும், இதற்கு //சாக்லெட் ட்ரே// என்று பேர் வைத்த தவமணிக்கும் நன்றி. ;)

மிக்க நன்றி வனி, ஜெயலக்ஷ்மி, சுமதி & லாவண்யா. உங்கள் அனைவரது பாராட்டுக்களும் என்னை இன்னும் அதிகமாகக் கைவினையில் ஈடுபட வைக்கிறது.

ஹர்ஷாவுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ். ;)

சிவா, முன்னாலயே சைட்ல //ஹிஒஹியோ வடை போச்சே// பார்த்தேன். ;)) ஆனா அது எனக்காக இருக்கும் என்று தோணல. நன்றி. ;)

ஜனனி, என்ன மேடம் ரிஷபம் எல்லாம்! ;) ஒரு சொல்லிலயே டைப்பிங் முடிச்சிட்டீங்க. நன்றி. ;)

‍- இமா க்றிஸ்

அஸ்மா...
1. செகண்ட் ஹாண்ட் ஷாப்ல கிடைக்கும், ஆனா விலை அதிகமா இருக்கும்.
2. DJ யாராச்சும் தெரிஞ்சவங்க இருந்தா விசாரிச்சுப் பாருங்க. இவங்க சொல்ற இடங்களிலேயும் விலை அதிகமாகத் தான் இருக்கும். இவங்க கீறல் விழுந்த ரெக்கார்டைக் கூட யூஸ் பண்ணத் தெரிஞ்சு வச்சு இருக்காங்க. ;)
3. 'oppertunity shops in france' என்று கூகிள் பண்ணிப் பார்த்தேன். ஃப்ரான்ஸ்ல சாரிடி ஷாப்ஸ், த்ரிஃப்ட் ஷாப்ஸ்லாம் நிறைய இருக்கே, பாருங்க. இதான் பெஸ்ட் ஆப்ஷன். கட்டாயம் கிடைக்கும்.
4. எங்கயாச்சும் 'ஸ்கூல் காலா' (gala) நடக்கிறப்ப போய்ப் பாருங்க. இங்க பொதுவா புக்ஸ் இருக்கிற ஸ்டால்லதான் ரெக்காட்ஸ் சீடீல்லாம் போடுவாங்க. (மூடுற டைமுக்கு போனா மீதி இருக்கிறது எல்லாத்தையும் குறைஞ்ச விலைல தள்ளிட்டு வந்துரலாம். ;) அப்ப போனாப் போதும்னு கேக்குற விலைக்கு கொடுத்துருவாங்க.)
5. கராஜ் சேல் / யார்ட் சேல் நடக்கிற இடங்களில் மிஸ் பண்ணாம பாருங்க. (விலை சிலர் அதிகமாக சொல்லக்கூடும்.)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகாவும் அட்டகாசமாவும் இருக்கு!!!

இமாம்மா என்ன ஒரு கற்பனை நல்ல ஐடியா. ரெக்கார்ட்ல செஞ்ச இரண்டு க்ராஃப்ட்ம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரெக்கார்ட்ட இப்படி நெளி நெளியா வளைக்கிறது எவ்வளவு நேரம் ஆகும். ரெக்கார்ட் இதுவரைக்கு நேர்ல பார்த்தே கிடையாது. டிவி, போட்டோவுல தான் பார்த்திருக்கேன். செஞ்சு பார்க்கனும் ஆசையா இருக்கு.

நன்று நன்று. ச்சே..... எப்படிப்பா.......... எப்படிப்பா........... இப்புடில்லாம் யோசிக்கிரீங்க மாஷா அல்லாஹ் ..... மேலும் உங்களின் திறன் சிறக்கட்டும்

சுபா, பஸாரியா & வினோஜாவுக்கும் ரகசியமாக ஓட்டுப் போட்டவங்களுக்கும் என் நன்றி. ;)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது நானாக யோசித்து செய்தது என்று இல்லை. சிறு வயதில் இப்பிடி ஒன்று வீட்டில் இருந்தது, அப்பா செய்தது. அவர் நன்றாகக் கைவேலை செய்வார். ஆனால் எப்படி இந்த ட்ரே செய்வது என்று மறந்து போய் விட்டார். சுடுநீரில் போட வேண்டும் என்று மட்டும் சொன்னார், அதிலிருந்து நான் வெவ்வேறு முறைகளில் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். கைபிடிக்கு வேறு ஏதோ போட்டு இருந்தார். எனக்கு இந்த 'நாப் செட்' கிடைத்தது.

//ரெக்கார்ட்ட இப்படி நெளி நெளியா வளைக்கிறது// சீதாம்மா வாஸ் குறிப்புக்குக் கீழ வேற ஒரு ஐடியாவும் கொடுத்து இருந்தாங்க, பார்த்து இருப்பீங்க இல்ல. ட்ரை பண்ணுங்க.

//இப்படி நெளி நெளியா வளைக்கிறது எவ்வளவு நேரம் ஆகும்.// நீர் கொதிக்க வைத்தால் பிறகு ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம் எடுக்கும். ரெக்கார்ட் 'பான்' அடியில் படுவது போல பிடிக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

இமா,

//ரகசியமாக ஓட்டுப் போட்டவங்களுக்கும் என் நன்றி. ;)//

நான் தான் ஓட்டுப் போட்டேன். ;-)

இமா... சூப்பர்... நிச்சயமா வித்தியாசமான பொருள் செய்திருக்கீங்க... நிறைய பொருமை உங்களுக்கு... பார்க்க மார்டனா, அழகா இருக்கு... மேலும் இதுபோன்ற புதுமைகளை செய்ய வாழ்த்துக்கள்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ரொம்ப அழகா இருக்கு

do or die

இப்பிடி எல்லாம் செய்வீங்க எண்டு தெரிஞ்சிருந்தா திருகோணமலையிலேயே டியூஷன் கு வந்திருக்கலாம் ... உங்க கைக்கு மோதிரம் செய்து போடலாம் ..அங்கிள் கிட்ட சொல்லுங்க

மேடம் வேணாம் .. ஒன்னும் வேணாம் ... இனி இமா எண்டுதான் கூப்பிட போறன். அறுசுவை யில் மட்டும் ..மன்னிச்சு கொள்ளுங்க ....

இமாம்மா வரே வா. எப்படிலாம் யோசிக்கிறீங்க. அப்பா செய்ததை பார்த்து ஐடியா வந்தாலும் இவ்வளவு நேர்த்தியா செய்யனும்ல. ரொம்ப அழகா இருக்கு.

உங்க கையில எது கிடைச்சாலும் அது அழகிய வடிவம் பெருகிறது . :-)) அது உங்க ராசியா..? இல்லை அந்த பொருட்களின் ராசியா ? :-))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

//ரெக்கார்ட் (அஸ்மாவுக்காக)// உங்கள் அன்புக்கு சந்தோஷம் கலந்த நன்றி இமா :) இவ்வளவு இடங்களை சொல்லியது மட்டுமில்லாமல், எனக்காக கூகிள் சர்ச்சும் பண்ணியிருக்கீங்க, ரொம்ப தேங்ஸ் இமா :)

//மூடுற டைமுக்கு போனா மீதி இருக்கிறது எல்லாத்தையும் குறைஞ்ச விலைல தள்ளிட்டு வந்துரலாம். ;) அப்ப போனாப் போதும்னு கேக்குற விலைக்கு கொடுத்துருவாங்க//

இதுவும் நல்ல டெக்னிக்கா இருக்கே ;) இனி ஃபாலோ பண்ணிட வேண்டியதுதான் :) ரெக்கார்ட் கிடைச்சா உங்க கிட்டதான் முதல்ல சொல்லணும் ;))

சகோ. ஜெய்லானி! அறுசுவைக்கும் வர்றீங்களா? ஓகே...ஒகே :))

இமாடீச்சர் உங்க [ரெக்கார்ட்] கைய் வன்னம் சூப்பர் பார்த்தேன் ரசித்தேன் அருமை டீச்சர்

இங்கே டீச்சர் என்று யாரயும் கூப்புடமுடியாது செக்கு [cikku] என்றுதான் அலைக்கமுடியும்
அதான் அந்த ஆசைய உங்கமூலமா நிரை படுத்தி கொண்டேன்
தொடரலாமா கூடதா

அன்புடன்
பல்கிஸ்

உதவி செய்தால் உண்மையாக செய்
திருப்த்திஅடைவாய்

அன்புடன்
பல்கிஸ்

;) //நான் தான் ஓட்டுப் போட்டேன்.// ;) மிக்க நன்றி ஹர்ஷா.

ப்ரியாஅரசு, அம்மு, யாழினி அனைவர் பாராட்டுக்கும் என் நன்றி.

ஜனனி, //திருகோணமலையிலேயே டியூஷன்// அங்கதான் 'எல்லாருக்கும்' ஸ்கூல் வேலைக்கே நேரம் சரியாக இருந்துதே. ;) அங்கிள் மோதிரம் போட்ட படியால் தான் இப்பிடி இருக்கிறன். ;)

இங்கும் எட்டிப் பார்த்ததற்கு நன்றி ஜெய்லானி. அஸ்மா கண் வச்சுட்டாங்க, பத்திரம். ;)

பல்கிஸ், சிக்கு புக்கு ரயிலேன்னு கூப்பிடாத வரைக்கும் ஓகே. ;))) பாராட்டுக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

இன்னொரு பாட்டா...

ப்ளாக் ப்ளாக் ப்ளாஸ்டிக்
ஹாவ் யூ எனி ரெக்கார்ட்?
எஸ் மேம் எஸ் மேம் த்ரீ பேக்ஸ் ஃபுல்
ஒன் ஃபார் இமா
ஒன் ஃபார் செபா
அண்ட் ஒன் ஃபார் மீ.( அடுத்த கைவினைக்கு ஈடு கொடுக்கணுமில்ல)

பாடிட்டேன். சாக்லேட்டுகளொடு ட்ரேயை எடுத்துக்கிறேன். நன்றி.

//சகோ. ஜெய்லானி! அறுசுவைக்கும் வர்றீங்களா? ஓகே...ஒகே :)) //

ஆமாம் சகோஸ்..! அங்கே பிளாகில கமெண்ட்ஸை பிளாக் செஞ்சிருந்தாங்க அதை பிடிச்சிகிட்டு நேரே ஓடியாந்துட்டேன் :-)) லிங்க் குடுக்கும் போது மட்டும் அதிகம் வருவதுண்டு :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

இமா
ரொம்ப அழகா இருக்கு பாக்க... செய்து பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப அழகா இருக்கு...........

இமா அழ்கான கற்பனைத்திறன் வேஸ்டான பொருட்களைக்கூட இவ்ளோ அழகா கலைநயத்துடன் செய்து இருக்கீங்க மென் மேலும் வளரட்டும் உங்கள் கற்பனைத்திறன் வாழ்த்துக்கள்

அழகே! அழகு! எப்படி இப்படியெல்லாம் முடிக்கிறது உங்களால். ரொம்ப யோசிச்சீங்கலோ நான் இந்த ரெக்காடரை எல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்துயிருக்கிறேன். அது அந்த காலத்து பொக்கிஷம் மாதிரி. இப்பொழுது அது இருக்கா இல்லையா என்று கூட தெரியவில்லை. நீங்கள் அந்த பொக்கிஷத்தையே நம்ம டேரண்டுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். உங்கள் கலை நயம் அழகோ அழகு சாக்லெட் ட்ரே!

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தேன்மொழி, //இன்னொரு பாட்டா...// bata!! ;))) பாட்டு நல்லா இருக்கு கவிஞரே. தேன் வழியுற குரல் உங்களுக்கு. ;))

ரம்யா - அழகா இருக்குன்னு சொன்னா பத்தாது. பண்ணிக் காட்டணும். பேக் பண்ற கேக், குக்கீஸ்லாம் இதுல வச்சு சர்வ் பண்ணலாம்ல. இருங்க, சீக்கிரம் உங்களுக்கு வேறொரு பேக்கிங் காட்டித் தரேன்.

தாங்ஸ் ஆமினா. ரொம்ப பிசியா இருப்பீங்க. நடுவுல இங்க எட்டிப் பார்த்துக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி.

ஃபாத்திமா... ;) //வேஸ்டான பொருட்களைக்கூட// இங்க உள்ளவங்க இதைப் பார்த்தா என்னைத் திட்டுவாங்க. நான்தான் வேஸ்ட் ஆக்குறேன்பாங்க. ரெக்கார்ட்லாம் இப்பிடி வேஸ்ட் ஆக்கப்படாது; போட்டுக் கேட்டு ரசிக்கணும்பாங்க. ப்ளேயருக்கு எங்க போறது!

ரேவதி... //அது அந்த காலத்து பொக்கிஷம் மாதிரி.// ம்... செபா சொல்லுவாங்க, அவங்க சின்ன வயசுல ஊர்ல ஒரே ஒரு க்ராமஃபோன் இருந்துதாம். எல்லா கலியாண வீட்டுக்கும் போகும் போல. அதை 'பாடுற சூத்திரம்' என்பாங்களாம். ;) நான் முதல் முதல் கேட்ட பாட்டு 'ஆரியக் கூத்தாடினாலும்'. ;) ரெக்கார்ட்ல கீறல் விழுந்தா கேட்க ஜாலியா இருக்கும். ;)) திரும்பத் திரும்ப அதே வரியைப் பாடிட்டே இருக்கும்.

கருத்துச் சொன்ன எல்லோருக்கும் என் அன்பு நன்றி. இந்தக் குறிப்பு யாருக்காச்சும் உபயோகமாக இருந்து செய்து பார்த்தீங்கன்னா உங்க அனுபவங்களை வந்து சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கு இமா... இது வரை கைவினைல பார்த்த எதையுமே செய்ததில்ல. ஆனா இத செய்யனும்போல இருக்கு. செய்துட்டு ஏதாவது சந்தேகம் இருந்தா கேக்கறேன். இன்னும் 1 வாரம் நிறைய வேலை இருக்கு. வீடு மாத்தறேன். புது வீட்டுக்கு போய்ட்டு அடுத்த பதிவுல சந்திக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)