காது ஓட்டை பெருசு ஆகுது

தோழிகளே

எனக்கு காது ஓட்டை பெருசு ஆகுது. என்னால் தோடு போட முடியல. ஓட்டை சின்னது பண்ண என்ன செய்யலாம். தயவு செஞ்சி யாராவுது உதவுங்கள்.

பட்டன் போடுங்கள் அதிக கனமான தோடை தவிர்க்கவும்..

இப்போ இருக்கும் பெரிய ஓட்டை எப்படி மூடுறது. ஓட்டை பெரியதாக இருக்கிறது. எந்த டாக்டர் கிட்ட போகணும்.

earlobe repair என்று google - ல் தேடி பாருங்க.......

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஹாய் பத்மா... எனது அத்தைக்கும் இதுபோன்ற பிரச்சனை இருந்தது. நாம் எப்போதும் காண்பிக்கும் குடும்ப மருத்துவரிடம் கூறினால் அவரோ அல்லது அது சம்பந்தப்பட்ட டாக்டரிடம் ஒன்று அல்லது இரண்டு தையல்கள் போட்டுவிடுவார்களாம். அவரும் தைய்யல் போடுவதற்கு பயந்துகொண்டு இரண்டு வருடங்களாக தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். பின்னர் வேறு வழியே இல்லை என்ற நிலையில் சென்று வெற்றிகரமாக முடித்துவிட்டார். பயப்படுவதற்கு ஒன்னுமே இல்லை என்றும் இதை ரெண்டு வருடத்துக்கு முன்னாலேயே செய்திருக்கலாம் என்றும் கூறினார். தற்போது அவரின் காது நார்மலாக உள்ளது. தையல் போட்டு சிறிது கால் இடைவெளிக்குப் பின் எல்லாவிதமான கனத்த தோடுகளையும் போடலாம். நீங்களும் ட்ரை செது பாருங்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

i will try.

காதை கொஞ்ச நாளைக்கு துரப்போடுங்க சரிவராவிட்டால் உங்க family docter இல்ல குழந்தை டாக்டரிடம் காதை தச்சிக்கொங்க
-ரஸினா

மேலும் சில பதிவுகள்