புது அரட்டைக்கு வாருங்கள்

புது அரட்டைக்கு வாருங்கள் தோழிகளே பழைய டீ டைம் அரட்டை பத்தி மூன்று பக்கம் கடந்ததால் இந்த பக்கம் ஓடி வாங்க

இன்று டாபிக் தத்துவம் பற்றி என்ன நினைக்கிறிங்க நாம அடிகடி சொல்லுவோம் அது சோகமாக இருந்தாலும் சரி சந்தோசமோ அல்லது துக்கமோ எல்லாத்துக்கு ஒரு தத்துவம் சொல்வோம் இங்கே பகிர்ந்துக்கலாம் வாங்க தோழிகளே... பிடித்தால் தொடரலாம் இல்லைனா மாத்திக்கலாம் .....

ஹாய் தேவி...... தத்துவம்............பற்றி சொல்ல நிறையா இருக்கு... ஒரு அருமையான தத்துவம் சொல்லி நீங்களே ஆரம்பிங்களேன்....(எஸ்கேப்)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹா ஹா ஹா ஓகே நானே ஆரம்பிக்கிறேன்.......என் தங்கை என்னைக்காவது என்கிட்டே கூசிகிட்டு சாப்பிட மாட்டேன்னு இருந்தால் நான் அவள்கிட்ட போய் புலி பசிச்சாலும் புள்ள திங்காது இங்கே எப்படின்னு கிண்டல் பண்ணுவேன் அவ அழ ஆரம்பிச்சிடுவா..இன்று நினைஹ்தாலும் சந்தோசமாத்தான் இருக்கு.

சோகமாக வருத்தமாக இருக்கும் போதுதான் தத்துவங்கள் மனதில் கிளம்பும் வந்த நாள் முதல் பாடல் இதற்குப்பொருந்தும் நலம் வாழ எல்லோரும் நல் வாழ்த்துக்கள் பாடல்தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் எனக்கும் பிடிக்கும்

"போனால் போகட்டும் போடா" இப்படி என் அண்ணனிடம் சண்டை வரும் போது தைரியமா பாடிடுவேன்.......(டா போட்டு பேசவோ திட்டவோ முடியாதுல்ல. அதான் இப்படி தத்துவப் பாடலை பாடிடுவேன்)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நான் ஒரு தத்துவம் சொல்லவா முயலும் வெற்றிபெறும் ஆமையும் வெற்றிபெறும் ஆனால் முயலாமை வெற்றி பெறாது

நாங்க அப்படில்லாம் நினைக்கலைப்பா நீங்க திருப்பூரா பணப்புழக்கம் அதிகம் உள்ள ஊர் சுற்றிலும் சுற்றுலாதளம் நிரைய இருக்கிரது நீங்க எங்கெல்லாம் போயிருக்கீங்க எந்த இடம் நல்லாருக்கு எங்களுக்கும் சொல்லுங்க ஆறு மனமே ஆறு வரிகளும் நல்லாருக்கும்

ஆஆஆஆ...... நீங்க கேட்டுட்டீங்க...... நான் என்னத்த சொல்ல..... திருப்பூர் வந்த மூன்று வருடங்களில் என்னவர் என்னை 6அ7 சினிமா, கோவை மற்றும் உள்ளூர் எக்ஸிபிஷன், 3 அ 4 முறை மருதமலை தவிர வேறு எங்கும் கூட்டிட்டு போகலை.... அவர் ரொம்ப பிஸியானவர்... ஐஸும் ரொம்ப குட்டி பொண்ணு என்பதால் வெளியூர் சென்றால் பாப்பாவுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் ரொம்ப டூர் செல்வதில்லை பா.... மற்றபடி வீக் என்டுக்கு குடும்ப சகிதமாக கண்ணன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர், பிக் பஸார், சென்னை சில்க்ஸ் சென்று பர்சேஸ் செய்து ஒரு ரவுண்ட் அடிப்பதில் சந்தோஷம் தான்......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

முஸ்லிம் வீடுகளில்தான் ஆணம் என்று சொல்வோம் இமா மஞ்ச்ள் பால் சொதி ஆணம் குழம்பு அனைத்தும் குழம்பு வகைகலே
பிரியா பெண்களுக்கு வீடைவிட்டு வெளியே கிளம்பினால் ஷாப்பிங்க் என்றால் சந்தோசம்தான் தேவையோ தேவைஇல்லையோ கண்டதும் வீடு வந்து சேர்ந்துவிடும் அதுவும் எக்சிபிசன் என்றால் சொல்லவே வேண்டாம்

திருப்பூர்ன்டாகேரளா பக்கமா அல்லது கோயமுத்தூர் பக்கமா

பனகல்கண்டு போட்டு பால் குடிங்கப்பா ...........
பழமொழி
நான் அடிகடி சொல்வேன் கோபத்தோடு எந்திரிக்கிரவன் தோல்வியோடுதான் உக்காருவன் என்று

உதவி செய்தால் உண்மையாக செய்
திருப்த்திஅடைவாய்

அன்புடன்
பல்கிஸ்

மேலும் சில பதிவுகள்