குந்தன் ஜூவல் மாடல்ஸ்

தேதி: July 19, 2011

5
Average: 4.6 (16 votes)

 

குந்தன் ஸ்டோன்
டாலர்
கியர் ஒயர்
கியர் லாக்
ரோப்
சிறிய வளையம்
குங்குரு
கோல்டன் மணி மீடியம் சைஸ்
முத்துமணி சிறியது, பெரியது
சக்கரி
கொக்கி
குரடு

 

குந்தன் ஸ்டோன் விதவிதமான நிறங்களிலும், வடிவங்களிலும் கிடைக்கிறது. விரும்பிய ஸ்டோனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கோல்டன் மணி ப்ளையினாக இல்லாமல் டிசைன் செய்யப்பட்ட மணியாக வாங்கிக் கொள்ளவும்.
கியர் ஒயரை முன்கழுத்திற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். ஒயரில் கியர் லாக்கை நுழைத்து ஒயரின் நுனியை மீண்டும் அந்த துளையிலே விட்டு குரடால் அழுத்திவிடவும். இப்போது ஒயரின் முனையில் சிறிய துளை போன்று இருக்கும். மற்றொரு முனை வழியாக ஒரு சக்கரி, ஒரு கோல்டன் மணி மீண்டும் ஒரு சக்கரி கோர்த்துக் கொள்ளவும்.
இரண்டு துளையுள்ள குந்தன் ஸ்டோன் இதனை டபுள் கார்னர் என்று கூறுவர். ஒரு வளையத்தில் 5 குங்குருவை கோர்த்து இந்த ஸ்டோனின் அடியில் உள்ள துளையில் மாட்டி வளையத்தை நெருக்கி விட்டு ஒயரில் கோர்த்து விடவும். இதேப்போல் இடதுப்பக்கத்தில் 12 குந்தன் ஸ்டோனை கோர்த்து விடவும்.
நடுவில் கற்கள் பதித்த பெரிய டாலரை கோர்த்து வலதுப்பக்கத்திலும் 12 குந்தன் ஸ்டோனை கோர்த்து முடிக்கவும். ஆரம்பத்தில் கியர்லாக் கோர்த்தது போலவே கடைசியிலும் கியர்லாக் கொண்டு முடிக்கவும். அந்த இரு துளையிலும் ஒரு சிறு வளையத்தை கோர்த்து கழுத்திற்குரிய ரோப்பை அதில் மாட்டி விடவும்.
தோடு செய்வதற்கு தேவையான அளவு கியர் ஒயரை எடுத்து அதில் குங்குரு கோர்த்த மூன்று குந்தன் ஸ்டோனை கோர்க்கவும். இரு ஒயரிலும் ஒவ்வொரு கோல்டன் மணி கோர்த்து இரண்டையும் சேர்த்து கியர்லாக்கில் விட்டு அழுத்திக் கொள்ளவும். இரண்டு ஒயரையும் சேர்த்து ஒரு கோல்டன் மணி மட்டும் கோர்த்து மீண்டும் கியர்லாக்கை கோர்க்கவும். அந்த ஒயரின் முனையை கியர்லாக்குள் உள்நோக்கி விடும்போது சிறிதளவு துளைவிட்டு லாக்கை அழுத்திவிடவும். இப்போது அந்ததுளையில் வளையத்தை கோர்த்து காது கொக்கிகளை மாட்டிவிடவும். வெளியில் ஒயர் நீட்டி இருந்தால் நறுக்கிவிடவும்.
மேலே செய்த நெக்லஸ் போலவே டபுள் ஸ்டோன் உள்ள குந்தனில் செய்தவை. மேல் வெள்ளைநிறமும், கீழே சிவப்புநிற கற்களும் கொண்டது.
பெரிய டாலருக்கு பதிலாக சிறிய டாலர் கோர்த்து செய்தவை.
முத்து மாலை நெக்லஸ்க்கு மேட்சிங் தோடு செய்வதற்கு நான்கு துளையுள்ள சிவப்புநிற குந்தன் ஸ்டோனின் கீழ் வளையத்தை கோர்த்து அதில் டபுள் ஸ்டோன் பதித்த குந்தனை கோர்க்கவும். அதன் கீழ் ஒரு வளையத்தில் மெரூன்நிற குங்குருவை கோர்த்து வளையத்தை நெருக்கிவிடவும். மற்றொரு தோடையும் இதுப்போல் செய்து காது கொக்கிகளை மாட்டி வைக்கவும்.
ஒரு வளையத்தில் கழுத்துக்கு தேவையான அளவு கியர் ஒயரை இரண்டாக எடுத்துக் கொண்டு முடிச்சுப்போட்டு கொள்ளவும். சமோசா லாக் போன்று செவ்வக வடிவில் மூன்று துளையுள்ள ஸ்டோனின் நடுத்துளையை விட்டுட்டு மற்ற இரண்டிலும் ஒயரை விட்டு கோர்த்து வைக்கவும். இரண்டு ஒயரிலும் சிறிய கோல்டன் மணி, ஐந்தைந்து மீடியம் சைஸ் முத்துமணியை கோர்க்கவும். அடுத்து முதல் வரிசையில் மட்டும் ஒரு கோல்டுமணி, மற்றொரு ஒயரில் இரண்டு கோல்டு மணி, அடுத்து டபுள் ஸ்டோனை கோர்த்து வைக்கவும்.
இதேப்போல் இன்னும் ஆறு வரிசை வருவதுப்போல் கோர்த்து முடிக்கவும். சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த நெக்லஸ்.
முன் கழுத்திற்கு தேவையான அளவு கியர் ஒயரை எடுத்து நுனியை கியர் லாக்கில் விட்டு குரடால் அழுத்தி விடவும். இரண்டு சிறிய முத்து, ஒரு நீலநிற குந்தன் ஸ்டோன் என்று மாறி மாறி கோர்க்கவும். இடது பக்கத்தில் 13 ஜோடி முத்து, 12 குந்தன் ஸ்டோனை கோர்த்து வைக்கவும்.
இந்த நெக்லஸ்க்கு டாலர் இதே நிறத்தில் கிடைத்தால் வாங்கி அப்படியே கோர்த்துக் கொள்ளலாம். இல்லையேல் ஒவ்வொரு நீலநிற குந்தன் ஸ்டோன் ஓரத்தில் பெவி ஸ்டிக்கை தடவி படத்தில் உள்ள டாலர் போல் ஒட்டி வைக்கவும். நல்ல வலுவாக ஒட்டிக் கொண்டதும் அதன் நடுவில் ஒரு முத்தை வைத்து காயந்த பின் கியர் ஒயரில் கோர்த்து விடவும்.
இடதுப்பக்கத்தில் முத்துமணி, குந்தன் ஸ்டோன் கோர்த்தது போலவே வலது பக்கத்திலும் கோர்த்து முடிக்கவும்.
இதற்கு பொருத்தமான தோடு செய்ய டாலர் செய்தது போலவே இரண்டு ஜோடி செய்து நடுவில் உள்ள குந்தனின் மேல் துளையில் ஒரு வளையத்தை கோர்த்து காதுக் கொக்கியை மாட்டி விடவும்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த குந்தன் ஜூவல் மாடல் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்பநாளைக்கு பின் வரும் படைப்பு போல அண்ணி, அழகா பண்ணி காட்டி இருக்கீங்க. நீங்க தேர்தெடுத்து இருக்கும் குந்தன் மணிகள் கலர் சான்ஸ் இல்ல, அவளோ அழகா இருக்கு.

நெக்லஸ் அருமை, அதை விட அதன் கம்மல்கள் எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு அண்ணி, அதனால் அது எனக்கு தான் சொந்தம் :-)
அப்படியே பார்சல் பண்ணிடுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சம சூப்பரா இருக்குங்க எல்லாமே!!! எல்லாமே கலர்ஸ் சூப்பர், மாடலும் சூப்பர். ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கு. அதை போட்டே ஒரு போட்டோ இணைத்திருக்கலாம் ;) மிஸ்ஸிங். வெரி கியூட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kundan jewal set is super. your work is very nice. keep it up .regards.g.gomathi.

அன்புள்ள செண்பகா மேடம், எப்படி இருக்கீங்க?
உங்க குந்தன் ஜுவல்ஸ் மிகவும் அருமை. நல்ல டிசைன்ஸ். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுவும் அந்த முத்து மாலை சூப்பர். வாழ்த்துக்கள்..

நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

எல்லா டிஷைனும் ரொம்ப அருமையா இருக்கு...!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அடடா! என்ன அழகு! ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.

முதலாவது செட் சூப்பர். கடைசி செட்டில் டாலர், தோடு செய்திருக்கிற விதம் அருமை. நடுவில் உள்ள சிவப்பு செட் பளிச். முத்து செட்... //சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்...// சின்ன மேடத்தோடதா? ;) நான் அடுத்த தடவை வரப்ப கடைசி செட்ல எனக்கு ஒரு செட் ரெடியா இருக்கணும். ;)

ஆனாலும் கோபம். ;( நான் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன். முதலாவது ஆளாகக் கருத்துச் சொல்ல. தூங்கட்டும் என்று பார்த்திருந்து போட்டு இருக்கிறீங்க. போன தடவை வனி குறிப்பும் இப்பிடித்தான் ஆச்சு. ;)

‍- இமா க்றிஸ்

அழகு கொள்ளை அழகு......நாண் பார்த்துக் கொள்ள மட்டும் தான் முடியும். செய்துப் பார்க்க எங்கே எல்லா பொருட்களும் கிடைக்காது. இந்த மாதிரி குந்தன் வொர்க் வைத்த செட் எல்லாம் இங்கே வாங்கப் போனால் குறைந்தது முப்பது நாற்ப்பது டாலராவது ஆகும். ரெண்டு பெரும் சேர்ந்து இங்கே பிசினஸ் செய்யலாமா ;) வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செண்பகா மேடம்,

அழகா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நேர்த்தியா அழகா அம்ஸமா இருக்கு. கலர்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

4 செட் அணிகளுமே மிக அழகாக நேர்த்தியாக இருக்கு ஆனால் நீங்கள் ஒவ்வொன்றிர்கும் ஆகும் செலவு எவ்வளவுன்னு சொல்ல்வே இல்லயே

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க கொள்ளை அழகு அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

செண்பகா,
முகப்பில் ஒரே ஒரு செட்.இங்கு வந்து பார்த்தால் நான்கு செட்.எல்லாமே அழகா செய்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

சுகந்தி எப்படி இருக்கீங்க? இப்போலாம் நேரமே கிடைக்க மாட்டுது அதான் எதுவும் செய்ய முடியல. பாராட்டிற்கு ரொம்ப நன்றி. //நெக்லஸ் அருமை, அதை விட அதன் கம்மல்கள் எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு அண்ணி, அதனால் அது எனக்கு தான் சொந்தம் :-)
அப்படியே பார்சல் பண்ணிடுங்க// அட்ரஸ் அனுப்புங்க அனுப்பி வைக்கிறேன் சுகந்தி.

ரொம்ப சாரி வனிதா உங்க திருமண நாளுக்கு வாழ்த்து சொல்லனும் என்று முதல் நாளே நினைத்து இருந்தேன். அன்னைக்குனு திடீர் வேளை காரணமாக ஊருக்கு போய்ட்டோம்(ஊருக்கு போனதால மறந்துட்டேன்) அதான் பேச முடியல ரொம்ப ரொம்ப சாரி. கண்டிப்பா நாளைக்கு பேசுறேன்(இன்னைக்கு கொஞ்சம் வேலை). தப்பா நினைக்க வேண்டாம் சாரி. பாராட்டிற்கு ரொம்ப நன்றி. //அதை போட்டே ஒரு போட்டோ இணைத்திருக்கலாம் ;// செய்த உடனே தெரிஞ்சவங்க வாங்கிட்டாங்க. இப்போ அது என்னிடம் இல்லை. ஓருத்தவங்களுக்கு கொடுத்தது தப்பா போச்சு அதே போல் நிறைய பேர் கேக்குறாங்க அதான் முடிந்தளவு செய்து கொடுக்குறேன். நிறைய திங்ஸ் இங்கே கிடைக்க மாட்டுது அதான் பிரச்சனை.

ரொம்ப ரொம்ப நன்றி கோமதி

சசி எப்படி இருக்கீங்க? நான் ரொம்ப நல்லா இருக்கேன். பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ரொம்ப நன்றி ஆமினா. எப்படி இருக்கீங்க?

///அடடா! என்ன அழகு! ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு./// அம்மா ரொம்ப ரொம்ப நன்றி.
//நான் அடுத்த தடவை வரப்ப கடைசி செட்ல எனக்கு ஒரு செட் ரெடியா இருக்கணும். ;)// கண்டிப்பா:-)
//சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்...// சின்ன மேடத்தோடதா? ;)/// இல்ல அம்மா. இப்போ போட்டா அவ ஓழுங்க வைச்சுக்க மாட்டுறா ஒரே இழு இழுத்து பிச்சிடுவா. ஆனா செஞ்சதும் அவளுக்குதான் முதலில் வைத்து பார்த்தேன் பாப்பாக்கு ரொம்ப ஆசை போட்டுக்க போட்டதும் ரொம்ப சந்தோஷ பட்டா. பெண் குழந்தைளே அதான் ரொம்ப மேக்கப் எப்ப பாத்தாலும், அவளுக்கு பண்றது இல்லாம எனக்கு, பாபுக்கும் பண்ணி விடுறா. சம க்யூட்டா பண்றா அம்மா, ரொம்ப ஆசையா ஜாலியா இருக்கு.

ஹாய் லாவண்யா எப்படி இருக்கீங்க? இந்தியா வரப்போ சொல்லுங்க நான் வாங்கி வைக்கிறேன் பிறகு செய்து பாருங்க. //ரெண்டு பேரும் சேர்ந்து இங்கே பிசினஸ் செய்யலாமா ;) // ஓகே நான் ரெடி எனக்கும் இதுபோல் ஒரு ஆளு தேவைதான் வாங்க சீக்கிரம் பிஸ்னஸ் பண்ண:-)

ரொம்ப நன்றி கவிதா

ரம்யா எப்படி இருக்கீங்க. பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ரபியா, இளையா பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ரொம்ப நன்றி ஹர்ஷா

senbagababu

ஹாய் செண்பகா உங்க குந்தன் ஜுவல் மாடல்ஸ் எல்லாமே ரொம்ப அழகா இருக்குங்க...கலரும் அழகான கலரா தேர்ந்தெடுத்து இருக்கீங்க...வாழ்த்துக்கள் செண்பகா...

unga crafts ellamae nalla iruku. indha necklaces with earings supera iruku.
idhelam epadi seireenga.
sondha creativity ya illa kathukiteengala.

Thanks akka. ithu rombha nalla iruku nanum ithai try pannen. enga veetula ellarum paaratinanga. thanks. thank you very mush. this is very beautiful

where do we get the required things for making earrings and necklace

your product is very beautiful. may i know where can i find those materials? i am very interested to design jewels and cloths n different things. but i dont know about the materials. this is my problem, thatsy i am asking you freely, dont mistake me....

Anbudan Kanchana Raja

enaku suyama tholil seiyya asai paduren.. enaku fashion jewels eppadi seiyarathunu solli thareengala please. pls sollunga. en mail id: hajiamin27@gmail.com

Naan Rajapalayam. kundhan jewels meterials enga kidaikum nu sollunga akka. pls. evloselavu aagum? I am very interested & ur colour selection is very nice. pls reply me. pls pls