ஊரு பாஷை.... ஊரு பேச்சு வழக்கு

..

?என்னப்பா சொல்றீங்க? என்ன கேக்க வாரீங்க? எதைப்பத்தி தெரிஞ்சுக்கனும்?ஊரு பாஷைன்னா

sorry மன்னிக்கவும்.
என்னிடம் யாரும் பேசமாட்டாங்கன்னு நெனைத்து அத அழித்து விட்டேன்.
அதாவது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பேச்சு வழக்கு இருக்கும் அதன் படி எங்க ஊருல பேச்சு வழக்கு
மாலை நேரம்- பொழுசாய
காலை நேரம்- கோழிக்கூபுட
இபடிஎல்லம் பேசுவாங்க. அது போல உங்க ஊரில் பேசும் பேசு வழக்கு பட்றி பேசத்தான் இந்த இழை ஆரம்பிதேன்

அன்புடன் அபி

அபி எப்படி இருக்கீங்க?யாரும் உங்கள்ட பேசமாட்டாங்கனு ஏன் நினைக்கறீங்க.எல்லாரும் பேசுவங்க..USல எங்க இருக்கீங்க..சொல்லுங்க

Kalai

//என்னிடம் யாரும் பேசமாட்டாங்கன்னு// ஏன் நினைச்சீங்கள்? அதெல்லாம் கதைப்பாங்கள், பொறுங்கோ. இப்ப... முதல் மேல அழிச்ச இடத்தில திரும்ப தட்டி வையுங்க. இல்லாட்டி டக்கெண்டு பார்க்க ஒண்டும் விளங்குதில்ல.

‍- இமா க்றிஸ்

நல்லா யோசிச்சி சொல்லுங்க....உங்ககிட்டே யாரும் பேசினது கிடையாதா? சும்மா சொன்ன உம்மாச்சி கண்ணை குத்தும்.....சரியா? இப்போ நல்ல பிள்ளையாட்டம் மேலே என்ன எழுத நினைத்தீங்களோ அதை எழுதுங்க பார்க்கலாம் :) இங்கு அறுசுவையில் இவர்களிடம் தான் பேசுவோம் என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. சுவாரிசியமாக இருந்தால் அதிகம் பதிவுகள் இருக்கும். அதுவும் இல்லமால் இழையில் பதிவிடுவோரை ஊக்குவித்தால் பலரும் வந்து மேலும் பதிவு போடுவார்கள். இது தான் தாரக மந்திரம்.

உள்ளி - சின்ன வெங்காயம்
பல்லாரி - பெரிய வெங்காயம்
நுள்ளி - கிள்ளுவது
லந்து - சரியான அர்த்தம் தெரியவில்லை...ஆனால் மதுரை பக்கத்தில் அடிக்கடி சொல்லுவார்கள். யாரவது வம்பிழுத்தால் சொல்லுவார்கள்.
ப்லேஷர் - கார்
ஆப்பை - கரண்டி
சீனா சட்டி - வாணலி
சிலுக்கொலி - கேசத்தில் சிக்கு எடுப்பது

இன்னமு இருக்கு....யோசித்து சொல்கிறேன்...

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா நீங்கள் சொல்லி இருக்கும் சில வார்த்தைகளை பார்த்தா நெல்லை மாதிரி இருக்கே...நீங்க திருநெல்வேலியா.?

Kalai

புகுந்த வீடு திருநெல்வேலி பக்கம் தான்....உங்களுக்கு?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கும் புகுந்தவீடு நெல்லைதான்..அம்மா வீடு சென்னை.திருநெல்வேலில எங்க?

Kalai

யாரும் பேசமட்டாங்கனு இழையை ஆரம்பிச்ச அபிராமி எங்க போனீங்க..இங்க நாங்க பேசிட்ருக்கோம் உங்கள கானும்.
அபிராமி அபிராமி..

Kalai

முதலில் இங்கு அரட்டை அடித்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் அடிக்கடி கேட்ட ஒரு வாசகம் " பௌமான காக்கா பறந்துக்கிட்டே முட்டை போடுமாம்" உங்களுக்கே அர்த்தம் தெரிந்திருக்கும்.
துப்ட்டி - போர்வை
முப்பேட் - தட்டை
மேலும் வருவேன்.....

கலா
ரொம்பவே பர்சனல் டீடைல்ஸ் இங்கே வேண்டாம் ப்ளீஸ்....இப்போயெல்லாம் அறுசுவையில் ஊரு பேரு தெரியாதவங்க எல்லாம் ஆளாளுக்கு மெயில் அனுப்புறாங்க.....அதனால தான்...என்னை தப்பாக எடுத்துக்க வேண்டாம் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்