ஜர்தோஸி தோடு

தேதி: July 22, 2011

5
Average: 4.6 (14 votes)

 

கோல்டுநிற ஜர்தோஸி
எம்.சீல்
பெவிக்கால்
கோல்டுநிற கம்பி
காது கொக்கிகள் - 2

 

தோடு செய்ய தேவையானவற்றை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
சிறிய கோலிக்குண்டு அளவு எம்.சீல் இரண்டையும் சம அளவில் எடுத்து கையில் பவுடரை பூசிக் கொண்டு ஒன்றாக பிசைந்து வைக்கவும்.
அதனை சரிப்பாதி துண்டாக எடுத்து உருண்டை வடிவில் உருட்டி வைக்கவும். 4 செ.மீ அளவுள்ள கோல்டுநிற கம்பியை இரண்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அவற்றை இரண்டாக மடித்து மேல் பக்கம் சிறிய துளை இருப்பது போல் செய்து விட்டு அடிப்பக்கம் இரண்டு முனையையும் முறுக்கிக் கொள்ளவும்.
இந்த கம்பியை எம்.சீல் காய்வதற்கு முன் நடுவில் சொருகி விடவும். நன்கு காய்ந்ததும் இறுகி கல் போன்று இருக்கும்.
பின்னர் ஒரு உருண்டையை எடுத்து மேல் கம்பியை பிடித்துக் கொண்டு, கால் பாகம் அளவுக்கு பெவி ஸ்டிக்கை தடவவும்.
ஜர்தோஸியை கம் தடவிய இடத்தில் வைத்து சுற்றிக் கொண்டே வரவும். சிறிது காய்ந்ததும் மீதி இடங்களில் பெவி ஸ்டிக்கை தடவி ஜர்தோஸியை சுற்ற ஆரம்பிக்கவும்.(முழுவதும் கம் தடவிக்கொண்டு சுற்றலாம். 2,3 வரிசை ஜர்தோஸியை சுற்றி முடித்ததும் ஜர்தோஸி சுற்றிய பகுதியை இரண்டு விரலால் பிடித்துக் கொண்டு மெதுவாக சுற்றவும். இல்லையெனில் ஒன்று மேல் ஒன்று எழும்பிக் கொள்ளும்.)
எம்.சீல் உருண்டை முழுவதும் இதுப்போல் ஜர்தோஸியை ஒட்டி முடித்து காயவிடவும். பின்னர் அந்த வளையத்தில் கொக்கியின் அடியில் உள்ள வளையத்தை விலக்கிவிட்டு தோட்டில் மாட்டி வைக்கவும்.
மற்றொரு எம்.சீல் உருண்டையிலும் இதுப்போல் செய்யவும். சிம்பிளான ஜர்தோஸி தோடு ரெடி. ஜர்தோஸி பலநிறங்களில் கிடைக்கிறது. ஆடைக்கு ஏற்றாற் போல் விரும்பிய நிறத்தில் செய்து அணிந்துக் கொள்ளலாம். எம்.சீல் இல்லையென்றால் சாக்பவுடரில் பெவிக்கால் கலந்து இதுப்போல் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழ...கா இருக்கு. சூப்பர் டீம். ஜர்தோஸி... தேட வேண்டும். கிடைத்ததும் செய்து காதுல மாட்டிருவேன். //ஆடைக்கு ஏற்றாற் போல் விரும்பிய நிறத்தில்// அப்போ... கலர் கலரா கிடைக்குதா?

முதல் ஆளா கமண்ட் போட வேணும் என்று தூங்காம இருந்தேன். ;)

யார் கை அது! பத்மாவோடதா, ரேவதியோடதா? மருதாணி நல்லா இருக்கு.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா சூப்பரா இருக்கு டீம். எம்.சீல் ல பண்றதால கனமா இருக்காதா by Elaya.G

ஜர்தோசி தோடு சூப்பர். வாழ்த்துகள் அறுசுவை டீம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் அறுசுவை டீம் ஜர்தோஸி தோடு ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள் டீம்....

சிம்ப்லி சூப்பர்ப்....

ரொம்ப அருமையா இருக்கு.....இங்கே இந்த பொருட்கள் எல்லாம் கிடைத்தால் கண்டிப்பாக செய்து பார்ப்பேன்.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தேவையான எல்லாம் கையில் இருக்கு... அவசியம் செய்துட்டு உங்களுக்கும் படம் அனுப்பிடுறேன் ;) அத்தனை அழகா இருக்கு. எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்கன்னு தான் புரியல. அந்த டெக்னிக்கை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பா.... சம கியூட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டீம்
தோடு மிகவும் அழகாக உள்ளது. பிடித்திருக்கும் கையும் அழகு.

டீம், எனக்கும் இது மிகவும் பிடித்து இருக்கிறது.

thanks to arusuvai team for giving a beautiful earing. its simply superb

மிகவும் அழகான கம்மல்.ஆனால் கம்மல் ஹூக் எங்கே கிடைக்கும், அதேபோல் நீங்கள் கூறி உள்ள தேவையான பொருட்கள் எல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கும் என்ற விவரமும் தெருவிதல் மிகவும் நன்றாக இருக்கும்.

its very cute& simple method i like it very much