கோழி முட்டை

வணக்கம்

நாட்டு கோழி முட்டை மொத்தமாக வங்கும் இடம் ?

எத்தனை நாள் கேட்டுப்போகமல் இருக்கும்?

நன்றி!

1. சொல்லத் தெரியவில்லை.
யாராச்சும் வளர்க்கிறவங்க இருந்தால் மொத்தமாக வாங்கலாம். ப்ரீ ரேஞ்ச் ஃபாம் ஏதும் பக்கத்தில் இருக்கிறதா?
2. சேவல் இல்லாம வளர்ந்த கோழிகளின் முட்டைகள் (கருக்கட்டாதவை) அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இங்கு ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும். ஆனால்... இந்தியா பற்றி சொல்லத் தெரியவில்லை. ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

அதிகமான இடங்களில் நாட்டுக்கோழி முட்டைன்னு ஏமாத்துராங்க ஓடு கனமாக இருக்கும் உள்லே ஆரஞ்ச் மஞ்சள் நிறத்தில் இருக்கனும் நான்கு நாட்கள் முதல் ஒருவாரம் வரையிலும் இருக்கும் வெயில் காலத்தில் சீக்கிரம் கேட்டுப்போய்விடும் பிரிட்ஜில் வைத்தாஅல் கெட்டுப்போகாது சுற்றியுள்ள கிராமத்தில் கேட்டுப்பார்க்கவும்

Thanks

நாட்டு கோழி முட்டையை பொறுத்தவரை நன்கு தெரிந்த இடங்களில் வாங்குங்க. இப்போல்லாம் பண்ணைகோழி முட்டைகளிளேயே நாட்டு கோழி முட்டை போல உருவாக்கி ஏமாற்றுகிறார்கள். அதிக எண்ணிக்கையில் மொத்தமாக தருகிறேன் என்று சொன்னால் இடத்திற்க்கு போய் பார்த்து வாங்குங்க.
நாட்டு கோழி மாதிரியே இருக்குற பண்ணை கோழிகள் இப்போ வந்தாச்சு. கோழி விற்பனை கடைகள்ல பார்த்தீங்கன்னா நாட்டு கோழிகள்னு சொல்லிட்டு கூண்டுல வைச்சுருப்பாங்க. அதெல்லாம் பெரும்பாலும் நாட்டு கோழிகளாக இருக்காது.

அன்புடன்
THAVAM

;) ஏமாத்துறது பற்றித் தெரியல தவமணி. ஆனால் நான் வளர்த்து இருக்கிறேன்.

நாட்டுக்கோழிகளை கூண்டுல அடைச்சு கோழித்தீவனம் போட்டு வளர்த்தோம். பச்சை இலை போடாவிட்டால் கரு சிவப்பாக வராது. அது போல ஃபாம் கோழிக்கும் நிறைய கீரை கொடுத்தால் கரு சிவக்கும்.

ஓட்டின் நிறம் எப்போதும் கோழி இனத்தைப் பொறுத்துத்தான் வரும். உணவில் கால்சியம் போதாமல் இருந்தால் ஓடு மெல்லிதாக இருக்கும். சிப்பித்தூள் சாப்பிடக் கொடுத்தால் சரியாகிவிடும்.

//அதிக எண்ணிக்கையில் மொத்தமாக தருகிறேன் என்று சொன்னால் இடத்திற்கு போய் பார்த்து வாங்குங்க.// அதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

may be five days.

மேலும் சில பதிவுகள்