முருங்கை புளிக்குழம்பு

தேதி: July 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (18 votes)

 

சின்ன வெங்காயம் - 100 கிராம்
முழு பூண்டு - ஒன்று
தக்காளி - மூன்று
உருளை - ஒன்று
முருங்கைக்காய் - இரண்டு
புளி - (இரண்டு எலுமிச்சை அளவு) தேவையான அளவு
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு குழிக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது


 

புளியை ஊற வைத்து அதனுடன் தக்காளியை கரைத்து வைக்கவும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைக்கவும். உருளையை துண்டுகளாக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, முருங்கை, உருளை எல்லாவற்றையும் சேர்க்கவும்.
நன்றாக கிளறி விட்டு மிளகாய் தூள் காரம் போகும் வரை கொதிக்க விடவும்.
குழம்பின் மேலே எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
சாதத்துடன் போட்டு சாப்பிட சூடான, சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம கலர்... சம வாசம்... பார்க்கவே அழகா இருக்கு :) செய்துட்டு வாரேன்... வெயிட் பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி அருமையான புளிக்குழம்பு.சூப்பரா இருக்குப்பா...
நானும் இதே முறையில்தான் செய்வேன் கொஞ்சம் தேங்காய் விழுது சேர்ப்பேன்,உருளை,தக்காளி சேர்க்கமாட்டேன்.. இந்த குழம்புக்கு கருவடகம் போட்டு தாளித்தால் ரொம்ப நல்லாருக்கும்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் குமாரி,

மிக அழகாயிருக்கு. நான் தேங்காய் சேர்த்து செய்வேன். உருளை கிடையாது. இப்படி ஒரு முறை ட்ரை செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

புளி குழம்பில் உருளை சேர்த்து செய்ததில்லை

அருமையான குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Enakku piditha murungai kulambu supera irukku

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வனி செய்துட்டு வாங்க காத்திருக்கேன்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஸ்வர்ணா நானும் தேங்காய் சேர்ப்பேன்..அது வேற மாதிரி சுவை.கருவடகம் சேர்த்தும் சிய்வேன் அதுக்கு கத்திரிக்காய் சேர்ப்பேன்.ஒன்னொன்னும் ஒன்னொரு சுவையில் இருக்கும்.வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஸ்வர்ணா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பவி இம்முறையில் செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கள்..வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஆமினா மிக்க நன்றி தாங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..நீங்களும் உருளை கிழங்கு சேர்க்க மாட்டிங்களா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்களுக்கு பிடித்த குழம்பை செய்ததில் மகிழ்ச்சி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மீனா.

***********************************************************************************
அட என்ன இங்க யாரும் உருளை கிழங்கு சேர்த்து செய்ய மாட்டிங்களா.இம்முறையிலும் ஒரு முறை செய்து பாருங்க. நன்றாக இருக்கும்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Arumayana kurippu

ஹாய் குமாரி இன்னைக்கு இதான் பண்ண போகிரேன்
பார்கவே அழகா இருக்கு..வாசம் ஹய்தராபாத்க்கு வருது:)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

முருங்கைனாவே ருஸி..
அதிலும் புளிக் குழம்பு சொல்லவே வேண்டாம்.. சூப்பர்
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குமாரி,
நானும் இதேமுறையில் தான் செய்வேன்.கூட ஒரு கத்தரிக்காயும் சேர்த்து செய்வேன்.சுவையான குறிப்பு.படங்களும் சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்.

குமாரி,

இங்கே வரைக்கும் வாசம்!!!வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நானும் இதேமுறையில் தான் செய்வேன். அழகா இருக்கு வாழ்த்துக்கள்.

எனக்கு பிடித்த முருங்கை குழம்பு சூப்பரா இருக்கு.ஆமினாவை வாழ்த்த அங்கே தமிழில் மாற்றினேன் அதன் இங்கும் தமிழில் பதிவிட்டேன் வாழ்த்துக்கள் குமாரி

ஹாய் ஜானு தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பானு தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ..செய்து பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரம்யா தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ..செய்து பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் அன்பு உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..நானும் உருளைக்கு பதில் கத்திரிக்காய் சேர்ப்பேன்,அது வேற சுவையா இருக்கும்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் கவி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.கடல் கடந்து வருதா வாசம்..முருங்கை காய் கிடைக்காதா அங்கே?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் கெளசல்யாமீனா தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி,

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

புளி குழம்பில் உருளை சேர்த்து செய்ததில்லை நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு நாளைக்கு முருங்கைக்காய் புளிக்குழம்புதான் :-)

KEEP SMILING ALWAYS :-)

பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு நாளைக்கு முருங்கைக்காய் புளிக்குழம்புதான் :-)

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் பாத்திமா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் நாகா செய்து பார்த்துட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்...வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பார்க்கவே அழகா இருக்கு .....நானும் இப்பிடி செய்றனான் ...
ஸ்ரீ லங்கா விலையும் முருங்கை காய் உருளை கிழங்கு சேர்த்து இப்படித்தான் குழம்பு வைப்போம் .. ஆனா தக்காளி போடுறம் தானே .. அதுவே புளிப்புதன்மை கொடுக்கும் இல்லையா ? புளித்தண்ணி வேறு விட வேண்டுமா /. இது என் டவுட் ....

Murungai pulikulambu parkave sapdanumpola irukku

ஒரு வார்த்தை கவிதை "நீ"

mmmmmm :-) superb taste.. soooooo yummy...

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் ஜனனி புளி தண்ணி சேர்ப்பதால் புளிப்பு ஜாஸ்தி ஆகாது அதுக்குதான் காய் சேர்க்கிறோம், இம்முறையில் செய்து பார்த்துட்டு சொல்லுங்கள்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் லக்ஷ்மி வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் நாகா செய்து பார்த்துவிட்டு மறக்காமல் பின்னூட்டம் தந்ததற்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிகவும் நன்றாக இருந்தது...
குமாரி உங்க உருளை, முருங்கை புளிக்குழம்பு
செய்தேன். சுவையான குறிப்பிற்கு நன்றி.

ரொம்ப சந்தோசம் உமா ,செய்து பார்த்துவிட்டு மறவாமல் பின்னூட்டம் தந்ததற்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,
முருங்கை,உருளைகிழங்கு புளிக்குழம்பு செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.இனி அடிக்கடி செய்வேன்.குறிப்புக்கு நன்றி.

நன்றி அன்பு இனி அடிக்கடி செய்து சாப்பிடும் போது என்னையும் நினைதுக்கோங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

very nice,i tried last week itself and my son and husband liked very much
thank you..

இபோதான் மிளகு குழம்பு பார்த்தேன்.இங்கே முருங்கை புளிகுழம்பும் அருமை வாழ்த்துக்கள்.

செய்து பார்த்துடிங்களா மகனுக்கும் வீட்டுக்கரர்க்கும் பிடித்ததா மிக்க மகிழ்ச்சி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

விஜயா மிக்க நன்றி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்க குழம்பை செய்தேன்
மிகவும் சுவையாக இருந்தது.. நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ரம்யா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪