தேங்காய்பால் மீன் சால்னா

தேதி: June 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - அரை கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 3 கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - ஒன்று
மல்லிக்கீரை - ஒரு கட்டு
எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் பாதி பூண்டையும், வெங்காயத்தையும் நசுக்கிக் கொண்டு, தக்காளியையும் மீதியுள்ள பூண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு தாளித்து, சிவந்து வரும் போது வெந்தயம் போட்டு, வாசம் வந்தவுடன் மிளகாய் தூள் போட்டு, நறுக்கி வைத்துள்ள தக்காளியையும், பூண்டையும் போட்டு வதக்க வேண்டும்.
வதங்கியவுடன் தேங்காய்ப்பாலில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகு சீரகத்தூள், உப்பு போட்டு, பச்சை மிளகாயை அதில் உடைத்து போட்டு தாளித்ததில் ஊற்றி, மீன் துண்டுகளையும் போட்டு வேகவிட வேண்டும்.
வெந்தவுடன் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து ஊற்றி, மல்லிக்கீரையையும் நைசாக நறுக்கி போட்டு இறக்கி விடலாம்.


இதற்கு சுரும்பு மீன், வாழை மீன் போன்ற இனிப்புசுவை கூடுதலான மீன்கள் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் பஜீலா மீன் குருமா புளி இல்லாமல் கேட்கிறீர்களா?கறி குருமா டைப்பான்னு தெரியல இரண்டு முன்று எடுத்து தரேன் அதில் எது உங்களுக்கு சுலபமா இருக்கோ அதை செய்யுங்கள்
http://www.arusuvai.com/tamil/node/1741

ஜலீலா

Jaleelakamal

.ஹாய் ஜலீலா அக்கா ரொம்ப நன்றீ.Be Faith in God,he will Guide us the Right Path

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

டியர் ஜலீலா அக்கா மீன் குருமா புளி இல்லாமல் .Be Faith in God,he will Guide us the Right Path

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேடம் .நான் இந்த குறிப்பை செய்தேன் நல்லா சுவையாக இருந்தது. மிக்க நன்றி.
*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவார்.*
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஜலீலா மேடம் . நான் நீங்கள் எடுத்து தந்த இந்த குறிப்பை செய்தேன் நல்லா சுவையாக இருந்தது. மிக்க நன்றி.
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவார்.
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மீன் துன்டுகளை உப்பு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊரவைத்து, மீனை பொன்னிரமாக வருத்து, நான் செய்தேன். நல்ல டேஸ்டாக இருந்தது.
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவார்.
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பின்னூட்டத்திற்கு நன்றி ஃபஜீலா! நீங்கள் சொல்வது போல் மீனை மசாலா போட்டு பொன்னிறமாக வறுத்தும் இந்த சால்னா செய்யலாம். அது இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்! அதை பொரித்த மீன் சால்னா என்பார்கள்.