பட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா??”

தோழிகளே, உங்களுக்காக பட்டியை துவக்கிவிட்டேன்.

பட்டிமன்றம் இந்த வாரம்

*******************************************************
பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா??
*******************************************************

தலைப்பை தந்த பட்டியின் திலகம் வனி’கு நன்றிகள்.

பட்டியின் விதிமுறைகள்:

பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

அரட்டை... நிச்சயம் கூடாது.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

தோழிகளே, பட்டியை துவக்கிவிட்டேன். நடுவர் அரியணையில் என்னை அமர வைத்து, தலைப்பையும் தந்த வனி’கு நன்றி:)

எல்லா பதிவுகளுக்கு தொடர்ச்சியாக என்னால் பதிலளிக்க இயலாவிட்டாலும் முடிந்த போது வந்து அனைத்து பதிவுகளுக்கும் பதில் போடுகிறேன். கண்டிப்பாக எல்லா பதிவுகளுக்கும் பதில் பதிவு போட்டுவிடுவேன். தாமதமாக பதிவு போடுவதற்கு என்னை மன்னிக்கவும்.

தீர்ப்பு, ஞாயிறு இரவு இல்லையென்றால் திங்கள் இரவு வரும். உங்கள் வாதங்களை பதிவு செய்யுங்கள்.

நன்றி.

அன்புடன்
பவித்ரா

அன்பு நடுவருக்கு வாழ்த்துக்கள்.

சுவையான தலைப்பில்,சூடான வாதங்களோடு பட்டி சிறப்பாய் நடைபெற

நடுவருக்கு வாழ்த்துக்கள்.நல்லதொரு தலைப்பை தந்த வனிக்கும்,அதை

தேர்ந்தெடுத்த உங்களுக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்

நடுவரே.பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும்

வாழ்த்துக்கள்,சிறப்பாக எடுத்துச் செல்லவிருக்கும் நடுவருக்கு மீண்டும்

வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

அழைப்பை ஏற்று பொருப்பை ஏற்ற நடுவருக்கு முதல் நன்றி :) என் மனம் மகிழ்ச்சியில் ஆட்டம் போடுது. நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்க... போதுமானது. எல்லார் பதிவுக்கும் பதில் போட நேரம் இல்லை என்றால் என் பதிவுக்கு வேண்டுமானால் பதில் போடாமல் விட்டுடுங்கோ... நான் கோவிக்கவே மாட்டேன். :)

என் தலைப்பை தேர்வு செய்து இருக்கீங்க... அது அடுத்த மிகிழ்ச்சி. ரொம்ப நன்றி நடுவரே.

”பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டில் தான்” என்ற அணிக்கு தான் நம்ம வாதம் :)

வனிக்கு கை கொடுக்க வரவங்கலாம் சீக்கிரம் நம்ம அணிக்கு ஓடிவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தக்க சமயத்தில் பட்டியை தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்

என்ன கேள்வி இது நடுவரே.. பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிற்கே.. :)
சுதந்திரம் மட்டுமில்லை, செல்லம், குறும்பு, ஆட்டம்,பாட்டம் எல்லாமே இங்கே தான் ..

வாதங்களுடன் வெருவேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நல்ல தலைப்புதான்...வாழ்த்துக்கள் நடுவருக்கும் பட்டியின் தலைப்பை தந்தவருக்கும். கல்யாணம் வரைக்கும் ஜாலியா சுத்திக் கொண்டிருந்தவனுக்கு ஏழரை சனி [இல்லை இல்லை] ஜென்ம சனி பிடிச்ச கதையை விலா வாரியா எழுத சொல்றீங்க... எழுதுவோம். வாதங்களுடன் விரைவில்.

அன்புடன்
THAVAM

வாங்க நித்தி, முதல் ஆளாக பதிவு போட்டிருக்கீங்க, நன்றி. உங்க வாழ்த்துக்கும்ம் நன்றி.

வெறும் வாழ்த்து மட்டும் சொன்னா, செல்லாது செல்லாது, நடுவருக்கு வாதம் தான் முக்கியம். எந்த அணி என்று தேர்ந்தெடுத்து, சீக்கிரம் ஓடியாங்கோ!

அன்புடன்
பவித்ரா

மிக்க நன்றி வனி. உங்கள் மனதை ஆட்டம் போட வைத்ததில் மகிழ்ச்சி.

பிறந்த வீடு அணி உருவாக்கிவிட்டதே, தலையே பிறந்த வீடு பக்கமா!! புகுந்த வீடு காலி தான். எல்லார் பதிவுக்கு பதில் போடுவேன் வனி. உங்க பதிவை பார்த்தாலே கண்டிப்பா பதில் பதிவு போட தோன்றிவிடும்.

வாதத்தோடு வாங்க.

அன்புடன்
பவித்ரா

அடடே ரம்யா, வனி கட்சியா. ஜாடி கேற்ற மூடி மாதிரி, நீங்க தலைகேற்ற் தளபதி ஆயிற்றே. உங்கள் இருவருக்கும் ஈடு கொடுக்கும் எதிரணி உருவாகவேண்டும்:

//சுதந்திரம் மட்டுமில்லை, செல்லம், குறும்பு, ஆட்டம்,பாட்டம் எல்லாமே இங்கே தான் .. // அப்படி போடு, ஆரம்பமே இப்படியா!! இந்த பட்டியில் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

வாதத்தோடு வாங்க. வாழ்த்துக்கு நன்றி ரம்ஸ்

அன்புடன்
பவித்ரா

வாழ்த்துக்கு நன்றி அண்ணா.

அடப்பாவிகளா, கல்யாணத்தை ஏழரை’னா சொல்வது, நடக்கட்டும் நடக்கட்டும், ஆனா நீங்க எந்த பக்கம் என்று எனக்கு சரியா புரியலை. புகுந்த வீடு என்று தான் நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் வாதத்தோடு வாங்க.

அன்புடன்
பவித்ரா

தோழிகளே சீக்கிரம் வாங்க, எந்த பக்கம் உங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை வந்து வாதமாக சொல்லுங்கள்.

பலப்பரீட்சை நான் ரெடி, நீங்க ரெடியா?? சீக்கிரம் வாங்க.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்